சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 52 லீக் போட்டியில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது சென்னை அணியை 2 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றியை பெற்று இந்த தொடரில் தங்களது 8 ஆவது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் மீண்டும் முதலிடத்திற்கு சென்றது.
சுரேஷ் ரெய்னாவை சீண்டிய சேவாக் :
அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய பெங்களூரு அணி 213 ரன்களை குவிக்க பின்னர் 214 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சென்னை அணியால் 211 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்ததால் 2 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. பெங்களூரு அணி சார்பாக விராட் கோலி அதிக ரன்களை குவித்திருந்தார்.
இந்த போட்டியில் 33 பந்துகளை சந்தித்த அவர் 5 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்கள் என 62 ரன்கள் குவித்து அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தியிருந்தார். அவரது இந்த சிறப்பான ஆட்டத்தின் மூலம் ஐபிஎல் வரலாற்றில் 8500 ரன்கள் குவித்த முதல் வீரராகவும், சென்னை அணிக்கு எதிராக அதிக அரைசதங்கள் அடித்த பேட்ஸ்மேனாகவும் சாதனை நிகழ்த்தினார்.
இந்நிலையில் விராட் கோலியின் இந்த ஆட்டத்தை பாராட்டிய முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் “மிஸ்டர் ஐபிஎல்” என்ற பட்டம் கோலிக்கு சரியாக இருக்கும் என்று குறிப்பிட்டு அவரை பாராட்டி இருக்கிறார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : 2016 ஆம் ஆண்டு விராட் கோலி விளையாடியது எனக்கு இன்னும் நன்றாக நினைவில் இருக்கிறது. அதேபோன்ற ஆட்டத்தை தற்போது அவர் விளையாடி வருகிறார்.
பொதுவாக ஒரு பேட்ஸ்மேன் சில பந்துகளை எடுத்துக்கொண்டு பின்னர் தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார். ஆனால் விராட் கோலி இந்த போட்டியில் வந்தது முதலே அடிக்க வேண்டும் என்ற நினைப்புடன் மிகச்சிறப்பாக விளையாடியிருந்தார். எந்த ரிஸ்க்கையும் எடுத்துக் கொள்ளாமல் பேட்டிங் செய்யும் அவரின் ஸ்டைல் மிகவும் பிடித்திருக்கிறது. என்னை பொறுத்தவரை அவர்தான் “மிஸ்டர் ஐ.பி.எல்” என சேவாக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க : இளம் வீரர் காணாம போகணுமா? 110 சாதனை டாட் வீசியவரை தோனி செலக்ட் பண்ணது கரெக்ட் தான்.. பிளெமிங் ஆதரவு
ஏற்கனவே ஐபிஎல் தொடரில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சிஎஸ்கே அணியின் நட்சத்திர முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னாவிற்கு “மிஸ்டர் ஐபிஎல்” என்கிற பட்டம் இருந்து வரும் வேளையில் அவரை மறைமுகமாக சீண்டும் வகையில் விராட் கோலியை “மிஸ்டர் ஐபிஎல்” என வீரேந்திர சேவாக் குறிப்பிட்டுள்ளார்.



