முரட்டு தனமான பேட்டிங். தோற்றாலும் 3 இந்திய வீரர்களை காயமடைய செய்த பொல்லார்டு – நடந்தது என்ன?

Pollard
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதலாவது டி20 போட்டி நேற்று கொல்கத்தா மைதானத்தில் நடைபெற்றது. இந்திய நேரப்படி நேற்று இரவு ஏழு முப்பது மணிக்கு துவங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தார். அதன்படி முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்களை குவித்தது.

INDvsWI

- Advertisement -

அதனைத் தொடர்ந்து 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 18.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 162 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதோடு இந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த போட்டியின்போது முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது 13.5 ஓவர்களில் 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் களத்திற்கு வந்த பொல்லார்டு இந்திய பந்துவீச்சாளர்களை அதிரடியாக எதிர்கொள்ள வேண்டும் என்று பலமாகவே அடித்து விளையாடினார்.

pollard 1

ஆனாலும் அவரால் பெரிய அளவு ரன் குவிக்க முடியாமல் இறுதிவரை களத்தில் நின்று 19 பந்துகளை சந்தித்து 2 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் என 24 ரன்களை மட்டுமே குவித்தார். இப்படி குறைவான ரன்களை அவர் அடித்தாலும் அவருடைய ஷாட்டுக்கள் அனைத்தும் பலமாக இருந்தது. முரட்டுத்தனமான ஷாட்டுகளை அவர் விளையாடிய போதிலும் பந்துகள் பவுண்டரியை கடக்கவில்லை.

- Advertisement -

இருப்பினும் இந்த போட்டியில் தனது அசுர பலத்தை காட்டி அவர் அடித்த பந்தை பிடிக்க முயன்ற இந்திய வீரர்கள் வெங்கடேஷ் ஐயர், தீபக் சாகர் மற்றும் ஹர்ஷல் பட்டேல் ஆகியோர் தங்களது கைகளில் காயம் அடைந்தனர். பொல்லார்டு அடித்த பந்தை தடுக்க நினைத்து மூன்று பேரும் கையில் அடிபட்டு ஒரே நேரத்தில் காயமடைந்தது மட்டுமின்றி அதனால் ஏற்பட்ட வீக்கம் காரணமாக டக் அவுட்டில் அமர்ந்து ஒத்தடம் கொடுக்கப்பட்டதையும் பார்க்க முடிந்தது.

இதையும் படிங்க : ஷ்ரேயாஸ் ஐயரை அணியில் சேர்க்காததற்கு இதுவே காரணம். என்ன பண்றது – வருத்தம் தெரிவித்த ரோஹித்

நல்ல வேளையாக யாருக்கும் பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை. வெங்கடேஷ் ஐயர் கையில் காயம் அடைந்திருந்தாலும் இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்ய வந்து 13 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 24 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இந்திய அணியை வெற்றி பெறச் செய்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement