SRH vs KKR : 3 டெத் ஓவர்களில் மாயாஜாலம் நிகழ்த்திய வருண் சக்ரவர்த்தி – ஹைதராபாத் வெற்றியை பறித்தது எப்படி

SRH vs KKR Varun Chakravarthy
- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் மே 4ஆம் தேதி நடைபெற்ற 47வது லீக் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதெராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதின. ராஜீவ் காந்தி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற அந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு ரஹ்மத்துல்லா குர்பாஸ் கோல்டன் டக் அவுட்டாகி ஏமாற்றிய நிலையில் அடுத்து வந்த வெங்கடேஷ் ஐயர் 7 (5) ரன்களில் நடையை கட்டினார். அடுத்த சில ஓவர்களில் மறுபுறம் தடுமாறிய ஜேசன் ராய் 20 (19) ரன்களில் ஆட்டமிழந்ததால் 35/3 என ஆரம்பத்திலேயே கொல்கத்தா தடுமாறியது.

இருப்பினும் அடுத்ததாக களமிறங்கிய ரிங்கு சிங்குடன் ஜோடி சேர்ந்த கேப்டன் நித்திஷ் ராணா சற்று அதிரடியாக விளையாடி 4வது விக்கெட்டுக்கு 61 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சரிவை சரி செய்த போதும் 3 பவுண்டரி 3 சிக்சருடன் 42 (31) ரன்களில் ஆட்டமிழந்தார். அந்த நிலைமையில் வந்த ஆண்ட்ரே ரசல் தமக்கே உரித்தான பாணியில் 1 பவுண்டரி 2 சிக்சரை பறக்க விட்டு 24 (15) ரன்களில் அவுட்டாக சுனில் நரேன் 1 (2) ஷார்துல் தாகூர் 8 (6) என லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டானார்கள்.

- Advertisement -

இறுதியில் மறுபுறம் போராடிய ரிங்கு சிங் 4 பவுண்டரி 1 சிக்சருடன் 46 (35) ரன்களும் அங்குள் ராய் 13* (7) ரன்களும் எடுத்ததால் 20 ஓவர்களில் கொல்கத்தா 171/9 ரன்கள் எடுக்க ஹைதராபாத் சார்பில் அதிகபட்சமாக மார்கோ யான்சென் மற்றும் தமிழக வீரர் நடராஜன் ஆகியோர் தலா 2 விக்கெட் சாய்த்தனர். அதைத்தொடர்ந்து 172 ரன்களை துரத்திய ஹைதராபாத் அணிக்கு அதிரடியை துவங்கிய மயங் அகர்வால் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 18 (11) ரன்களில் அவுட்டாக மறுபுறம் தடுமாறிய அபிஷேக் சர்மா 9 (10) ரன்களில் நடையை கட்டினார்.

அதைத் தொடர்ந்து வந்த ராகுல் திரிபாதி சரவெடியாக விளையாட முயற்சித்து 3 பவுண்டரி 1 சிக்சருடன் 20 (9) ரன்களில் அவுட்டாக அடுத்து களமிறங்கிய ஹரி ப்ரூக் பொறுப்பின்றி டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். அதனால் 54/4 என ஆரம்பத்திலேயே திணறிய ஹைதராபாத்துக்கு அடுத்ததாக களமிறங்கி நங்கூரமாக செயல்பட்ட ஹென்றிச் க்ளாஸென் 15வது ஓவர் வரை நிலைத்து நின்று 5வது விக்கெட்டுக்கு 70 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சரிவை சரி செய்து வெற்றி பாதைக்கு அழைத்து வந்த போது 1 பவுண்டரி 3 சிக்சருடன் 36 (20) ரன்களில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

அடுத்த சில ஓவர்களில் அவருடன் மறுபுறம் நங்கூரமாக விளையாடினாலும் கடைசி வரை அதிரடியை துவங்காத கேப்டன் ஐடன் மார்க்ரம் 4 பவுண்டரியுடன் 41 (40) ரன்களில் அவுட்டானார். அதனால் கடைசி நேரத்தில் ஏற்பட்ட பரபரப்பில் மார்கோ யான்சென் 1 (4) ரன்னில் அவுட்டானதால் வெற்றியை நெருங்கியும் கடைசி ஓவரில் ஹைதராபாத்துக்கு வெறும் 9 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.

அப்போது அந்த ஓவரை தம்மிடம் நம்பி வழங்கிய கேப்டனுக்கு பாத்திரமாக செயல்பட்ட தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி அப்துல் சமதை 21 (18) ரன்களில் அவுட்டாக்கி 3 ரன்களை மட்டுமே கொடுத்து வெற்றிகரமாக கட்டுப்படுத்தினார். அதனால் 20 ஓவர்களில் ஹைதராபாத்தை 166/8 ரன்களுக்கு கட்டுப்படுத்திய கொல்கத்தா வெறும் 5 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

- Advertisement -

கொல்கத்தா சார்பில் அதிகபட்சமாக வைபவ் அரோரா மற்றும் சர்துல் தாக்கூர் ஆகியோர் 2 விக்கெட்களை எடுத்த போதிலும் கடைசி ஓவரில் சுழலில் மாயாஜாலம் நிகழ்த்தும் அளவுக்கு சிறப்பாக செயல்பட்ட வருண் சக்கரவர்த்தி வெற்றியை பெற்றுக் கொடுத்தார் என்று சொல்லலாம். குறிப்பாக ஹைதராபாத்துக்கு கடைசி 38 பந்துகளில் 30 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட போது மார்க்ரம் – அப்துல் சமத் ஆகிய 2 பேட்ஸ்மேன்கள் இருந்ததால் கொல்கத்தாவின் தோல்வி உறுதியாக பார்க்கப்பட்டது.

இதையும் படிங்க:SRH vs KKR : 3 டெத் ஓவர்களில் மாயாஜாலம் நிகழ்த்திய வருண் சக்ரவர்த்தி – ஹைதராபாத் வெற்றியை பறித்தது எப்படி

ஆனால் 16வது ஓவரில் 5 ரன்களும் 18வது ஓவரில் 4 ரன்கள் மட்டுமே கொடுத்த வருண் சக்கரவர்த்தி கடைசி ஓவரில் 3 ரன்கள் மட்டுமே கொடுத்து டெத் ஓவர்களில் மாயாஜாலம் நிகழ்த்தி ஹைதராபாத் வெற்றியை கொல்கத்தாவின் கொண்டு வந்தார். அதனால் 4வது வெற்றியை பதிவு செய்து கொல்கத்தா 8வது இடத்தில் இருக்கும் நிலையில் ஹைதராபாத் தொடர்ந்து 9வது இடத்தில் உள்ளது.

Advertisement