IPL 2023 : ஐ.பி.எல் தொடரில் அந்த கேப்டனுக்கு கீழ் விளையாட தான் எனக்கு ரொம்ப ஆசை – ஜோ ரூட் வெளிப்படை

Joe-Root
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது கடந்த மார்ச் 31-ம் தேதி துவங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பங்கேற்றுள்ள பத்து அணிகளில் எந்த அணி கோப்பையை வெல்லப் போகிறது என்பது குறித்து எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் பல்வேறு முன்னணி வீரர்கள் விற்கப்படாமலும் இருந்தனர்.

Joe Root 1

- Advertisement -

அதே வேளையில் உலகின் சில முன்னணி வீரர்கள் குறிப்பிட்ட சில அணிகளுக்காக அடிப்படை விலைக்கு வாங்கப்பட்டாலும் இதுவரை களமிறங்காமல் இருந்து வருகின்றனர். மேலும் இளம் வீரர்கள் பலரும் இந்த ஐபிஎல் தொடரில் தங்களது சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்து வருகின்றனர். அதேபோன்று உலகத்தரம் வாய்ந்த முன்னணி வீரர்கள் சிலர் இன்னும் விளையாடாமல் அணியின் ஓய்வறையில் அமர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அடிப்படை விலையான ஒருகோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட ஜோ ரூட் இதுவரை வாய்ப்பு கிடைக்காமல் வெளியில் அமர்ந்திருந்தாலும் சர்வதேச அளவில் அவர் எவ்வளவு பெரிய வீரர் என்பதை நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அந்த வகையில் அனுபவம் வாய்ந்த வீரரான ஜோ ரூட் இதுவரை ஐபிஎல் தொடரில் விளையாடாத வேளையில் ராஜஸ்தான் அணியில் இந்த ஆண்டு இடம் பிடித்த அவர் தற்போது அந்த அணியுடன் பயணித்து வருகிறார்.

MS Dhoni 1

இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நிர்வாகம் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ பதிவில் அவர் இந்த ஐபிஎல் தொடரில் எந்த கேப்டனுக்கு கீழ விளையாட ஆசை என்பது குறித்து தனது பதிலை வெளிப்படுத்தியுள்ளார். அதன்படி வெளியான அந்த கேள்வியில் : ஐபிஎல் தொடரில் விராட் கோலி அல்லது எம்.எஸ் தோனி ஆகிய இருவரில் யாரது கேப்டன்சியின் கீழ் நீங்கள் விளையாட ஆசைப்படுகிறீர்கள்? என்று எழுப்பப்பட்டது.

- Advertisement -

அந்த கேள்விக்கு எந்தவித தயக்கமும் இன்றி தோனியின் கீழ் விளையாட ஆர்வம் என்று ஜோ ரூட் தெரிவித்தார். அதேபோன்று ராஜஸ்தான் அணியின் துருவ் ஜுரல் மற்றும் படிக்கல் ஆகிய இளம்வீரர்களும் தோனியின் கீழ் விளையாடவே ஆசைப்படுவதாக தெரிவித்தனர்.

இதையும் படிங்க : IPL 2023 : சும்மா சும்மா கேட்டு டார்ச்சர் பண்ணாதீங்க, ஃபீரியா விளையாட விடுங்க அது அவரோட முடிவு – சேவாக் விளாசல்

தற்போது 41 வயதான தோனி இந்த ஆண்டு தனது கடைசி சீசனில் விளையாடி வருவதாக கூறப்பட்டு வரும் வேளையில் கடைசியாக நடைபெற்று முடிந்த லக்னோ அணிக்கு எதிரான போட்டியின் போது டாசில் : நீங்கள் வேண்டுமென்றால் இது என்னுடைய கடைசி தொடர் என்று நினைக்கலாம். ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது..

Advertisement