அஸ்வின் வேடிக்கையான தப்பு பண்ணிட்டாரு.. ரவி சாஸ்திரி, பீட்டர்சன் விமர்சனம்.. நடந்தது என்ன?

- Advertisement -

இந்தியா மற்றும் கிரிக்கெட் அணிகள் மோதி வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் அப்போட்டியில் முதலில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா ஜெயஸ்வால் 209 ரன்கள் எடுத்த உதவியுடன் 396 ரன்கள் எடுத்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து தங்களுடைய முதல் இன்னிங்ஸில் 253 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அதிகபட்சமாக ஜாக் கிராவ்லி 76 ரன்கள் எடுத்த இந்தியா சார்பில் அதிகபட்சமாக பும்ரா 6 விக்கெட்டுகள் சாய்த்தார். அதைத் தொடர்ந்து 143 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இந்தியா தங்களுடைய இரண்டாவது இன்னிங்ஸில் போராடி 255 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சுப்மன் கில் சதமடித்து 104 ரன்கள் எடுக்க இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக டாம் ஹார்ட்லி 4 விக்கெட்கள் எடுத்தார்.

- Advertisement -

அஸ்வினின் தவறு:
இறுதியில் 399 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வரும் இங்கிலாந்து மூன்றாவது நாள் முடிவில் 67/1 ரன்கள் எடுத்துள்ளது. முன்னதாக இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 229/8 என இந்தியா தடுமாறிய போது அஸ்வின் மற்றும் பும்ரா ஆகியோர் ஜோடி சேர்த்து பேட்டிங் செய்தனர். அதில் பும்ராவுக்கு பேட்டிங் பெரியளவில் தெரியாது என்பதால் பொறுப்பை தோளில் எடுத்துக் கொண்ட அஸ்வின் விக்கெட்டை விடக்கூடாது என்பதற்காக ஓவரில் கடைசி பந்தில் சிங்கிள் எடுத்து ஸ்ட்ரைக்கை தொடர்ந்து தன்வசம் வைத்துக் கொண்டார்.

அப்போது கிடைத்த சில சிங்கிள்களையும் அஸ்வின் எடுக்காமல் பும்ராவை காப்பாற்றினார். மறுபுறம் 26 பந்துகளை எதிர்கொண்ட பும்ரா முடிந்தளவுக்கு போராடியும் கடைசி வரை 1 ரன் கூட எடுக்காமல் டக் அவுட்டாகி சென்றார். மறுபுறம் அவரைக் காப்பாற்ற முயற்சித்த அஸ்வினும் போராடி 29 ரன்கள் எடுத்து கடைசி விக்கெட்டாக அவுட்டானார்.

- Advertisement -

அந்த வகையில் பும்ராவுடன் சேர்ந்து 26 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அஸ்வின் தம்மால் முடிந்தளவுக்கு இந்தியாவை காப்பாற்ற முயற்சித்தார் என்றே சொல்லலாம். இருப்பினும் அந்த சமயத்தில் பும்ராவுக்கும் ஸ்ட்ரைக்கை கொடுத்து சிங்கிள் எடுத்திருந்தால் இந்தியா 430 – 440 ரன்கள் எடுத்திருக்கலாம் என்று அஸ்வினின் திட்டத்தை ரவி சாஸ்திரி நேரலையில் விமர்சித்தது பின்வருமாறு.

இதையும் படிங்க: உருவான தரமான புதிய தலைமுறை.. 60 வருடங்கள் கழித்து இந்திய கிரிக்கெட்டில் நிகழ்ந்த 2 அரிதான நிகழ்வு

“இதை புரிந்து கொள்வது கடினமாக இருக்கிறது. தேநீர் இடைவேளையில் இருந்த நிலைமைக்கு இந்தியா 430 – 440 ரன்கள் அடிக்க முயற்சித்திருக்க வேண்டும். ஆனால் அதை செய்யாத அவர்கள் ஸ்கோர்போர்டை நகர்த்த விடவில்லை” என்று கூறினார். அதே தவறை கெவின் பீட்டர்சன் விமர்சித்தது பின்வருமாறு. “அவர்கள் சில வாய்ப்புகளை வீணடித்தார்கள். டெய்ல் எண்டருடன் அஸ்வின் என்ன செய்கிறார் என்பது எனக்கு தெரியவில்லை. 211/4 என்ற நிலைமையில் இருந்த இந்தியா 255 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. எனவே அவர்கள் இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளும் வாய்ப்பை வீணடித்தனர். ஒருவேளை 400க்கும் மேற்பட்ட ரன்களை இலக்காக நிர்ணயித்திருந்தால் அது இந்தியாவுக்கு முழுமையான வெற்றியை கொடுத்திருக்கும்” என்று கூறினார்.

Advertisement