போட்டி முடிந்து பின்னரும் கடமை உணர்ச்சி தவறாமல் அஷ்வின் செய்த செயல் – மொஹாலி மைதானத்தில் அரங்கேறிய சுவாரசியம்

Ashwin
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நேற்று செப்டம்பர் 22-ஆம் தேதி மொஹாலி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் தமிழக சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று விளையாடினார். இதனால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் உச்சம் பெற்றிருந்தது.

இவ்வேளையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 276 ரன்களை குவிக்க பின்னர் தொடர்ந்து விளையாடிய இந்திய அணியானது 48.4 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 281 ரன்கள் குவித்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் போது முதலில் பந்து வீசிய இந்திய அணி சார்பாக ரவிச்சந்திரன் அஸ்வின் 10 ஓவர்கள் வீசி 47 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். பவுலிங்கில் அவர் கொடுத்த இந்த கம்பேக் அனைவரது மத்தியிலும் பாராட்டினை பெற்ற வேளையில் :

நேற்றைய போட்டி முடிந்து அஸ்வின் செய்த மற்றொரு செயல் ஒன்று அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் நேற்றைய போட்டி முடிந்து பரிசளிப்பு விழா நடைபெற்றது. அதனை தொடர்ந்து வீரர்கள் அனைவரும் ஓய்வறையை நோக்கி சென்ற வேளையில் அஸ்வின் மட்டும் பேட்டை கையில் எடுத்துக்கொண்டு மைதானத்தில் இருந்த ஒரு பிட்சில் பேட்டிங் ப்ராக்டிஸ் செய்தார்.

- Advertisement -

அவருக்கு த்ரோ டவுன் ஸ்பெசலிஸ்ட் ஒருவர் பந்துவீச தொடர்ச்சியாக அவர் பேட்டிங் பயிற்சியையும் மேற்கொண்டார். இதற்கு காரணம் யாதெனில் : சுழற்பந்து வீச்சாளராக இருக்கும் வீரர்கள் பின் வரிசையில் பேட்டிங்கில் ஓரளவு கைகொடுக்க வேண்டும் என்று இந்திய அணியின் நிர்வாகம் எதிர்பார்க்கிறது. அதோடு தற்போது இந்திய அணியில் அக்சர் படேல் மற்றும் ஜடேஜா ஆகியோர் பேட்டிங்கில் பெரிதளவு கை கொடுப்பவர்கள் என்பதால் அவர்களுக்கே தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க : மும்பை, வைசாக், சென்னை 3 இடங்களிலும் பட்ட அசிங்கத்திற்கு மொஹாலியில் வச்சி முற்றுப்புள்ளி வைத்த – சூரியகுமார் யாதவ்

எனவே தானும் பேட்டிங்கில் முன்னேற்றத்தை காண்பித்தால் நிச்சயம் தொடர்ச்சியாக விளையாட முடியும் என்பதற்காகவே அஸ்வின் இந்த பயிற்சியில் ஈடுபட்டதாக தெரிகிறது. இப்படி போட்டி முடிந்து பின்னர் அஸ்வின் பேட்டிங் பயிற்சிக்கு சென்றது குறித்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் என அனைத்தும் வெளியாகி அனைவரது மத்தியிலும் பாராட்டினை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement