IPL 2023 : பேசாம உங்க பெயர அப்டி மாத்திக்கோங்க, ரோஹித் சர்மாவை விளாசிய ஸ்ரீகாந்த் – ரசிகர்கள் கொந்தளிப்பு

- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் மே 6ஆம் தேதி மதியம் 3.30 மணிக்கு தமிழகத்தின் தலைநகர் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற 49வது லீக் போட்டியில் வெற்றிகரமான மும்பையை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த சென்னை தங்களுடைய 6வது வெற்றியை பதிவு செய்தது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை ஆரம்ப முதலே சென்னையின் நேர்த்தியான பந்து வீச்சில் தடுமாறி 20 ஓவர்களில் 139/8 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதிகபட்சமாக நேஹல் வதேரா 64 (51) ரன்கள் எடுக்க சென்னை சார்பில் அதிகபட்சமாக மதிஷா பதிரனா 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

அதைத் துரத்திய சென்னைக்கு ருதுராஜ் கைக்வாட் 30 (16) டேவோன் கான்வே 44 (42) அஜிங்க்ய ரகானே 21 (17) சிவம் துபே 26* (18) என களமிறங்கிய அனைத்து பேட்ஸ்மேன்களும் நல்ல ரன்களை எடுத்து 17.4 ஓவரிலேயே வெற்றியை பெற்றுக் கொடுத்தனர். குறிப்பாக 2010க்குப்பின் 5 தொடர் தோல்விகளுக்கு பின் 12 வருடங்கள் கழித்து மும்பையைb சேப்பாக்கத்தில் தோற்கடித்து சென்னை நிம்மதியடைந்தது. மறுபுறம் பந்து வீச்சில் அதிகபட்சமாக பியூஸ் சாவ்லா 2 விக்கெட்டுகளை எடுத்து போராடியும் பேட்டிங்கில் சொதப்பிய காரணத்தால் மும்பை தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

பேரை மாத்துங்க:
அதிலும் குறிப்பாக சமீப காலங்களில் சுமாரான தவித்து வரும் ரோகித் சர்மா கடந்த வருடம் முதல் முறையாக தன்னுடைய கேரியரில் ஒரு அரை சதம் கூட அடிக்காமல் புள்ளி பட்டியலில் மும்பை கடைசி இடத்தைப் பிடிக்க முக்கிய காரணமாக அமைந்தார். அதே போல இந்தியாவுக்காகவும் சமீப ஹிட்மேன் என்ற தனது பெயருக்கேற்றார் போல் செயல்படாமல் தடுமாறி வரும் அவர் அவை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்க இந்த சீசனில் அதிரடியாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கினார்.

ஆனால் ஒரே ஒரு போட்டியில் மட்டும் அரை சதடித்த அவர் எஞ்சிய 9 போட்டிகளில் சொதப்பலாக செயல்பட்டு வருகிறார். அதிலும் குறிப்பாக பஞ்சாப்புக்கு எதிரான கடந்த போட்டியில் 215 ரன்களை சேசிங் செய்யும் போது டக் அவுட்டான அவர் இந்த போட்டியில் மிடில் ஆடரில் விளையாடும் திட்டத்தை கையிலெடுத்தார். இருப்பினும் கேமரூன் கிரீன் அவுட்டானதும் களமிறங்கிய அவர் ஸ்டம்புகளுக்கு அருகே நின்று தீபக் சஹாரை மெதுவாக வீசுமாறு சொன்ன தோனியின் வலையில் சிக்கியதைப் போல் தேவையின்றி விக்கெட் கீப்பருக்கு பின்னே அடிக்க முயற்சித்து மீண்டும் 3 பந்துகளில் டக் அவுட்டானார்.

- Advertisement -

அதனால் 14/3 என ஆரம்பத்திலேயே சரிந்த மும்பை அதிலிருந்து மீள முடியாமல் தோல்வியை சந்தித்தது. அதை விட இந்த போட்டியையும் சேர்த்து ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை டக் அவுட்டான வீரர் என்ற மோசமான சாதனையை இதற்கு முன் தினேஷ் கார்த்திக், மந்தீப் சிங், சுனில் நரேன் (தலா 15) ஆகியோருடன் பகிர்ந்து கொண்டிருந்த அவர் அதை தற்போது முழுக்க முழுக்க தன்வசமாக்கி (16* முறை) பரிதாப சாதனை படைத்தார். அதன் காரணமாக ஏமாற்றமடைந்த ரசிகர்கள் ஹிட்மேன் என்ற பெயருக்கேற்றார் போல் அதிரடி காட்டுவார் என்று பார்த்தால் டக்மேன் போல் செயல்படுவதாக அவரை சமூக வலைதளங்களில் கலாய்த்து வருகிறார்கள்.

சொல்லப்போனால் கடந்த சில வருடங்களாகவே தடுமாறுவதால் ஹிட்மேன் ஃபார்முக்கு திரும்புவார் என்று காத்திருந்து காத்திருந்து மும்பை ரசிகர்களும் அவரது ரசிகர்களும் ஏமாற்றமடைந்து வருகின்றனர். இந்நிலையில் ரசிகர்களைப் போலவே ஏமாற்றத்தை சந்தித்த முன்னாள் இந்திய வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் இந்த போட்டியில் டக் அவுட்டானதால் அதிருப்தியடைந்து பேசாமல் உங்கள் பெயரை நோ ஹிட் சர்மா என்று மாற்றிக் கொள்ளுமாறு ரோகித் சர்மாவை கலாய்க்கும் வகையில் விமர்சித்துள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் நேரலையில் பேசியது பின்வருமாறு.

இதையும் படிங்க:வீடியோ : பகையை மறந்து இந்தியர்களாக கை கொடுத்துக் கொண்ட தாதா கங்குலி – கிங் கோலி, விவரம் இதோ

“ரோகித் சர்மா தன்னுடைய பெயரை நோ ஹிட் சர்மா என்று மாற்றிக்கொள்ள வேண்டும். ஒருவேளை நான் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்தால் நிச்சயமாக அவருக்கு விளையாடும் 11 பேர் அணியில் கூட வாய்ப்பு கொடுக்க மாட்டேன்” என்று கூறினார். பொதுவாகவே சற்று கலகலப்புடன் பேசக்கூடிய ஸ்ரீகாந்த் இப்படி நேரலையில் உண்மையை பேசியுள்ளார். ஆனால் ஃபார்மின்றி தவிப்பது அனைவருக்கும் சகஜமான என்பதை புரிந்து கொள்ளாமல் அவர் இப்படி மரியாதையின்றி பேசுவதாக ரோகித் சர்மாவின் ரசிகர்கள் கொந்தளிக்கின்றனர்.

Advertisement