426 ரன்ஸ்.. 297 ரன்ஸ் பார்ட்னர்ஷிப்.. இங்கிலாந்து லயன்ஸிடம் பணியாமல் இந்தியா ஏ அணியை காப்பாற்றிய சுதர்சன், பரத்

Ranji trophy
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விரைவில் துவங்க உள்ளது. அதை முன்னிட்டு இந்தியா ஏ மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் அணிகள் பயிற்சி போட்டிகளில் விளையாடி வருகின்றன. அதில் முதலாவது பயிற்சி போட்டி டிராவில் முடிந்த நிலையில் 2வது பயிற்சி போட்டி ஜனவரி 17ஆம் தேதி அகமதாபாத் நகரில் துவங்கியது.

அப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா ஏ அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 553/8 ரன்கள் குவித்த டிக்ளர் செய்தது. அதிகபட்சமாக கீட்டன் ஜெனிங்ங்ஸ் சதமடித்து 154, கேப்டன் ஜோஸ் போகனோன் 125, அலெஸ் லீஸ் 73 ரன்கள் எடுக்க இந்தியா ஏ சார்பில் அதிகபட்சமாக மானவ் சுதர் 4 விக்கெட்டுகள் சாய்ந்தார்.

- Advertisement -

பணியாத இளம் அணி:
அதை தொடர்ந்து களமிறங்கிய இந்தியா ஏ அணி முதல் இன்னிங்ஸில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 227 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இந்தியா ஏ அணிக்கு இதர வீரர்கள் யாருமே 25 ரன்கள் கூட தாண்டாத நிலையில் அதிகபட்சமாக ரஜத் படிடார் அதிரடியான சதமடித்து 19 பவுண்டரி 5 சிக்சருடன் 151 (158) ரன்கள் குவித்தார். இங்கிலாந்து லயன்ஸ் சார்பில் அதிகபட்சமாக மேத்யூ போட்ஸ், மேத்யூ ஃபிஷர் தலா 4 விக்கெட்டுகள் எடுத்தனர்.

அதைத் தொடர்ந்து 326 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இங்கிலாந்து லயன்ஸ் தங்களுடைய 2வது இன்னிங்ஸில் 163/6 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது. அதிகபட்சமாக கீட்டன் ஜென்னிங்ஸ் 64, ஜேம்ஸ் ரெவ் 56* ரன்கள் எடுக்க இந்தியா ஏ சார்பில் அதிகபட்சமாக தமிழக வீரர் பிரதோஷ் பால் 2 விக்கெட்டுகள் எடுத்தார். இறுதியில் 490 என்ற கடினமான இலக்கை துரத்திய இந்தியா ஏ அணிக்கு கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் 0, ரஜப் படிடார் 4 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்கள்.

- Advertisement -

அதனால் 6/2 என்ற மோசமான துவக்கத்தை பெற்ற இந்தியா ஏ தோற்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மறுபுறம் தமிழக வீரர் சாய் சுதர்சன் நங்கூரமாக பேட்டிங் செய்த நிலையில் எதிர்புறம் வந்த சர்ஃப்ராஸ் கான் 55, பிரதோஷ் பால் 43 ரன்கள் எடுத்து அவுட்டானார்கள். இருப்பினும் தொடர்ந்து அசத்திய சாய் சுதர்சன் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 13 பவுண்டரியுடன் 97 (208) ரன்கள் குவித்து அணியை முழுமையாக சரிவிலிருந்து மீட்டு ஆட்டமிழந்தார்.

இதையும் படிங்க: இது ஒன்னும் பாகிஸ்தான் இல்ல.. அந்த திட்டம் இல்லாம வந்தா இந்தியா சிதறடிக்கும்.. இங்கிலாந்தை எச்சரித்த ஓஜா

அதை தொடர்ந்து ஜோடி சேர்ந்த கேஎஸ் பரத் மற்றும் மாணவ் சுதர் ஆகியோர் ஜோடியாக நங்கூரத்தை போட்டு 297 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அப்போது 4வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்ததால் போட்டி டிராவில் முடிவதாக அறிவிக்கப்பட்டது. பரத் சதமடித்து 116*, சுதர் 89* ரன்கள் எடுத்து இந்தியா ஏ அணியை தோல்வியிலிருந்து காப்பாற்றினர். மறுபுறம் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு கிடைத்தும் நழுவ விட்ட இங்கிலாந்து லயன்ஸ் சார்பில் காலும் பார்க்கின்ஷன் 3, மேத்தியூ போட்ஸ் 2 விக்கெட்களை எடுத்தனர்.

Advertisement