மிரட்டிய தெ.ஆ.. 24/3 என வீழ்ந்த இந்தியா.. 84 ரன்ஸ்.. சவாலான பிட்ச்சில் டெயில் எண்டர்களுடன் சேர்ந்து காப்பாற்றிய ராகுல்

KL rahul 70
- Advertisement -

தென்னாபிரிக்கா மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் டிசம்பர் 26ஆம் தேதி செஞ்சுரியன் நகரில் துவங்கியது. கிறிஸ்மஸ் தினத்தின் அடுத்த நாளான பாக்ஸிங் டேவில் மழையால் சற்று தாமதத்துடன் இந்திய நேரப்படி மதியம் 2 மணிக்கு துவங்கிய அந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

இந்திய அணியில் பிரசித் கிருஷ்ணா அறிமுகமாக களமிறங்கிய நிலையில் காயமடைந்த ரவீந்திர ஜடேஜாவுக்கு பதிலாக ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாடும் வாய்ப்பை பெற்றார். அதை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு மேகமூட்டத்திற்கு மத்தியில் ஈரப்பதமான சூழ்நிலையை பயன்படுத்திய ரபாடா போன்ற தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர்கள் துல்லியமாக பந்து வீசி பெரிய சவாலை கொடுத்தனர்.

- Advertisement -

போராடும் ராகுல்:
அதற்கு தாக்குப் பிடிக்க முடியாத கேப்டன் ரோகித் சர்மா 5 ரன்களில் அவுட்டாக மறுபுறம் தடுமாறிய ஜெய்ஸ்வால் 17 ரன்களில் நடையை கட்டினார். போதாகுறைக்கு அடுத்ததாக வந்த சுப்மன் கில் 2 ரன்களில் அவுட்டானதால் 24/3 என ஆரம்பத்திலேயே தடுமாறிய இந்தியாவை விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் நிதானமாக விளையாடி காப்பாற்ற முயற்சித்தனர்.

இருப்பினும் 3வது விக்கெட்டுக்கு 68 ரன்கள் மட்டுமே பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த ஜோடியில் ஸ்ரேயாஸ் ஐயரை 31 ரன்களில் காலி செய்த ரபாடா மறுபுறம் போராடிய விராட் கோலியையும் 38 ரன்களில் அவுட்டாக்கி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். அப்போது வந்த ராகுல் நிதானமாக விளையாடிய போதிலும் எதிர்ப்புறம் ரவிச்சந்திரன் அஸ்வின் 8, சர்துல் தாகூர் 24, பும்ரா 1 ரன்களில் போராடி அவுட்டானார்கள்.

- Advertisement -

ஆனாலும் மறுபுறம் கிளாஸ் ஆட்டத்தை வெளிப்படுத்திய ராகுல் அரை சதம் கடந்து 70* ரன்கள் எடுத்த போது மழை வந்ததால் முதல் நாள் ஆட்டம் முன்கூட்டியே முடித்துக் கொள்ளப்பட்டது. தற்போது இந்தியா 208/8 ரன்கள் எடுத்துள்ள நிலையில் தென்னாப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக ககிஸோ ரபாடா 5, நன்ரே பர்கர் 2 விக்கெட்டுகளை எடுத்துள்ளனர். குறிப்பாக 24/3 என்ற சுமாரான துவக்கத்தை பெற்ற இந்தியா விராட் கோலி, ஸ்ரேயாஸ் விக்கெட்டுகளை இழந்ததால் 107/5 என திண்டாடியது.

இதையும் படிங்க: 2018, 2021லயே இந்தியா ஜெயிச்சுருக்கும்.. ஆனா இவர் தடுத்துட்டாரு.. முன்னாள் தெ.ஆ வீரர் மீது சாஸ்திரி ஆதங்கம்

அப்போது 200 ரன்களை தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவை 8, 9, 10 ஆகிய இடங்களில் களமிறங்கிய டெயில் எண்டர்களுடன் ஜோடி சேர்ந்த ராகுல் சவாலான பிட்ச்சில் 84 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஓரளவு மானத்தை காப்பாற்றியுள்ளார் என்றே சொல்லலாம். மொத்தத்தில் முதல் நாளில் தடுமாற்றமாகவே செயல்பட்ட இந்தியா அடுத்து வரும் நாட்களில் கடுமையாக போராடி தென்னாப்பிரிக்காவை முதல் முறையாக தோற்கடித்து இத்தொடரை கைப்பற்றும் முனைப்புடன் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement