இதை மட்டும் பிடிச்சுட்டா.. 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் ரோஹித்தை வேற மாதிரி பார்ப்பீங்க.. ரெய்னா பேட்டி

Suresh Raina
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் இந்தியா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. இருப்பினும் அந்தப் போட்டியிலும் கேப்டன் ரோஹித் சர்மா 2 ரன்களில் அவுட்டான அவர் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்தார்.

ஏனெனில் சமீபத்திய ஆஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து டெஸ்ட் தொடர்களில் சுமாராக விளையாடிய அவர் இந்தியாவின் தோல்விகளுக்கு காரணமாக அமைந்தார். அதனால் விமர்சனங்களை சந்தித்த ரோஹித் ரஞ்சிக் கோப்பையில் விளையாடும் அரை சதம் கூட அடிக்கவில்லை. இருப்பினும் ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் அதிரடியாக விளையாடி ஃபார்முக்கு திரும்புவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள்.

- Advertisement -

சுமாரான ஃபார்ம்:

ஆனால் அந்த சூழ்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தயாராகும் வகையில் நடைபெறும் இந்தத் தொடரிலும் ரோகித் சர்மா ஏமாற்றத்தையே கொடுத்துள்ளார். இந்நிலையில் இத்தொடரின் அடுத்த 2 போட்டிகளில் ஃபார்மை கண்டறிந்து விட்டால் சாம்பியன்ஸ் டிராபியில் வேறு மாதிரியான ரோகித்தை பார்க்க முடியும் என்று சுரேஷ் ரெய்னா நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதே போல விராட் கோலியும் குணமடைந்து விளையாடுவது இந்தியாவில் வெற்றிக்கு முக்கியம் என்று அவர் கூறியுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இந்த விக்கெட் ரோஹித் சர்மா கம்பேக் கொடுப்பதற்கு நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஏனெனில் இதனால் அவர் தமக்குத் தாமே கொஞ்சம் முயற்சி செய்து அடுத்த முறை விளையாடுவார். தற்போது இந்திய அணி கட்டாப் நகருக்கு சென்றுள்ளார்கள் அங்கே ரோஹித் நன்றாக விளையாடக்கூடும்”

- Advertisement -

ரெய்னா நம்பிக்கை:

“ஒருவேளை சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன் ரோகித் தன்னுடைய ஃபார்மை கண்டறிந்து விட்டால் அந்தத் தொடரில் நாம் வித்தியாசமான கேப்டன் மற்றும் அணுகுமுறையை அவரிடம் பார்க்கலாம். அதே போல விராட் கோலி நேரத்திற்குள் குணமடைந்து விடுவாரா என்பதும் கேள்விக்குறிய விஷயமாகும். ஏனெனில் அடுத்ததாக பெரிய தொடர் வரும் நிலையில் ரோஹித், கில், கோலி ஆகியோர் அடுத்த 2 போட்டிகளில் ஒன்றாக இணைந்து விளையாடுவது முக்கியம்” எனக் கூறினார்.

இதையும் படிங்க: 4இல் 500 ரன்ஸ்.. யாருமே செய்யாத சாதனையை செஞ்ச ஸ்ரேயாஸ்க்கே இந்த நிலையா? ஆகாஷ் சோப்ரா விளாசல்

இதைத் தொடர்ந்து இரண்டாவது போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை கட்டாக் நகரில் நடைபெற உள்ளது. அந்தப் போட்டியிலும் இந்தியா வென்று கோப்பையை கைப்பற்றத் தயாராகி வருகிறது. அந்தப் போட்டியிலாவது விராட் கோலி விளையாடுவாரா? ரோகித் அசத்துவாரா? என்ற கேள்வி ரசிகர்களிடம் காணப்படுகிறது.

Advertisement