
இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதனால் 1 – 0* என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் இந்தியா சொந்த மண்ணில் வலுவான அணி என்பதைக் காண்பித்து வருகிறது. முன்னதாக நாக்பூரில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா 2 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தையே கொடுத்தார்.
தற்சமயத்தில் சுமாரான ஃபார்மில் இருக்கும் அவர் சாம்பியன்ஸ் டிராபிக்கு முன் மீண்டும் அசத்துவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் முதல் போட்டியிலேயே ஏமாற்றத்தைக் கொடுத்த அவர் பேசாமல் ஓய்வு பெறலாம் என்று சில ரசிகர்கள் விமர்சித்தார்கள். இந்நிலையில் முதல் போட்டியில் ரோகித் சர்மா களமிறங்கியதும் இந்திய ரசிகர்கள் வெறித்தனமாக கொண்டாடியதாக கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.
மறுபுறம் இங்கிலாந்து அணியினர் அவரை முறைத்துப் பார்த்ததாகவும் கெவின் பீட்டர்சன் கூறியுள்ளார். ஏனெனில் ஒருநாள் கிரிக்கெட்டில் சிறப்பான சராசரியைக் கொண்டுள்ள ரோஹித் சர்மாவை நினைத்து இங்கிலாந்து அணியினர் கலக்கமடைந்ததாகவும் பீட்டர்சன் கூறியுள்ளார். அப்படிப்பட்ட ரோகித் சர்மாவுக்கு விளையாடும் வரை ரசிகர்கள் ஆதரவு கொடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “உண்மையில் அது நம்ப முடியாததாக இருந்தது. ரோகித் சர்மா களத்திற்கு வந்ததும் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள். இது போன்ற நட்சத்திரங்கள் விளையாடும் போது அதை நீங்கள் மகிழ்ச்சியுடன் பார்க்க வேண்டும். ரோகித் சர்மா போன்றவர் படிக்கட்டில் வந்ததும் மொத்த மைதானத்தில் இருந்த ரசிகர்களின் உணர்வுகளைப் பாருங்கள்”
“இங்கே ஒரு விஷயத்தை நான் சொல்கிறேன். ரோகித் சர்மா நடந்து வந்த போது இங்கிலாந்து அணியினரின் ரியாக்சன் பற்றிய காட்சிகள் எங்களுக்கு காணக் கிடைத்தது. மொத்த ரசிகர்களும் அவருக்கு ஆதரவாக இருந்த நிலையில் இங்கிலாந்து அணி மட்டும் அவரை முறைக்கத் துவங்கினார்கள். அது தான் ரோகித் சர்மா. அதுவே அவர் உருவாக்கிய ஒளி”
இதையும்படிங்க: இதை மட்டும் பிடிச்சுட்டா.. 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் ரோஹித்தை வேற மாதிரி பார்ப்பீங்க.. ரெய்னா பேட்டி
“அது ரோகித் சர்மா என்பதால் கிடையாது. அவர் அடித்த ரன்கள் மற்றும் சராசரியால் இங்கிலாந்து அணியினர் அவரை அப்படி முறைத்தார்கள்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து இரண்டாவது போட்டியில் ஞாயிற்றுக்கிழமை கட்டாக் நகரில் நடைபெற உள்ளது. அந்தப் போட்டியில் ரோகித் மீண்டும் அதிரடியாக விளையாட வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாகும்.