மகளிர் அணி உலககோப்பையை வென்றால் காத்திருக்கும் ஜாக்பாட் – பி.சி.சி.ஐ கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்

IND W
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெற்று வந்த 2025-ஆம் ஆண்டிற்கான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நான்கு அணிகள் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றிருந்தன. தற்போது அரையிறுதி போட்டிகள் முடிவடைந்த வேளையில் முன்னாள் சாம்பியன்ளான ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் அரையிறுதி சுற்றோடு தோல்வியை சந்தித்து வெளியேறியுள்ளன.

மகளிர் அணிக்கு காத்திருக்கும் ஜாக்பாட் : பி.சி.சி.ஐ முடிவு

இதன் காரணமாக இன்று நவம்பர் 2-ஆம் தேதி நடைபெறும் மாபெரும் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்த காத்திருக்கின்றனர். இதுவரை இவ்விரு அணிகளுமே உலக கோப்பையை வென்றதில்லை என்பதினால் எந்த அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றும்? என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் உச்சத்தை தொட்டுள்ளது.

- Advertisement -

அதேவேளையில் கடந்த 47 ஆண்டுகளாக உலகக் கோப்பை தொடரில் விளையாடி வரும் இந்திய மகளிர் அணியானது முதல் முறையாக கோப்பையை கைப்பற்றும் நோக்குடன் விளையாட இருப்பதால் இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் இந்த மாபெரும் இறுதிப்போட்டியில் இந்திய அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் பட்சத்தில் பிசிசிஐ அவர்களுக்கு மிகப்பெரிய பரிசுத்தொகையை வழங்க திட்டமிட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் மகளிர் அணி இந்த போட்டியில் வெற்றி பெற்று சாம்பியனாகும் பட்சத்தில் இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் :

- Advertisement -

மகளிர் அணிக்கு 125 கோடி ரூபாய் பரிசு தொகையை அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி இந்த தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் நிச்சயம் சாம்பியன் பட்டத்தை வென்று நம் நாட்டிற்கு பெருமை சேர்க்கும் என்று நம்பலாம்.

இதையும் படிங்க : காலம் காலமாக தோல்வி வலியை பாத்த இந்தியா.. இந்த புதிய உணர்வை பார்க்க தயார்.. கேப்டன் ஹர்மன்ப்ரீத் பேட்டி

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மகளிர் உலககோப்பை தொடரின் மாபெரும் இறுதிப்போட்டியானது இன்று நவம்பர் 2-ஆம் தேதி டி.ஒய் பாட்டீல் மைதானத்தில் நடைபெறயிருக்கிறது.

Advertisement