IPL 2023 : வெளியேறிய லிட்டன் தாசுக்கு பதிலாக முரட்டு வெஸ்ட் இண்டீஸ் வீரரை ஒப்பந்தம் செய்த கே.கே.ஆர் டீம் – வேறலெவல் சாய்ஸ்

Litton-Das
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது இந்த ஆண்டு 16-வது சீசனை எட்டியுள்ளது. அதன்படி கடந்த மார்ச் 31-ஆம் தேதி துவங்கிய இந்த 16-வது ஐபிஎல் தொடரானது தற்போது பாதி போட்டிகளைக் கண்டு இறுதிக்கட்டத்தை நோக்கி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடரின் புள்ளி பட்டியலில் முதன் மூன்று இடங்களில் குஜராத், லக்னோ மற்றும் சென்னை அணிகள் இடம் பிடித்துள்ளன.

IPL-2023

- Advertisement -

அதேபோன்று மற்ற அணிகளும் புள்ளி பட்டியலில் முன்னேறுவதற்கான வாய்ப்பு இருப்பதால் தற்போது அனைத்து அணிகளுக்கும் இடையேயான போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் இடம் பெற்றுள்ள வீரர்களில் பலர் காயம் காரணமாகவும், சிலர் தனிப்பட்ட காரணங்களாலும் விலகி வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது கே.கே.ஆர் அணியில் இடம் பெற்றிருந்த லிட்டன் தாஸ் தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த சீசனில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஐ.பி.எல் மினி ஏலத்தில் 50 லட்ச ரூபாய் என்கிற அடிப்படை விலைக்கு வாங்கப்பட்ட லிட்டன் தாஸ் கொல்கத்தா அணி ஏலத்தில் எடுத்திருந்தாலும் சர்வதேச போட்டியில் விளையாடிய பின்னர் பாதி தொடரிலேயே கொல்கத்தா அணிக்கு திரும்பியிருந்தார்.

Johnson Charles

இந்நிலையில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே விளையாடிய அவர் நான்கு ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேற தற்போது அவர் தனது குடும்ப தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த தொடரில் இருந்து வெளியேறியுள்ளார் என்று கூறியுள்ளது. அதனை தொடர்ந்து அவருக்கு பதிலாக மாற்று வீரராக வெஸ்ட் இண்டீஸை சேர்ந்த அதிரடி துவக்க வீரரான ஜான்சன் சார்லஸை கே.கே.ஆர் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : IPL 2023 : ஐ.பி.எல் தொடரில் அந்த கேப்டனுக்கு கீழ் விளையாட தான் எனக்கு ரொம்ப ஆசை – ஜோ ரூட் வெளிப்படை

அவர்களது இந்த சாய்ஸ் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பினை பெற்றுள்ளது. ஏனெனில் ஜான்சன் சார்லஸ் உலக அளவில் நடைபெறும் டி20 கிரிக்கெட்டில் மிகவும் அதிரடியான ஆட்டத்தை முரட்டுத்தனமாக வெளிப்படுத்துபவர் என்பது குறிப்பிடத்தக்கது..

Advertisement