ஐபிஎல் வரலாற்றில் ஒவ்வொரு வருடமும் அதிக தொகைக்கு ஏலம் போன வீரர்களின் – மொத்த லிஸ்ட் இதோ

ipl
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடருக்கான வீரர்கள் ஏலம் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பெங்களூரு நகரில் நடைபெற உள்ளது. இம்முறை லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களை மையமாகக் கொண்ட புதிய 2 அணிகள் தோற்றுவிக்கப்பட்டதால் அனைத்து அணிகளும் கலைக்கப்பட்டு மெகா அளவில் வீரர்கள் ஏலம் நடைபெறவுள்ளது.

ipl trophy

- Advertisement -

முன்னதாக இந்த ஏலத்தில் பங்கேற்க உலகம் முழுவதிலும் இருந்து 1214 வீரர்கள் விண்ணப்பம் செய்திருந்தார்கள். அதை ஆராய்ந்து தணிக்கை செய்த ஐபிஎல் நிர்வாகம் அதிலிருந்து 590 வீரர்கள் மட்டும் ஏலத்தில் பங்கேற்க தகுதியானவர்கள் என அறிவித்துள்ளது.

ஐபிஎல் மெகா ஏலம் 2022:
கடந்த 2018க்கு பின் முதல் முறையாக ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற உள்ளதால் இந்த ஏலத்துக்காக ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறார்கள். சரி இந்த ஏலத்தை முன்னிட்டு ஐபிஎல் வரலாற்றில் ஒவ்வொரு வருடமும் நடந்த ஏலத்தில் அதிக தொகைக்கு விலைபோன டாப் வீரர்கள் பற்றி பார்ப்போம்.

MSdhoni

1. எம்எஸ் தோனி (2008) : கடந்த 2007ஆம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவில் நடந்த வரலாற்றின் முதல் டி20 உலகக் கோப்பையை யாரும் எதிர்பாராத வண்ணம் இளம் வீரர் எம்எஸ் தோனி தலைமையிலான இந்தியா வென்று சரித்திரம் படைத்தது. அதற்கு அடுத்த வருடம் தோற்றுவிக்கப்பட்ட ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் முதல் வீரர்கள் ஏலம் கடந்த 2008ஆம் ஆண்டு நடைபெற்றது. அதில் இந்தியாவிற்காக டி20 உலகக் கோப்பையை வென்றதுடன் சூப்பரான விக்கெட் கீப்பிங், அதிரடியான பேட்டிங் செய்யக் கூடியவராக இருந்த எம்எஸ் தோனியை வாங்க பல அணிகள் கடும் போட்டி போட்டன.

- Advertisement -

இறுதியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அவரை 9.5 கோடி என்ற மிகப்பெரிய தொகைக்கு வாங்கியது. இதன் வாயிலாக ஐபிஎல் 2008 ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் போன வீரராக எம்எஸ் தோனி சாதனை படைத்தார். அதன்பின் இதுவரை அந்த அணிக்காக 4 முறை கோப்பைகளை வென்று கொடுத்துள்ள அவர் சென்னை என்றால் தோனி தோனி என்றால் சென்னை என தமிழக கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார்.

Pieterson

2. கெவின் பீட்டர்சன், அண்ட்ரூ பிளின்டாப் (2009) : ஐபிஎல் 2009 ஏலத்தில் இங்கிலாந்து நட்சத்திர வீரர்களான ஆண்ட்ரூ பிளின்டாப் மற்றும் கெவின் பீட்டர்சன் ஆகியோரை வாங்க அனைத்து அணிகளும் கடுமையான போட்டி போட்டன. இறுதியில் கெவின் பீட்டர்சன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காகவும் ஆண்ட்ரூ பிளின்டாப் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் ஆனார்கள். இவர்கள் இருவருமே தலா 9.8 கோடிகளுக்கு வாங்க பட்டதால் அந்த வருட ஏலத்தில் அதிக தொகைக்கு எடுக்கப்பட்ட வீரர்களாக இந்த ஜோடி சாதனை படைத்தார்கள்.

- Advertisement -

3. கிரண் பொல்லார்ட், ஷேன் பாண்ட் (2010):
ஐபிஎல் 2010 ஏலத்தில் நியூஸிலாந்து அணியைச் சேர்ந்த நட்சத்திர அதிரடி வேகப்பந்து வீச்சாளர் ஷேன் பாண்ட் ரூபாய் 4.8 கோடிகளுக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஒப்பந்தமானார். அதேபோல் வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரர் கிரண் பொல்லார்ட்டை அதே 4.8 கோடிகளுக்கு மும்பை இந்தியன்ஸ் வாங்கியது. இதன் வாயிலாக அந்த வருட ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் போன வீரர்களாக இந்த இருவரும் சாதனை படைத்தார்கள். இதில் மும்பைக்காக ஒப்பந்தமான கிரண் பொல்லார்ட் தற்போது வரை அந்த அணியின் முதுகெலும்பு வீரராக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Gambhir

4. கெளதம் கம்பீர் (2011) : கடந்த 2011 ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த உலகக் கோப்பை பைனலில் 97 ரன்கள் விளாசிய கௌதம் கம்பீர் இந்தியாவின் உலக கோப்பை வெற்றியில் துருப்புச் சீட்டாக செயல்பட்டார். அதன் காரணமாக அந்த சீசனில் ஏலத்தில் அவரை வாங்க அனைத்து அணிகளும் கடுமையாக போட்டியிட இறுதியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 14.90 கோடிகளுக்கு வாங்கியது. இதன் வாயிலாக அந்த சமயத்தில் ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்திருந்தார்.

