IPL 2023 : 10.75 கோடி இவருக்கு அதிகம் தான் கழட்டி விட்ட டெல்லி அணி – ஷர்துல் தாகூரை புதுசா வாங்கிய அணி எது தெரியுமா?

Shardul-Thakur
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை தொடரின் அரையறுதி போட்டியோடு இந்திய அணி வெளியேறிய நிலையில் தற்போது இந்திய ரசிகர்களின் பார்வை அடுத்ததாக ஐபிஎல் பக்கம் திரும்பி உள்ளது. இந்தியாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு 16-வது சீசனாக இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த ஐ.பி.எல் தொடருக்கான எதிர்பார்ப்பு தற்போதே ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் எதிர்வரும் இந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் 23-ஆம் தேதி கொச்சியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட வேளையில் நாளை நவம்பர் 15-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் 10 அணிகளும் தங்கள் அணியிலிருந்து கழட்டிவிடப்படும் வீரர்களின் பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.

இவ்வேளையில் தற்போது ஒவ்வொரு அணியும் தங்களது அணியில் இருந்து வெளியேற்றும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் அணிகளுக்கு இடையேயான டிரேடிங் மூலம் வீரர்களை மாற்றும் செயல்பாடுகளும் அதிதீவிரமாக நடந்து வருகிறது.

Shardul Thakur 1

அந்த வகையில் கடந்த ஆண்டு 10.75 கோடிக்கு டெல்லி அணியால் வாங்கப்பட்டிருந்த முன்னணி இளம் ஆல்ரவுண்டர் ஷர்துல் தாகூர் சிறப்பாக செயல்படத் தவறியதால் தற்போது டெல்லி அணி அவரை அந்த அணியில் இருந்து கழட்டி விட்டுள்ளது. அதே வேளையில் டெல்லி அணியில் இருந்து வெளியேறிய அவரை எடுக்க சென்னை, பஞ்சாப், குஜராத் ஆகிய அணிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவியது.

- Advertisement -

இருந்தாலும் இறுதியில் அவரை கொல்கத்தா அணி நல்ல விலைக்கு வாங்கியுள்ளது. ஏற்கனவே குஜராத் அணியிடமிருந்து பெர்குஷன் மற்றும் குர்பாஸ் ஆகியோரை வாங்கி இருந்த கொல்கத்தா அணி தற்போது இந்திய அணியின் வலதுகை வேகப்பந்து வீச்சாளர் மற்றும் பேட்ஸ்மேனான ஷர்துல் தாக்கரையும் டிரேடிங் மூலமாக எடுத்து அணியை பலப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : வீடியோ : வெற்றி கொண்டாத்திலும் சக வீரர்களை மதித்து தலைவன் என்பதை நிரூபித்த ஜோஸ் பட்லர் – பாராட்டும் ரசிகர்கள்

அதேபோன்று கொல்கத்தா அணிக்காக கடந்த சீசனில் விளையாடிய ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் மோசமான ஆட்டத்தை வெளிப்டுத்தியதன் காரணமாக இந்த சீசனில் அவர் கொல்கத்தா அணியில் இருந்து கழற்றிவிடப்பட்டுள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

Advertisement