கேப்டனாக தோனி, விராட் கோலி கூட செய்யாத சாதனையை மொஹாலி மைதானத்தில் நிகழ்த்திய – கே.எல் ராகுல்

KL-Rahul-Dhoni-Kohli
- Advertisement -

ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் நேற்று இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டு விளையாடியது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 276 ரன்கள் குவிக்க பின்னர் தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 48.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 281 ரன்கள் குவித்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக துவக்க வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சுப்மன் கில், கேப்டன் கே.எல் ராகுல், சூரியகுமார் யாதவ் ஆகியோர் அரைசதம் அடித்து அசத்தினர். அதோடு இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

- Advertisement -

இப்படி இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியின் போது ரோஹித் சர்மா ஓய்வு எடுத்துக் கொண்டதன் காரணமாக புதிய கேப்டனாக செயல்பட்ட கே.எல் ராகுல் தற்போது இந்திய அணியின் முன்னாள் கேப்டன்களான எம்.எஸ் தோனி, விராட் கோலி ஆகியோரே படைக்காத சாதனை ஒன்றினை படைத்து அசத்தியுள்ளார்.

அந்த வகையில் கடந்த 1996-ஆம் ஆண்டின் போது சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான இந்திய அணியானது ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மொஹாலி மைதானத்தில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி இருந்தது.

- Advertisement -

ஆனால் அதற்கடுத்து எந்த ஒரு கேப்டனும் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக மொஹாலி மைதானத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது கிடையாது. குறிப்பாக 1996-ஆம் ஆண்டிற்கு பிறகு மொஹாலி மைதானத்தில் இதுவரை நடைபெற்ற 7 போட்டிகளில் ஆஸ்திரேலியா அணியே ஆறு முறை வெற்றி பெற்றுள்ளது. இப்படி மொஹாலி மைதானத்தில் தோல்வியை காணாமல் இருந்த ஆஸ்திரேலியா அணியை தற்போது கே.எல் ராகுல் தலைமையிலான இந்திய அணி வீழ்த்தி நம்பர் ஒன் இடத்திற்கும் முன்னேறியுள்ளது.

இதையும் படிங்க : போட்டி முடிந்து பின்னரும் கடமை உணர்ச்சி தவறாமல் அஷ்வின் செய்த செயல் – மொஹாலி மைதானத்தில் அரங்கேறிய சுவாரசியம்

இதற்கு முன்னதாக இந்திய அணியின் கேப்டன்களான தோனி, கோலி ஆகியோரது தலைமையில் கூட இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை மொஹாலி மைதானத்தில் வீழ்த்த முடியாத நிலையில் தற்போது கே.எல் ராகுல் தலைமையிலான இந்திய அணி அவர்களை வீழ்த்தி சரித்திரம் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement