காரணமே இல்லாமல் திடீர்னு இந்திய அணியில் என்னை கழற்றி விட்டுட்டாங்க – புலம்பும் இந்திய வீரர்

IND
- Advertisement -

இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் அஜிங்கிய ரஹானே ஒரு காலத்தில் இந்தியாவின் 3 வகையான கிரிக்கெட்டிலும் விளையாடி வந்தார். ஐபிஎல் தொடரிலும் கூட ஒரு கட்டத்தில் டாப் ஆர்டரில் ரன்களை விளாசக்கூடிய அதிரடி வீரராக இருந்த அவர் வரலாற்றில் ராஜஸ்தான் அணிக்காக கேப்டனாக கூட செயல்பட்டுள்ளார்.

rahane

- Advertisement -

இருப்பினும் கடந்த 2018க்கு பின்பு ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த தவறியதால் இந்திய வெள்ளைப் பந்து அணியில் இருந்து கழற்றி விடப்பட்ட அவர் அதன்பின் தற்போது டெஸ்ட் கிரிக்கெட் அணியில் மட்டும் விளையாடி வருகிறார். இதே காரணத்துக்காக ஐபிஎல் ஏலத்தில் வாங்கப்பட்டாலும் கூட கடந்த சில வருடங்களாக களத்தில் களமிறங்கி விளையாடும் வாய்ப்பு இவருக்கு பெரும்பாலும் மறுக்கப்பட்டு வருகிறது.

கழற்றிவிடப்பட்ட ரகானே:
கடைசியாக கடந்த 2016ஆம் ஆண்டு இந்தியாவுக்காக ஒரு டி20 போட்டியில் விளையாடிய அவர் கடந்த 2018ஆம் ஆண்டு கடைசியாக ஒரு ஒருநாள் போட்டியில் விளையாடி இருந்தார். அதன் பின் மெல்ல மெல்ல வெள்ளை பந்து கிரிக்கெட்டில் இருந்து ஓரம் கட்டப்பட்டதை புரிந்துகொண்ட அவர் டெஸ்ட் அணியில் மிகச் சிறப்பாக விளையாடி முக்கிய முதுகெலும்பு வீரராக உருவெடுத்தார்.

rahaney

குறிப்பாக கடந்த 2021ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் முதல் போட்டியில் 36 ரன்களுக்கு ஆல் அவுட்டான இந்தியா படு மோசமான தோல்வியை சந்தித்தது. அந்த சமயத்தில் கேப்டனாக இருந்த விராட் கோலி நாடு திரும்பிய போது 2வது போட்டி முதல் இந்திய கேப்டன் பொறுப்பை ஏற்று நடத்திய அஜிங்க்ய ரஹானே மெல்போர்ன் நகரில் நடந்த போட்டியில் அபாரமாக சதம் அடித்து இந்தியாவை தூக்கி நிறுத்தினார்.

- Advertisement -

அது மட்டுமல்லாமல் அந்த தொடரின் எஞ்சிய போட்டிகளிலும் கேப்டனாக அபாரமாக செயல்பட்ட அவர் அந்த தொடரை 2 – 1 என்ற கணக்கில் இந்தியாவிற்கு வென்று கொடுத்தார். இருப்பினும் அதன் பின் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலும் சொதப்ப ஆரம்பித்த அவர் ஒரு சதத்தை அடிக்க முடியாமல் படுமோசமான பார்மில் உள்ளார். அதன் காரணமாக சமீபத்தில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவரின் துணை கேப்டன் பதவி பறிபோனது. அதுமட்டுமல்லாமல் அந்த தொடரில் பெரிய அளவில் ரன்கள் குவிக்க தடுமாறியதால் தற்போது இந்திய டெஸ்ட் அணியில் அவருக்கான இடம் கேள்விக்குறியாகியுள்ளது.

rahane

மோசமான பார்ம்க்கு காரணம்:
இந்நிலையில் இந்திய வெள்ளை பந்து கிரிக்கெட் அணியிலிருந்து காரணமே இல்லாமல் கழற்றி விடப்பட்டதாக அஜிங்க்ய ரஹானே வருத்தத்துடன் கூறியுள்ளார். இதுபற்றி இந்திய கிரிக்கெட் வல்லுனர் போரியா மஜும்டர் உடன் நிகழ்ந்த உரையாடலில் அவர் கூறியது பின்வருமாறு. “சில நேரங்களில் ஒருவர் ஒரு வகையான கிரிக்கெட்டில் மட்டும் விளையாடும் போது கடந்த 2 – 3 வருடங்களாக இந்தியாவில் ரஞ்சி கோப்பை போன்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாமல் உள்ள எதார்த்தத்தை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

