2012இல் தூஸ்ரா பந்துகளை அப்படி தான் அடிச்சேன்.. அஷ்வினை சாய்க்க இங்கிலாந்துக்கு.. பீட்டர்சன் ஆலோசனை

- Advertisement -

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் விளையாடும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜனவரி 25ஆம் தேதி துவங்குகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு பகுதியாக நடைபெறும் இத்தொடரில் 12 வருடங்கள் கழித்து இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் தோற்கடித்து கோப்பையை வெல்லும் லட்சியத்துடன் இங்கிலாந்து களமிறங்க உள்ளது.

மறுபுறம் 2012க்குப்பின் உலகின் எந்த அணிக்கு எதிராகவும் தோற்காமல் இருந்து வரும் கௌரவத்தை இம்முறையும் இங்கிலாந்தை தோற்கடித்து இந்தியா தக்கக்வைக்கும் முனைப்புடன் விளையாட வந்தது. முன்னதாக கடைசியாக கடந்த 2012ஆம் ஆண்டு அலெஸ்டர் குக் தலைமையிலான இங்கிலாந்து எம்எஸ் தோனி தலைமையிலான இந்தியாவை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து டெஸ்ட் தொடரை வென்றது.

- Advertisement -

அஷ்வினை எதிர்கொள்ள:
அந்த தொடரில் இங்கிலாந்து வெற்றி பெறுவதற்கு பேட்டிங் துறையில் அலெஸ்டர் குக் மற்றும் கெவின் பீட்டர்சன் கருப்பு குதிரையாக செயல்பட்டனர். இந்நிலையில் அத்தொடரில் அஸ்வினுக்கு எதிராக அசத்தியத்தை பற்றி நினைவு கூர்ந்துள்ள கெவின் பீட்டர்சன் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு சில ஆலோசனையும் வழங்கியுள்ளார். அது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

“எங்களுடைய காலத்தில் இந்தியாவில் நாங்கள் நிதானமாக விளையாடுவதை வழக்கமாக வைத்திருந்தோம். 2016 தொடரில் நான், ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட் அவ்வாறு விளையாடினோம். அது நீங்கள் நேராக முன்னங்காலில் சென்று அடிப்பதற்கு முற்படாமல் காத்திருந்து பந்தின் லென்த்தை பிடித்து அடிப்பதைப் பற்றி கற்பதை பொருத்ததாகும். அதை செய்ய எந்த பந்தையும் எங்கு பிட்ச் செய்தாலும் ஆஃப் சைட் வழியாக அடிப்பது முக்கியம். மேலும் வலைப்பயிற்சியில் தடுப்பாட்டத்தை விளையாடுவதற்காக நான் அதிக நேரத்தை செலவிட்டேன்”

- Advertisement -

“அது எதிர்மறையான தடுப்பாட்டம் அல்ல. மாறாக அது தற்காத்துக் கொள்ளும் திறன் மற்றும் பதிலுக்கு தாக்க முடியும் என்ற நம்பிக்கையை கொடுத்தது. நான் அஸ்வினின் தூஸ்ரா பந்துகளை எடுத்து விளையாடினேன். அப்போதெல்லாம் அவர் பந்தை தன்னுடைய ஓட்டத்தின் பின்புறத்தில் லோட் செய்வார். இப்போதும் அவர் அப்படியே செய்கிறார் என்று நினைக்கிறேன். அவர் எப்போதுமே ஆஃப் ஸ்பின்னராக ஓடி வந்து பின்னர் தாமதமாக பந்தை தூஸ்ராவாக மாற்றியதில்லை. அவர் முன்கூட்டியே செய்தார். அதனால் 100% அவர் இப்படித்தான் வீசுவார் என்ற நம்பிக்கை என்னிடம் இருந்தது”

இதையும் படிங்க: உங்க ஊரா இருந்தாலும் இங்கிலாந்தை பற்றி அப்படி நினச்சா.. ஆபத்து இந்தியாவுக்கே.. எச்சரித்த நாசர் ஹுசைன்

“அதை பயன்படுத்தி நான் அவரை ஆஃப் சைட் மேல் அடித்தேன். நான் அவரது குறியின் பின்புறத்தில் தூஸ்ராவை பார்ப்பேன். அதற்கு தகுந்தாற்போல் லெஃக் சைட் திசையில் ஃபீல்டர்கள் இருந்ததால் பந்து திரும்பும் போதெல்லாம் பவுண்டரி அல்லது சிக்சர் அடிக்கலாம் என்று நினைப்பேன். எனவே இந்த தொடரில் நீங்கள் இந்திய ஸ்பின்னர்களுக்கு எதிராக எட்ஜ் கொடுத்தால் பிரச்சனை இல்லை. ஆனால் போல்ட் அல்லது எல்பிடபுள்யூ முறையில் அவுட்டானால் உங்களுடைய டெக்னிக்கில் தவறு இருக்கிறது என்று அர்த்தம்” என கூறினார்.

Advertisement