தோனி மாதிரியான ஃபினிஷர்.. இந்திய கிரிக்கெட்டில் கோலி தான் அந்த புரட்சியை செஞ்சாரு.. பீட்டர்சன் பாராட்டு

Kevin Pieterson 2
- Advertisement -

இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2024 டி20 தொடரில் மார்ச் 25ஆம் தேதி நடைபெற்ற 6வது லீக் போட்டியில் பஞ்சாப்பை 4 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு தோற்கடித்தது. அந்தப் போட்டியில் ஸ்லோவான பிட்ச்சில் கிளாஸ் இன்னிங்ஸ் விளையாடிய நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 77 (49) ரன்கள் அடித்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார்.

அதன் வாயிலாக 2024 டி20 உலகக் கோப்பையில் கழற்றி விட நினைக்கும் இந்திய தேர்வுக் குழுவுக்கும் அவர் பதிலடி கொடுத்துள்ளார். இந்நிலையில் 2022 டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம் உட்பட பல தருணங்களில் போட்டியை வெற்றிகரமாக ஃபினிஷிங் செய்த விராட் கோலி ஓய்வுக்கு பின் அனைவரது நினைவிலும் சிறந்த ஃபினிஷராக இருப்பார் என கெவின் பீட்டர்சன் பாராட்டியுள்ளார்.

- Advertisement -

பீட்டர்சன் பாராட்டு:
அத்துடன் இந்திய வீரர்கள் ஃபிட்டாக மாறும் அளவுக்கு விராட் கோலி தான் இந்திய கிரிக்கெட்டில் ஃபிட்னஸ் புரட்சி செய்ததாகவும் அவர் பாராட்டியுள்ளார். பொதுவாக எம்.எஸ். தோனி சிறந்த ஃபினிஷராக அனைவரது மனதிலும் குடி கொண்டிருக்கும் நிலையில் விராட் கோலி பற்றி கெவின் பீட்டர்சன் இப்படி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “ஒரு வீரராக அவர் இன்னிங்ஸ்களை முடிப்பவராகவும் எல்லா காலத்திலும் சிறந்த ஃபினிஷராகவும் இருப்பார்”

“இந்திய கிரிக்கெட்டர்களை ஃபிட்டான தடகள வீரர்களாக மாற்றியது அவர் செய்த பல நல்ல விஷயங்களில் ஒன்றாகும். அவர் அதை பேச்சாக மட்டும் பேசவில்லை. செயலிலும் நடந்து காட்டுவதை நீங்கள் பார்க்கலாம். ரன்கள் எடுப்பதற்காக ஓடும் போது சிறந்த வீரராக இருக்க வேண்டும் என்பதற்காக அவர் முழுமூச்சுடன் முழு எனர்ஜியுடன் செயல்படுகிறார். அவை களத்திற்கு வருவதற்கு முன்பே துவங்குகிறது”

- Advertisement -

“அவருடைய உணவில் துவங்குகிறது. பயிற்சி கூடத்தில் செய்யும் கடினமான பயிற்சிகளில் துவங்குகிறது. அதற்காக அவர் செய்த தியாகத்தில் துவங்குகிறது. ஏனெனில் ஃபிட்டாக இருக்க வேண்டும் என்பதை பற்றி பேசுவதற்கு முன் முதலில் நீங்கள் அந்த வழியில் நடந்து கொள்ள வேண்டும்” என்று கூறினார். அவர் கூறுவது போல ஆரம்ப காலங்களில் சற்று பருமனாக இருந்த விராட் கோலி நாளடைவில் கடினமாக உழைத்து இன்று ஃபிட்னெஸ் எனும் வார்த்தைக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறார்.

இதையும் படிங்க: ரிங்குவிடம் வாங்கிய அடியால் உடம்பு சரில்லாம போச்சு.. அந்த பக்கமே போகாதன்னு சொன்னாங்க.. யாஷ் தயாள்

அவரைப் பார்த்து இன்று இந்திய அணியில் அனைவரும் ஃபிட்டாக இருக்க வேண்டும் என்று கருதுகின்றனர். சொல்லப்போனால் ஃபிட்டாக இருந்தால் மட்டுமே இந்திய அணியில் இடம் கிடைக்கும் என்ற நிலைமையை கேப்டனாக இருந்த போது விராட் கோலி உருவாக்கினார். அந்த வகையில் விராட் கோலி சாதாரண கிரிக்கெட் வீரர்களை தடகள வீரர்களைப் போல் மாற்றியவர் என்றால் மிகையாகாது.

Advertisement