ஏனெனில் ஒருவர் வீட்டில் அமர்ந்து கொண்டு ரன்களை அடிக்க முடியாது. களத்தில் விளையாடுவதால் கிடைக்கும் தன்னம்பிக்கை எவ்வளவுதான் நாம் வலைப் பயிற்சி செய்தாலும் கிடைக்காது. எப்போதும் தன்னம்பிக்கை என்பது போட்டியில் விளையாடி ரன்களை குவிக்கும் போது தான் கிடைக்கும்” என கூறியுள்ளார்.

Rahane

கடந்த சில வருடங்களாக இந்தியாவில் எந்தவிதமான உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளும் நடைபெறாமல் இருப்பதே தமது மோசமான பார்ம்க்கு ஒரு முக்கிய காரணம் என அஜிங்க்ய ரஹானே தெரிவித்துள்ளார். இதன் காரணமாக வரும் பிப்ரவரி 17ஆம் தேதி துவங்கும் ரஞ்சி கோப்பையில் பிரிதிவி ஷா தலைமையிலான மும்பை அணியில் அவர் விளையாட உள்ளார்.

- Advertisement -

காரணமே இல்லாமல்:
இந்திய வெள்ளைப்பந்து அணியில் வாய்ப்பு கிடைக்காதது பற்றி அஜிங்கிய ரஹானே தெரிவித்தது பின்வருமாறு. “அதற்கு முன்பாக ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக நான் தொடர்ச்சியாக மிகச்சிறப்பாக விளையாடி வந்தேன். ஆனால் திடீரென ஒரு நாள் நான் அணியில் இருந்து நீக்கப்பட்டேன். இருப்பினும் அந்த கடந்தகாலம் பற்றி நான் பேச விரும்பவில்லை. இருந்தாலும் உண்மை என்னவெனில் கடந்த 2014 – 2017 வரையிலான காலகட்டங்களில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் ஆகிய கிரிக்கெட்டில் நான் மிகச் சிறப்பாக விளையாடி இருந்தேன்.

அதன்பின் எனக்கு கடினமாகத்தான் வாய்ப்பு கிடைத்தது. மேலும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கு இடையேயும் நிறைய இடைவெளி இருந்தது” என கூறியுள்ளார். கடந்த. 2011ஆம் ஆண்டு இந்தியாவுக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமான ரஹானே அதன்பின் சிறப்பாக விளையாட துவங்கியதால் கடந்த 2015ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடித்திருந்தார். இருப்பினும் அதன்பின் சிறப்பாக விளையாடிய போதிலும் தமக்கு இந்திய வெள்ளைப் அந்த அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை என ரகானே வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

இதையும் படிங்க : ஐபிஎல் வரலாற்றில் ஒவ்வொரு வருடமும் அதிக தொகைக்கு ஏலம் போன வீரர்களின் – மொத்த லிஸ்ட் இதோ

கடந்த 2017க்கு பின் அவருக்கு வழங்கப்பட்ட வாய்ப்புகளில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த தவறியதால் இந்திய அணியில் இருந்து கழற்றி விடப்பட்ட அவர் கடைசியாக கடந்த 2018ஆம் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடி இருந்தார். அதில் 5 இன்னிங்சில் 140 ரன்களை மட்டுமே எடுத்த காரணத்தால் அதன்பின் அவருக்கு இந்திய ஒருநாள் அணியில் வாய்ப்பு கிடைக்கவே இல்லை. இந்த வேளையில் தற்போது ரஞ்சி கோப்பையில் விளையாட இருக்கும் அவர் அதில் சிறப்பாக செயல்பட்டாலும் கூட விரைவில் இலங்கைக்கு எதிராக துவங்க உள்ள டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் வாய்ப்பு கிடைப்பது கடினம் என்ற செய்திகள் வெளியாகியுள்ளது குறிப்பிடதக்கது.

Advertisement