உங்க ஊரா இருந்தாலும் இங்கிலாந்தை பற்றி அப்படி நினச்சா.. ஆபத்து இந்தியாவுக்கே.. எச்சரித்த நாசர் ஹுசைன்

nasser hussain
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி தங்களுடைய சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் இத்தொடர் ஜனவரி 25ஆம் தேதி துவங்குகிறது. அதில் 2012க்குப்பின் உலகின் எந்த அணிக்கு எதிராகவும் சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் தோற்காமல் இருந்து வரும் கௌரவத்தை இந்தியா இம்முறையும் தக்க வைக்கும் என்று நம்பப்படுகிறது.

இருப்பினும் பென் ஸ்டோக்ஸ் தலைமையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 போன்ற அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இங்கிலாந்து கடந்த 2 வருடங்களாக தொடர் வெற்றிகளை குவித்து வருகிறது. அதனால் கடைசியாக 2012இல் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்திய மேஜிக்கை இம்முறை பென் ஸ்டோக்ஸ் தலைமையில் நிகழ்த்தும் லட்சியத்துடன் இங்கிலாந்து களமிறங்க உள்ளது.

- Advertisement -

சொந்த ஊராக இருந்தாலும்:
ஆனாலும் சுழலுக்கு சாதகமான மைதானங்களை கொண்ட இந்தியாவில் ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல் ஆகிய தரமான ஸ்பின்னர்களை தாண்டி இங்கிலாந்து வெல்வது கடினமாகவே பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சொந்த மண்ணில் இந்தியா வெல்வதற்கு அதிகப்படியான வாய்ப்புள்ளதாக முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் ஒப்புக் கொண்டுள்ளார்.

அதே சமயம் இங்கிலாந்தின் அதிரடி அணுகுமுறையை இந்தியா குறைத்து மதிப்பிட்டால் அதற்கான ஆபத்தை சந்திக்க நேரிடலாம் என்று எச்சரிக்கையும் விடுக்கும் அவர் இது பற்றி ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “இந்தியா வெல்லும். ஆனால் ஒவ்வொரு சவாலிலும் பஸ்பால் நின்று பேசியுள்ளது. பென் ஸ்டோக்ஸ் – ப்ரெண்டன் மெக்கல்லம் ஆகியோரின் வெற்றி புள்ளிவிவரங்கள் சிறப்பாக இருக்கிறது”

- Advertisement -

“எனவே நான் அவர்களை குறைத்து மதிப்பிட்டு முடிந்தவர்களாக எழுத மாட்டேன். பஸ்பால் எனப்படும் இங்கிலாந்தின் புதிய அதிரடி அணுகுமுறை சொந்த மண்ணில் வெற்றிகரமாக இருந்துள்ளது. இருப்பினும் அதற்கு சவாலை கொடுக்கும் இடம் இந்தியா அல்லது ஆஸ்திரேலியாவாக இருக்கலாம். எனவே இது இங்கிலாந்துக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும். மறுபுறம் இங்கிலாந்தின் இந்த அணுகுமுறை தங்களின் சொந்த மண்ணில் எப்படி வேலை செய்யும் என்பதை இந்தியா பார்க்க விரும்புகிறது”

இதையும் படிங்க: 426 ரன்ஸ்.. 297 ரன்ஸ் பார்ட்னர்ஷிப்.. இங்கிலாந்து லயன்ஸிடம் பணியாமல் இந்தியா ஏ அணியை காப்பாற்றிய சுதர்சன், பரத்

“எனவே இந்த ஆர்வமிகுந்த தொடரில் தற்சமயத்தில் சிறந்த கிரிக்கெட்டை விளையாடும் இந்தியா அணிக்கு எதிராக இங்கிலாந்து எப்படி செயல்பட போகிறது என்பதை பார்க்க வேண்டும். அத்துடன் இந்தியாவின் ஸ்பின்னர்கள் இங்கிலாந்தை விட வித்தியாசமானவர்கள். அவர்களிடம் அக்சர், ஜடேஜா ஆகிய 2 விரல் ஸ்பின்னர்கள், மணிகட்டு ஸ்பின்னர் குல்தீப் யாதவ் ஆகியோருடன் மகத்தான ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின் இருக்கிறார். மறுபுறம் இங்கிலாந்தில் இடது கை ஸ்பின்னர் ஜேக் லீச் மற்றும் ஓரளவு அனுபவம் கொண்ட ரீகன் அஹ்மத், டாம் ஹார்ட்லி, சோயப் பசீர் ஆகியோர் உள்ளனர்” என்று கூறினார்.

Advertisement