
இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக வீரர்களின் மினி ஏலமானது டிசம்பர் மாதம் இரண்டாம் வாரம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்காக தற்போது இந்த ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் பத்து அணிகளும் தங்களது அணியில் இருந்து ரிலீஸ் செய்ய இருக்கும் வீரர்களின் பட்டியலை தயார் செய்து வருகிறது.
ஏற்கனவே ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டிருந்த அறிவிப்பில் 10 அணிகளை நிர்வாகங்களும் தங்களது அணியில் ரிலீஸ் செய்யப் போகும் வீரர்களின் பட்டியலையும், தக்க வைக்கப்போகும் வீரர்களின் பட்டியலையும் தயார் செய்து வழங்க வேண்டும் என்று அறிவித்திருந்தது.
அப்படி இன்னும் ஓரிரு வாரங்களுக்குள் அனைத்து அணிகளுமே தங்களது அணியிலிருந்து வெளியேற்றப்போகும் மற்றும் தக்க வைக்கப்போகும் வீரர்களின் பட்டியலையும் வழங்கும் என்று தெரிகிறது. இந்நிலையில் 2024 ஆம் ஆண்டு சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய கொல்கத்தா அணி இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தோல்வியை சந்தித்ததால் அடுத்த 2026 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக பல்வேறு முக்கிய மாற்றங்களை தங்களது அணியில் செய்து வருகிறது.
அந்த வகையில் கொல்கத்தா அணியின் பயிற்சியாளராக இருந்த சந்திரகாந்த் பண்டிட் வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக புதிய பயிற்சியாளராக அபிஷேக் நாயர் பொறுப்பேற்றுள்ளார். அப்படி பொறுப்பேற்றுள்ள அபிஷேக் நாயர் கொல்கத்தா அணியை வெற்றி பாதைக்கு திருப்பும் நோக்கில் சில முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறார் என்று தெரிகிறது.
அந்த வகையில் மினி ஏலத்திற்கு முன்னதாக கொல்கத்தா அணியில் கடந்த பல ஆண்டுகளாகவே விளையாடி வரும் சீனியர் வீரர்களான வெங்கடேஷ் ஐயர் மற்றும் ஆண்ட்ரே ரசல் ஆகியோரை வெளியேற்ற முடிவு செய்துள்ளார் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க : மகளிர் அணி உலககோப்பையை வென்றால் காத்திருக்கும் ஜாக்பாட் – பி.சி.சி.ஐ கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்
ஏனெனில் அவர்கள் இருவரையும் வெளியேற்றினால் கிட்டத்தட்ட 35 கோடியுடன் கொல்கத்தா அணி மினி ஏலத்திற்கு செல்லும் என்பதனால் அந்த இரண்டு வீரர்களை வெளியேற்ற அபிஷேக் நாயர் நிர்வாகத்திற்கு பரிந்துரைத்துள்ளார். அப்படி அவர்கள் இருவரும் வெளியேறும் பட்சத்தில் 35 கோடியுடன் கே.கே.ஆர் அணி மினி ஏலத்தில் பங்கேற்று பல்வேறு இளம் வீரர்களை வாங்க வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.