32 வருடம் கழித்து ஆஷஸ்’க்கு சமமாக.. இந்திய தொடருக்கான அட்டவணையை வெளியிட்ட ஆஸி வாரியம்

IND vs AUS
- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக நடைபெற உள்ள 2024/25 பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான அட்டவணையை ஆஸ்திரேலிய வாரியம் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. கடந்த காலம் காலமாக ஆஸ்திரேலிய மண்ணில் தோல்வியை மட்டுமே சந்தித்து வந்த இந்தியா கடந்த 2018/19 சீசனில் முதல் முறையாக நான் விராட் கோலி தலைமையில் தொடரை வென்று சரித்திரம் படைத்தது.

அதைத் தொடர்ந்து 2020/21 சீசனில் நடந்த தொடரில் முதல் போட்டியிலேயே 36க்கு ஆல் அவுட்டான இந்தியா படுமோசமான தோல்வியை சந்தித்தது. அப்போது விராட் கோலி இல்லாமலேயே ரகானே தலைமையில் வாஷிங்டன் சுந்தர், நடராஜன் போன்ற இளம் வீரர்களுடன் கொதித்தெழுந்த இந்தியா காபா கோட்டையை தகர்த்து ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் மீண்டும் வீழ்த்தி 2 – 1 (4) என்ற கணக்கில் கோப்பையை வென்றது.

- Advertisement -

அட்டவணை வெளியீடு:
அதன் காரணமாக தற்போது ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா விளையாடும் டெஸ்ட் தொடருக்கு உலகம் முழுவதிலும் மவுசு அதிகரித்துள்ளது. எனவே இம்முறை இந்தியாவுக்கு எதிராக தங்கள் நாட்டில் நடைபெறும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை 5 போட்டிகள் கொண்ட மெகா தொடராக நடைபெறும் என்று ஆஸ்திரேலிய வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இயக்குனர் நிக் ஹாக்லி தெரிவித்துள்ளார்.

மேலும் ஆஷஸ் தொடருக்கு நிகராக இந்திய டெஸ்ட் தொடரையும் தாங்கள் கருதுவதாக அவர் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா மண்ணில் 32 வருடங்கள் கழித்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாட உள்ளது. கடைசியாக ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா 1991 – 92 சீசனில் 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது

- Advertisement -

இம்முறை ஆரம்பத்திலேயே இந்தியாவை அடக்கி கட்டுப்படுத்துவதற்காக முதல் போட்டியை பெர்த் நகரில் நடத்தும் திட்டத்தையும் ஆஸ்திரேலியா கையிலெடுத்துள்ளது. ஏனெனில் அந்த மைதானத்தில் ஆஸ்திரேலியா இதுவரை டெஸ்ட் போட்டிகளில் தோற்றதில்லை. அதைத்தொடர்ந்து 2வது போட்டி அடிலெய்ட் நகரில் பகலிரவாக நடைபெற உள்ளது.

இதையும் படிங்க: ஒன்னு மன்னிப்பு கேளுங்க.. இல்ல வர்ணனையாளர் லிஸ்ட்ல இருந்து தூக்குங்க.. முரளி கார்த்திக்கை விளாசும் ரசிகர்கள்

அதன் பின் 3வது போட்டி புகழ்பெற்ற காபா மைதானத்திலும், கிறிஸ்மஸ் தினத்தின் அடுத்த நாளான பாக்ஸிங் டேவில் துவங்கும் 4வது போட்டி மெல்போர்ன் மைதானத்திலும், புத்தாண்டு துவங்கிய முதல் வாரத்தில் சிட்னி நகரில் கடைசி போட்டியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா – இந்தியா மோதும் 2024 – 25 பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடருக்கான அட்டவணை:
1. முதல் டெஸ்ட் : நவம்பர் 22 – 26, பெர்த்
2. 2வது டெஸ்ட் : டிசம்பர் 6 – 10 (பகலிரவு), அடிலெய்ட்
3. 3வது டெஸ்ட் : டிசம்பர் 14 – 18, காபா
4. 4வது டெஸ்ட் : டிசம்பர் 26 – 30, மெல்போர்ன்
5. 5வது டெஸ்ட் : ஜனவரி 3 – 7, சிட்னி

Advertisement