ஒன்னு மன்னிப்பு கேளுங்க.. இல்ல வர்ணனையாளர் லிஸ்ட்ல இருந்து தூக்குங்க.. முரளி கார்த்திக்கை விளாசும் ரசிகர்கள்

Murali Karthik
- Advertisement -

ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மார்ச் 25 ஆம் தேதி நடைபெற்ற 6வது லீக் போட்டியில் பஞ்சாப்பை 4 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு வீழ்த்தியது. அந்த போட்டியில் முதலாவதாக பேட்டிங் செய்த பஞ்சாப் 176/6 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் தான் 45 ரன்கள் எடுக்க பெங்களூரு சார்பில் அதிகபட்சமாக சிராஜ் மற்றும் மேக்ஸ்வெல் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

அதைத் தொடர்ந்து 177 ரன்களை துரத்திய பெங்களூருவுக்கு நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 77 (49), தினேஷ் கார்த்திக் 28* (10), மஹிபால் லோம்ரர் 17* (8) ரன்கள் அடித்து 19.2 ஓவரிலேயே வெற்றி பெற வைத்தனர். பஞ்சாப் சார்பில் அதிகபட்சமாக ரபாடா, ஹர்ப்ரீத் ப்ரார் விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை. முன்னதாக அப்போட்டியில் பெங்களூரு அணிக்காக விளையாடிய யாஷ் தயாள் 4 ஓவரில் 23 ரன்கள் மட்டும் கொடுத்து 1 விக்கெட் எடுத்து அசத்தினார்.

- Advertisement -

மன்னிப்பு கேளுங்க:
குறிப்பாக சிராஜ், அல்சாரி ஜோசப் கேமரூன் கிரீன் போன்ற மற்ற ஆர்சிபி பவுலர்களை விட அவர் இந்த போட்டியில் குறைந்த எக்கனாமியில் (5.82) அபாரமாக பந்து வீசி வெற்றியில் முக்கிய பங்காற்றினார். ஆனால் அவருடைய பவுலிங் பற்றி இந்தியாவுக்காக விளையாடிய முன்னாள் தமிழக வீரர் முரளி கார்த்திக் நேரலையில் வர்ணித்தது பின்வருமாறு. “யாரோ ஒருவரின் குப்பை யாரோ ஒருவருக்கு புதையலாகிறது” என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதாவது கடந்த வருடம் குஜராத்துக்காக விளையாடிய யாஷ் தயால் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் ரிங்கு சிங்கிடம் கடைசி ஓவரில் 5 சிக்ஸர்களை கொடுத்து தோல்விக்கு காரணமாக அமைந்தார். அதன் காரணமாக அடுத்த போட்டியிலேயே நீக்கப்பட்டு குஜராத் அணியிலிருந்து கழற்றி விடப்பட்ட அவரை தற்போது பெங்களூரு நம்பி வாங்கியுள்ளது.

- Advertisement -

அந்த வகையில் குஜராத் அணியில் குப்பையை போல் செயல்பட்ட யாஷ் தயாள் பெங்களூரு அணியில் புதையலை போல் செயல்படுவதாக வர்ணித்த முரளி கார்த்திகை தற்போது ரசிகர்கள் “எப்படி நீங்கள் அப்படி சொல்லலாம்? என்று விளாசி வருகின்றனர். அத்துடன் யுவராஜ் சிங்கிடம் 6 சிக்சர்கள் கொடுத்தாலும் கடைசியில் 600 டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்த ஸ்டுவர்ட் பிராட் பற்றி தெரியாதா? என்றும் ரசிகர்கள் அவரை விளாசுகின்றனர்.

இதையும் படிங்க: கங்குலி ரெடியா இருக்க சொன்னாரு.. தோனி சொன்ன அந்த அட்வைஸ் ஹெல்ப் பண்ணுச்சு.. டெல்லி வீரர் பேட்டி

மேலும் இந்தியாவுக்காக நீங்கள் எந்தளவுக்கு புதையலை போல் செயல்பட்டீர்கள்? என்றும் அவரை ரசிகர்கள் விமர்சிக்கின்றனர். எனவே ஒரு இளம் வீரரை குறைத்து மதிப்பிட்டு அவமானப்படுத்தும் பேசிய முரளி கார்த்திக் ஒன்று மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வர்ணனையாளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement