எல்லா இடத்துலயும் ப்ளாக்.. ஒரு வருஷமா பாக்கல.. மகன் பற்றிய தவான் பதிவால் ரசிகர்கள் சோகம்

Shikhar Dhawan Son
- Advertisement -

நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் இந்தியா 2013 சாம்பியன்ஸ் ட்ராபியை தோனி தலைமையில் வெல்வதற்கு தங்க பேட் விருது வென்று முக்கிய பங்காற்றிய பெருமைக்குரியவர். மேலும் 2015 உலகக் கோப்பை, 2017 சாம்பியன்ஸ் ட்ராபி, 2018 ஆசிய கோப்பை போன்ற தொடர்களில் இந்தியாவுக்காக அதிக ரன்கள் அடித்து வெற்றிக்கு போராடிய அவர் மிஸ்டர் ஐசிசி என்று ரசிகர்களால் போற்றப்படுகிறார்.

இருப்பினும் 37 வயதை தாண்டி விட்ட அவர் சமீப காலங்களில் சற்று தடுமாற்றமாக விளையாடி வந்ததால் 2023 ஆசிய மற்றும் உலகக்கோப்பையில் கழற்றி விடப்பட்டார். ஆனாலும் அடுத்த வருடம் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாட காத்திருக்கும் அவர் இப்போதும் ரசிகர்களின் அபிமானம் பெற்ற இந்திய வீரராகவே இருந்து வருகிறார்.

- Advertisement -

பரிதாபமான அப்பா:
முன்னதாக கடந்த 2012இல் ஆயிஷா முகர்ஜி எனும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆஸ்திரேலிய பெண்ணை மணந்து கொண்ட ஷிகர் தவானுக்கு “ஜோரவர்” எனும் மகன் இருக்கிறார். ஆனால் 2021இல் அவர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தவானிடம் இருந்து பிரிந்து சென்ற ஆயிஷா முகர்ஜி மகனையும் பிரித்து ஆஸ்திரேலியாவுக்கு சென்று விட்டார்.

அதற்காக தொடரப்பட்ட வழக்கில் தன்னுடைய மகனை ஆஸ்திரேலியாவிலும் இந்தியாவிலும் பள்ளி விடுமுறை நாட்களில் தவான் பார்ப்பதற்கு அனுமதிக்க வேண்டுமென்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனால் கடந்த ஒரு வருடமாக தன்னுடைய மகனை கண்ணில் கூட காட்டாமல் வைத்திருப்பதாக தற்போது ஷிகர் தவான் வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக ஆன்லைனில் பேச முடியாத அளவுக்கு அனைத்து இடங்களிலும் பிளாக் செய்து வைத்துள்ளதாக தெரிவிக்கும் தவான் டிசம்பர் 26ஆம் தேதி தம்முடைய மகனின் பிறந்தநாளில் ஏற்கனவே வீடியோ காலில் பேசிய ஸ்கிரீன்ஷாட்டை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ஆதங்கத்துடன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது பின்வருமாறு.

- Advertisement -

“உன்னை பார்த்து ஒரு வருடமாகி விட்டது. தற்போது 3 மாதங்களாக நான் அனைத்து இடங்களிலும் பிளாக் செய்யப்பட்டுள்ளேன். எனவே ஏற்கனவே பேசிய அதே புகைப்படத்தை வைத்து உனக்கு பிறந்தநாள் சொல்கிறேன் என்னுடைய மகனே. உன்னை நேரடியாக தொடர்பு கொள்ள முடியாமல் போனாலும் இப்போதும் டெலிபதி வாயிலாக உன்னை தொடர்பு கொள்வேன். உன்னால் பெருமையடைகிறேன்”

இதையும் படிங்க: 2018, 2021லயே இந்தியா ஜெயிச்சுருக்கும்.. ஆனா இவர் தடுத்துட்டாரு.. முன்னாள் தெ.ஆ வீரர் மீது சாஸ்திரி ஆதங்கம்

“நீ நன்றாக வளர்ந்து வருவாய் என்பது எனக்கு தெரியும். உன்னை எப்போதும் மிஸ் செய்யும் நான் விரும்புகிறேன். கடவுளின் அருளால் நாம் மீண்டும் சந்திக்கும் நேரத்திற்காக காத்திருக்கிறேன். குறும்புத்தனமாக இரு. ஆனால் பணிவு, இரக்கம், பொறுமை, வலிமை ஆகியவற்றையும் கொண்டிரு. உன்னை பார்க்க விட்டாலும் தினம்தோறும் உன்னுடைய நலம் பற்றியும் நான் என்ன செய்கிறேன் என்பதை பற்றியும் மெசேஜ் எழுதிக் கொண்டிருக்கிறேன். லவ் யூ ஜோரா” என்று கூறியுள்ளது ரசிகர்களை சோகமடைய வைத்துள்ளது.

Advertisement