- Advertisement -

5. ரவீந்திர ஜடேஜா (2012) : ஆரம்ப காலகட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக மிகச் சிறப்பாக விளையாட துவங்கிய இளம் வீரர் ரவீந்திர ஜடேஜாவை ஐபிஎல் 2012 ஏலத்தில் 12.72 கோடிகளுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் வாங்கியது. இதன் வாயிலாக அந்த ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் போன வீரராக சாதனை படைத்த ரவிந்திர ஜடேஜா தற்போது வரை சென்னை அணியின் முக்கிய வீரராக வலம் வருகிறார்.

Jadeja

6. கிளென் மேக்ஸ்வேல் (2013) : கடந்த 2013ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் போன வீரராக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நட்சத்திர வீரர் கிளென் மேக்ஸ்வெல் சாதனை படைத்தார். அவரை மும்பை இந்தியன்ஸ் அணி 6.3 கோடிகளுக்கு வாங்கியது.

7. யுவராஜ் சிங் (2014, 2015): இந்தியாவிற்காக உலக கோப்பையை வென்று கொடுத்த நட்சத்திர வீரர் யுவராஜ் சிங் புற்றுநோயில் இருந்து போராடி மீண்டு வந்த நேரம் அது. அந்த சமயத்தில் நடந்த 2014 ஐபிஎல் ஏலத்தில் அவரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 14 கோடிகளுக்கு வாங்கியது. இருப்பினும் அந்த சீசனில் அவர் மிகச் சிறப்பாக செயல்படத் தவறியதால் அடுத்த வருடமே அவரை பெங்களூரு விடுவித்தது. ஆனால் அதற்கு அடுத்த வருடமும் அவரின் மவுசு குறையாததால் அவரை ஐபிஎல் 2015 ஏலத்தில் 16 கோடிகளுக்கு டெல்லி டேர்டெவில்ஸ் அணி வாங்கி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது. இதன் வாயிலாக அடுத்தடுத்த 2 சீசன்களில் அதிக தொகைக்கு ஏலம் போன வீரர் என்ற பெருமையை யுவராஜ் சிங் பெற்றார்.

Yuvraj

8. ஷேன் வாட்சன் (2016): ஆஸ்திரேலியாவின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சன் கடந்த 2016 ஐபிஎல் ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் போன வீரர்களில் முதலிடம் பிடித்து அசத்தினார். அவரை 9.5 கோடிகளுக்கு பெங்களூர் அணி நிர்வாகம் வாங்கியிருந்தது.

9.பென் ஸ்டோக்ஸ் (2016, 2017) : 2015 உலகக் கோப்பைக்கு பின் சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு மகத்தான ஆல்-ரவுண்டராக இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் உருவாக துவங்கினார். அந்த சமயத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு புதிதாக தோற்றுவிக்கப்பட்ட ரைசிங் புனே சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணி அவரை 2017 ஐபிஎல் ஏலத்தில் அதிகபட்சமாக 14.5 கோடிகளுக்கு வாங்கியது.

அந்த சீசனில் அவரும் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் மிகச் சிறப்பாக செயல்பட்டு ஆல்-ரவுண்டராக அசத்தியதால் அடுத்த சீசனில் அவரின் மதிப்பு குறையவே இல்லை. அதன் காரணமாக 2018ஆம் ஆண்டு நடந்த ஏலத்தில் அவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 12.5 கோடிகளுக்கு வாங்கியது. இதன் வாயிலாக ஐபிஎல் கிரிக்கெட்டில் அடுத்தடுத்த சீசன்களில் அதிக தொகைக்கு ஏலம் போன வெளிநாட்டு வீரர் என்ற சாதனையை பென் ஸ்டோக்ஸ் படைத்துள்ளார்.

ben

10. ஜெயதேவ் உனட்கட், வருண் சக்கரவர்த்தி (2019): கடந்த 2019இல் நடந்த ஏலத்தில் தமிழகத்தைச் சேர்ந்த சுழல்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி அதிகபட்சமாக 8.4 கோடிகளுக்கு பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தமானார். அதேபோல் அதே தொகைக்கு மற்றொரு இந்திய வீரர் ஜெயதேவ் உனட்கட் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

11. பட் கமின்ஸ் (2020): ஐபிஎல் 2020 ஏலத்தில் ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீரர் பட் கம்மின்ஸ் ரூபாய் 15.50 கோடிகளுக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தமானார். இதன் வாயிலாக ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக தொகைக்கு ஏலம் போன வெளிநாட்டு வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார்.

Morris

12. கிறிஸ் மோரிஸ் (2021): கடந்த வருடம் நடந்த ஐபிஎல் ஏலத்தில் தென் ஆபிரிக்காவைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் கிரிஸ் மோரிஸ் 16.25 கோடிகளுக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் வாங்கியது. இதன் வாயிலாக ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக தொகைக்கு ஏலம் போன வெளிநாட்டு வீரர் என்ற பட் கமின்ஸ் சாதனையை உடைத்து புதிய சாதனையை அவர் படைத்துள்ளார்.

Advertisement