- Advertisement -

வெறும் 1 ரன்.. ஒரே ஓவரில் 6, 6, 6, 6, 6.. வெறித்தனமான போராடிய பராக் அரிய சாதனை.. ராஜஸ்தானை சாய்த்த கொல்கத்தா

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மே 4ஆம் தேதி மதியம் 3.30 மணிக்கு கொல்கத்தாவில் 53வது போட்டி நடைபெற்றது. அப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி ராஜஸ்தானுக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய கொல்கத்தாவுக்கு சுனில் நரேன் 11 ரன்னில் அவுட்டானாலும் ரகமனுல்லா குர்பாஸ் அதிரடியாக விளையாடி 35 (25) ரன்னில் பெவிலியன் திரும்பினார்.

அவருடன் சேர்ந்து விளையாடிய கேப்டன் ரகானே 30 (24) ரன்கள் எடுத்திருந்த போது ரியான் பராக் சுழலில் சிக்கினார். அடுத்ததாக ஆண்ட்ரே ரசல் – ரகுவன்சி ஆகியோர் ஜோடி சேர்ந்து அபாரமாக பேட்டிங் செய்தனர். அதில் ஆரம்பத்தில் தடுமாறிய ரசல் 10 பந்துகளுக்கு பின் தம்முடைய ஸ்டைலில் அடித்து நொறுக்கி வேகமாக ரன்கள் குவித்தார்.

- Advertisement -

ரசல் மிரட்டல்:

அவருடன் சேர்ந்து 61 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைச்சர் ரகுவன்சி 44 (31) ரன்களில் ஜோப்ரா ஆர்ச்சர் வேகத்தில் பெவிலியன் திரும்பினார். ஆனால் மறுபுறம் தொடர்ந்து மிரட்டிய ரசல் அரை சதத்தை அடித்து 57* (25) ரன்கள் குவித்தார். இறுதியில் ரிங்கு சிங் 19* (6) ரன்கள் விளாசி அபாரமான ஃபினிஷிங் கொடுத்ததால் 20 ஓவரில் கொல்கத்தா 206/4 ரன்களை எடுத்தது.

ராஜஸ்தானுக்கு ஜோப்ரா ஆர்ச்சர், யுவ்திர் சிங், தீக்சனா, ரியான் பராக் தலா 1 விக்கெட் எடுத்தனர். அடுத்ததாக விளையாடிய ராஜஸ்தானுக்கு வைபவ் சூரியவன்சி 4, குணால் சிங் 0 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் 8/2 என தடுமாறிய அந்த அணிக்கு மறுபுறம் அதிரடி காட்டிய ஜெய்ஸ்வால் 34 (21) ரன்னில் அவுட்டானார். ஆனால் அடுத்து வந்த துருவ் ஜூரேல், ஹசரங்காவை அடுத்தடுத்து தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி டக் அவுட்டாக்கினார்.

- Advertisement -

பராக் வெறித்தனம்:

அதனால் 71/5 என சரிந்த ராஜஸ்தான் தோல்வியின் பிடியில் சிக்கியது. அப்போது கேப்டன் ரியான் பராக் அதிரடியாக விளையாடினார். அதிலும் மொயின் அலி வீசிய 13வது ஓவரின் முதல் பந்தில் ஹெட்மயர் சிங்கிள் எடுத்தார். அடுத்த 5 பந்துகளில் ரியான் பராக் 6, 6, 6, 6, ஒய்ட் 6 என அடுத்தடுத்து 5 சிக்ஸர்களை தெறிக்க விட்டார். அதன் வாயிலாக கிறிஸ் கெய்ல் (2012), ராகுல் திவட்டியா (2020), ரவீந்திர ஜடேஜா (2021), ரிங்கு சிங்கிற்கு (2023) பின் ஒரே ஓவரில் 5 சிக்சர் அடித்த வீரர் என்ற அரிய சாதனையையும் பராக் படைத்தார்.

அதோடு நிற்காத அவர் சக்கரவர்த்தி வீசிய அடுத்த ஓவரில் தாம் எதிர்கொண்ட முதல் பந்தில் சிக்சர் அடித்தார். அந்த வகையில் 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் அடித்த அவர் வெறித்தனமாக வெற்றிக்கு போராடினார். ஆனால் எதிர்ப்புறம் ஹெட்மயர் 29 ரன்னில் அவுட்டான நிலையில் மறுபுறம் சதத்தை அடிப்பார் பார்க்கப்பட்ட பராக் 95 (45) ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்துடன் சென்றார்.

- Advertisement -

த்ரில் வெற்றி:

இறுதியில் வைபவ் அரோரா வீசிய கடைசி ஓவரில் ஆர்ச்சர் 2, 1 ரன்கள் எடுத்தார். அடுத்த 3 பந்துகளில் சுபம் துபே 6, 4, 6 அடித்ததால் போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் கடைசி பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்ட போது கொல்கத்தா அபாரமாக செயல்பட்டு ஆர்ச்சரை ரன் அவுட் செய்தது. அதனால் 20 ஓவரில் 205/8 ரன்கள் மட்டுமே எடுத்த ராஜஸ்தானை ஒரு ரன் வித்தியாசத்தில் தோற்கடித்த கொல்கத்தா பிளே ஆஃப் செல்லும் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது.

இதையும் படிங்க: உண்மையான மிஸ்டர் ஐ.பி.எல் விராட் கோலி தான்.. சுரேஷ் ரெய்னாவை மறைமுகமாக சீண்டிய – சேவாக்

அதிகபட்சமாக மொயின் அலி, ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட் எடுத்தனர். மறுபுறம் சுபம் துபே 25* (14), ஆர்ச்சர் 12 ரன்கள் எடுத்து போராடியும் ராஜஸ்தான் 9வது தோல்வியை சந்தித்தது.

- Advertisement -