ரிங்குவிடம் வாங்கிய அடியால் உடம்பு சரில்லாம போச்சு.. அந்த பக்கமே போகாதன்னு சொன்னாங்க.. யாஷ் தயாள்

Yash Dayal
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தங்களுடைய முதல் போட்டியில் சென்னையிடம் தோற்றாலும் இரண்டாவது போட்டியில் பஞ்சாப்பை வீழ்த்தியது. குறிப்பாக மார்ச் 25ஆம் தேதி நடைபெற்ற 6வது லீக் போட்டியில் பஞ்சாப்பை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த அந்த அணி மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பியது ஆர்சிபி ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது.

முன்னதாக அந்த போட்டியில் பெங்களூரு அணிக்காக இளம் வீரர் யாஷ் தயாள் 4 ஓவர்களில் 23 ரன்கள் மட்டும் கொடுத்து 1 விக்கெட்டை எடுத்து அசத்தலாக பந்து வீசினார். சொல்லப்போனால் முகமது சிராஜ், கேமரூன் கிரீன் போன்ற மற்ற ஆர்சிபி பவுலர்களை விட அந்த போட்டியில் அவர் குறைந்த எக்கனாமியில் (5.82) பந்து வீசியது ரசிகர்களின் பாராட்டுகளையும் பெற்றது.

- Advertisement -

யாஷ் தயாள் கம்பேக்:
ஏனெனில் கடந்த வருட ஐபிஎல் தொடரில் குஜராத்துக்கு எதிராக கடைசி ஓவரில் மோசமாக பந்து வீசிய அவரை அடித்து நொறுக்கிய ரிங்கு சிங் கடைசி 5 பந்துகளில் 5 சிக்சர்கள் அடித்து வெற்றியை பறித்ததை யாராலும் மறக்க முடியாது. அதன் காரணமாக அடுத்த போட்டியிலேயே நீக்கப்பட்ட யாஷ் தயாள் அத்துடன் குஜராத் அணியிலிருந்து கழற்றி விடப்பட்டார்.

இருப்பினும் தற்போது 5 கோடிக்கு தன்னை நம்பி வாங்கியுள்ள பெங்களூரு கிரிக்கெட் அணிக்கு முடிந்தளவுக்கு சிறப்பாக செயல்பட்டு வரும் அவர் கம்பேக் கொடுத்து மனம் தளராமல் போராடி வருகிறார். இந்நிலையில் ரிங்கு சிங்கிடம் அடி வாங்கிய சில நாட்களில் உடல்நிலை பாதிக்கப்பட்டதாக கூறும் யாஷ் தயாள் கிண்டல்களை தவிர்ப்பதற்காக சோசியல் மீடியா பக்கம் செல்ல வேண்டாம் என்று அணி நிர்வாகம் கேட்டுக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி முகமது சிராஜுடன் நிகழ்த்திய உரையாடலில் அவர் பேசியது பின்வருமாறு. “அந்தப் போட்டி முடிந்ததும் உடைமாற்றும் அறைக்கு சென்ற நான் மோசமாக உணர்ந்தேன். அப்போது சோசியல் மீடியாவை பார்க்க வேண்டாம் என்று என்னிடம் சொன்னார்கள். ஆனால் நான் சில கமெண்ட்களை பார்த்தேன். என்னுடைய குடும்பத்துடன் பேசிய நான் மற்றவர்கள் என்னைப்பற்றி என்ன நினைப்பார்கள் என்று மனமுடைந்தேன்”

இதையும் படிங்க: 32 வருடம் கழித்து ஆஷஸ்’க்கு சமமாக.. இந்திய தொடருக்கான அட்டவணையை வெளியிட்ட ஆஸி வாரியம்

“அடுத்த சில நாட்களில் எனது உடல்நிலை பாதிக்கப்பட்டது. அதிலிருந்து மீண்டு வந்து கிரிக்கெட்டில் கவனம் செலுத்த சில காலம் தேவைப்பட்டது. ஆனால் பின்னர் தான் இதை அனுபவிக்கும் முதல் நபர் நான் அல்ல. நான் கடைசி நபராகவும் இருக்கப்போவதில்லை என்பதை உணர்ந்தேன். எனவே அந்த நாளை பின்னே வைத்து செயல்பாட்டில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். அழுத்தமான சூழ்நிலைக்கு திரும்புவதை வைத்து மட்டுமே அந்த நிலையை சமாளிக்க முடியும் என்று நினைத்தேன்” என கூறினார்.

Advertisement