அவங்க இல்லாம நான் எப்டி ஜெயிக்க முடியும்? டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் தோல்வி பற்றி – ரோஹித் சோகமான பேட்டி

Rohit
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா களமிறங்கும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ஜூலை 12ஆம் தேதி டாமினிக்கா நகரில் துவங்கியது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் இந்த தொடரில் புஜாரா, ஷமி போன்ற சீனியர்கள் கழற்றி விடப்பட்டு ஜெய்ஸ்வால், ருதுராஜ் போன்ற இளம் வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இருப்பினும் இந்த தொடரில் கேப்டனாக ரோஹித் சர்மா செயல்படுவது நிறைய முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம்.

TEam India Rohit Sharma

- Advertisement -

ஏனெனில் உலகக் கோப்பையை வென்று கொடுக்கவில்லை என்பதற்காக பதவி விலகிய விராட் கோலிக்கு பின் 5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற காரணத்தால் ரோஹித் சர்மா கேப்டனாக பொறுப்பேற்றார். அதில் வழக்கம் போல இருதரப்பு தொடர்களை வென்ற அவரது தலைமையில் 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் வெற்றியை பதிவு தவறிய இந்தியா 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலிலும் கொஞ்சம் கூட போராடாமல் 209 ரன்கள் வித்தியாசத்தில் மெகா தோல்வியை சந்தித்தது.

காரணம் என்ன:
அந்தப் போட்டியில் டாஸ் அதிர்ஷ்டத்தை பெற்ற அவர் முதலில் பேட்டிங் செய்யாமல் ஆஸ்திரேலிய அணியில் 5 இடது கை வீரர்கள் இருந்தும் தரவரிசையில் நம்பர் ஒன் பவுலராக இருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வினை தேர்ந்தெடுக்காதது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அது போக சமீப காலங்களாகவே பேட்டிங்கில் தடுமாறும் அவர் சுமாரான ஃபிட்னஸ் கடைப்பிடித்து அடிக்கடி காயம் மற்றும் பணிச்சுமை காரணமாக ஓய்வெடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார். அதனால் 36 வயதாகும் அவர் பதவி விலக வேண்டுமென விரும்பும் ரசிகர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் புதிய அணியை உருவாக்க வேண்டுமென்ற கோரிக்கைகள் வைக்கின்றனர்.

Jasprith Bumrah India

இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதுவும் இங்கிலாந்து போன்ற வெளிநாட்டு மண்ணில் வெற்றி பெறுவதற்கு தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் அவசியமாக பார்க்கப்படும் நிலையில் பும்ரா காயத்தால் வெளியேறியது ஃபைனலில் பெரிய பின்னடைவை கொடுத்ததாக ரோகித் சர்மா கூறியுள்ளார். மேலும் ரிஷப் பண்ட், கேஎல் ராகுல் ஆகியோரும் காயத்தால் விலகியதால் 100% தரமான வலுவான இந்திய அணியை வழி நடத்தும் வாய்ப்பு தமக்கு கிடைக்கவில்லை என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பிசிசிஐ இணையத்தில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“முதலில் நமது அணியில் அனைத்து வீரர்களும் விளையாடுவதை நான் விரும்புகிறேன். குறிப்பாக நான் விரும்பும் என்னுடைய முக்கிய வீரர்கள் 100% விளையாடுவதற்கு தயாராக இருப்பதை விரும்புகிறேன். மாறாக முக்கிய வீரர்கள் எவ்விதமான காயத்தையும் சந்திப்பதை விரும்பவில்லை. அது தான் அனைத்திற்கும் முழுமுதற் காரணமாகும். எனவே அனைத்தும் சரியாக அமைந்து நீங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாடும் போது அனைத்தும் உங்களுக்கு பரிசாக கிடைக்கத் துவங்கும். அந்த வகையில் கடந்த பல வருடங்களாகவே சிறப்பாக செயல்பட்டு வரும் எங்களுக்கு முக்கிய நேரங்களில் சில அதிர்ஷ்டமும் தேவைப்படுகிறது”

Rohit Sharma

“குறிப்பாக கடந்த 5 – 6 வருடங்களில் உலகின் அனைத்து இடங்களிலும் நாங்கள் வென்றோம். ஆனால் ஐசிசி கோப்பைகளை வெல்வதே முக்கியம். இருப்பினும் தற்போதைய நிலைமையில் அடுத்த தொடருக்கு முன்பாக நாம் வெற்றிக்காக கடினமாக போராடுவது அவசியமாகும். மேலும் இந்த வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் பெரும்பாலும் வேகப்பந்து வீச்சாளர்கள் அதிக விக்கெட்டுகளை எடுத்துள்ளனர். அப்படிப்பட்ட நிலையில் தற்போது நிறைய வீரர்கள் காயமடைந்துள்ளதால் நாம் பவுலர்களை சுழற்சி முறையில் பயன்படுத்த வேண்டியுள்ளது”

இதையும் படிங்க:என்னோட வைஃப் சிரிச்சாங்க, தாடை உடைந்தும் பந்து வீசியது ஏன்? மறக்க முடியாத 2002 பின்னணியை பகிர்ந்த கும்ப்ளே

“அந்த நிலையில் பார்க்கும் போது நம்மிடம் குறைவான வேகப்பந்து வீச்சாளர்களே இருக்கின்றனர். குறிப்பாக இந்தியாவில் விளையாடிய போது நிறைய பவுலர்கள் காயத்தை சந்தித்தனர். அதனால் தான் இந்த தொடருக்கு எங்களுடைய அனுபவமிக்க பவுலர்கள் வரவில்லை” என்று கூறினார். அவர் கூறுவது போல 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையிலும் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலிலும் இந்தியாவின் கருப்பு குதிரையான பும்ரா காயத்தால் பங்கேற்காதது தோல்விக்கு முதன்மை காரணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement