ரொம்ப தேங்க்ஸ் தம்பி.. என் பெயரை காப்பாத்திட்டீங்க.. கில்லுக்கு நன்றி சொன்ன பீட்டர்சன்.. காரணம் என்ன?

- Advertisement -

இந்திய கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் 2019ஆம் ஆண்டு அறிமுகமாகி 2021 காபா டெஸ்ட் வெற்றியில் 91 ரன்கள் அடித்து முக்கிய பங்காற்றினார். அதன் பின் 2022 ஐபிஎல் தொடரில் குஜராத் கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றிய அவர் அப்படியே மூன்று வகையான இந்திய அணியிலும் நிலையான வாய்ப்புகளைப் பெற்று நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தினார்.

அந்த வரிசையில் கடந்த வருடம் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற உலக சாதனை படைத்த அவர் ஒரு காலண்டர் (2023) வருடத்தில் 3 வகையான கிரிக்கெட்டிலும் சதமடித்த முதல் இந்திய துவக்க வீரர் என்று சாதனையும் படைத்தார். அதே போல 2023 ஐபிஎல் தொடரின் ஆரஞ்சு தொப்பியையும் வென்றதால் சச்சின், விராட் கோலி வரிசையில் இந்திய பேட்டிங் துறையின் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று அவரை ரசிகர்கள் பாராட்டினார்.

- Advertisement -

நன்றி கில்:
இருப்பினும் 2023 உலகப் கோப்பையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதிலிருந்து தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் கடைசி 18 இன்னிங்ஸ்களில் ஒரு அரை சதம் கூட அடிக்காமல் திண்டாடினார். அதனால் புஜாரா உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி தயாராக இருக்கிறார் என்று ரவி சாஸ்திரி போன்ற முன்னாள் வீரர்கள் அவருக்கு எச்சரிக்கை கொடுத்தனர்.

மேலும் வாய்ப்பின் அருமையை உணரும் வரை அவரை அணியிலிருந்து நீக்குங்கள் என்று ரசிகர்களும் விமர்சித்தனர். ஆனால் தென்னாப்பிரிக்காவின் ஜேக் காலிஸ் கூட முதல் 10 டெஸ்ட் போட்டிகளில் 22 என்ற சுமாரான சராசரியில் தடுமாறினாலும் நாளடைவில் ஜாம்பவானாக உருவெடுத்ததாக கெவின் பீட்டர்சன் கூறினார். அதே போல சுப்மன் கில் விரைவில் அசத்துவார் என்பதால் அவருக்கு கொஞ்சம் நேரம் கொடுங்கள் என்றும் அவர் பிப்ரவரி 2ஆம் தேதி ட்விட்டரில் ஆதரவு தெரிவித்தார்.

- Advertisement -

அந்த சூழ்நிலையில் இங்கிலாந்து எதிரான முதல் போட்டியில் சுமாராக விளையாடிய கில் இரண்டாவது போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஏமாற்றத்தை கொடுத்தாலும் இரண்டாவது இன்னிங்ஸில் சதமடித்து 104 ரன்கள் குவித்தார். அதனால் தன்னுடைய விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ள அவர் இரண்டாவது போட்டியில் 399 ரன்கள் என்ற பெரிய இலக்கை இந்தியா நிர்ணயிப்பதற்கு முக்கிய பங்காற்றி ஓரளவு ஃபார்முக்கு திரும்பியுள்ளார்.

இதையும் படிங்க: அஸ்வின் வேடிக்கையான தப்பு பண்ணிட்டாரு.. ரவி சாஸ்திரி, பீட்டர்சன் விமர்சனம்.. நடந்தது என்ன?

இந்நிலையில் தம்முடைய கணிப்பை பொய்யாக்காமல் ஆதரவை நியாயப்படுத்தும் வகையில் சதமடித்துள்ள அவருக்கு “நன்றி சுப்மன் கில்” என்று மீண்டும் ட்விட்டரில் கெவின் பீட்டர்சன் பதிவிட்டு பாராட்டியுள்ளார். இதை தொடர்ந்து விசாகப்பட்டினத்தில் நடைபெறும் இரண்டாவது போட்டியில் 399 ரன்களை துரத்தும் இங்கிலாந்து மூன்றாவது நாள் முடிவில் 67/1 ரன்கள் எடுத்துள்ளது. எனவே எஞ்சிய 9 விக்கெட்களை எடுத்து இந்தியா வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement