கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பெயர் மாற்றம். பி.சி.சி.ஐ கொடுத்த அனுமதி – புதிய பெயர் இதோ

KXIP

இந்தாண்டு நடக்கயிருக்கும் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடருக்கான வீரர்களின் ஏலம் வரும் 18-ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க விரும்பும் வீரர்கள் தங்களின் பெயர்களை பதிவு செய்யலாம் என முன்பே அறிவிக்கப்பட்டிருந்ததை தொடர்ந்து கடந்த வாரம் 1,097 வீரர்கள் மொத்தமாக ஏலத்தில் பங்கேற்க விருப்பம் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் முதற்கட்டப் பட்டியல் அதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்டது. இந்தப் பட்டியலில் இருந்து தங்களுக்கு விருப்பமான வீரர்களின் பெயர்களை அணிகள் தனித்தனியே தேர்வு செய்து வைத்திருந்துனர்.

auction-1

இந்நிலையில் அணிகள் தேர்தெடுத்த பட்டியலில் இருந்து தற்போது ஏலத்துக்கான இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 292 வீரர்கள் அடங்கிய இறுதிப்பட்டியலில், முதற்கட்டப் பட்டியலில் இடம்பெறாத 17 புதிய வீரர்களும் இடம்பெற்றுள்ளார்கள். அணிகளின் கோரிக்கையை ஏற்று இந்த 17 புதிய வீரர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. பட்டியலில் உள்ள வீரர்களே ஏலத்தில் கலந்துகொள்வார்கள்.

இந்நிலையில் ‘கிங்ஸ் லெவன் பஞ்சாப்’ அணியின் பெயர் ‘பஞ்சாப் கிங்ஸ்’ என பெயர் மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்தப் பெயர் மாற்றம் குறித்த தகவல்களை பிசிசிஐயிடம் பஞ்சாப் அணி நிர்வாகம் முறைப்படி கடிதம் மூலம் தெரிவித்ததாகவும் அதற்கு பிசிசிஐ ஏற்கெனவே ஒப்புதல் தெரிவித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

kxip

மேலும் பெயர் மாற்றம் குறித்து முறையான அறிவிப்பை அணி நிர்வாகம் பிப்ரவரி 18 ஆம் தேதிக்கு முன்னதாக அறிவிக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 13 ஆண்டுகால ஐபிஎல் வரலாற்றில் இதுவரை பஞ்சாப் அணி ஒரு முறை இரண்டாம் இடமும், ஒரு முறை 3 ஆம் இடமும் பெற்றுள்ளது. அந்த அணி இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது என்பது குறிப்பிடதக்கது.

- Advertisement -

kxip

புதிய பெயர் மாற்றம் கோப்பையை கைப்பற்றி தருமா என்று பஞ்சாப் ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர். மேலும் கடந்த ஆண்டு ராகுலின் தலைமையில் ஆரம்பத்தில் பல போட்டிகளை தோற்றாலும் இறுதி நேரத்தில் சிறப்பான சில வெற்றிகளை பெற்றது. இதன்காரணமாக இந்த வருடம் நிச்சயம் அந்த அணி பல வெற்றிகளை பெறும் என்று கூறப்படுகிறது.