கங்குலி ரெடியா இருக்க சொன்னாரு.. தோனி சொன்ன அந்த அட்வைஸ் ஹெல்ப் பண்ணுச்சு.. டெல்லி வீரர் பேட்டி

Abishek Porel
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் முதல் கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் டெல்லி கேப்பிடல்ஸ் தங்களுடைய முதல் போட்டியில் பஞ்சாப்பிடம் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. குறிப்பாக காயத்திலிருந்து குணமடைந்து கேப்டனாக விளையாடிய ரிஷப் பண்ட் தலைமையில் முதல் போட்டியிலேயே அந்த அணி தோல்வியை சந்தித்தது டெல்லி ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

இருப்பினும் அப்போட்டியில் இளம் வீரர் அபிஷேக் போரேல் ஆட்டம் பல ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களின் பாராட்டுகளை பெற்றது. ஏனெனில் அந்த போட்டியில் முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளை இழந்து 138/7 என தடுமாறிய டெல்லி 150 ரன்கள் தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்டது. அப்போது இம்பேக்ட் வீரராக 21 வயதாகும் அபிஷேக் போரேல் களமிறங்கினார்.

- Advertisement -

தோனியின் அட்வைஸ்:
அந்த வாய்ப்பில் பட்டாசாக விளையாடிய அவர் ஹர்ஷல் படேல் பட்டியல் வீசிய கடைசி ஓவரில் மட்டும் 25 ரன்கள் அடித்து மொத்தமாக 32* (10) ரன்களை 320.00 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசினார். அதனால் 20 ஓவரில் டெல்லி 174/9 ரன்கள் எடுத்தது. பெங்கால் அணிக்காக உள்ளூர் போட்டிகளில் நன்றாக விளையாடியதால் கடந்த. வருடம் ஜாம்பவான் சௌரவ் கங்குலியின் பரிந்துரையில் அவர் டெல்லி அணிக்காக வாங்கப்பட்டார்.

அங்கே இதுவரை 5 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள அவருக்கு மேல் வரிசையில் வாய்ப்பு கொடுத்தால் இன்னும் அதிகமாக அசத்துவார் என்று ராபின் உத்தப்பா சமீபத்தில் பாராட்டினார். இந்நிலையில் எப்போது வேண்டுமானாலும் வாய்ப்பு கிடைக்கலாம் என்பதால் தயாராக இருக்குமாறு சௌரவ் கங்குலி சொன்னதாக அபிஷேக் போரேல் கூறியுள்ளார். மேலும் கடந்த வருடம் பேசிய போது தோனி கொடுத்த ஆலோசனை தமக்கு உதவியதாகவும் தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இம்பேக்ட் வீரராக வாய்ப்பு கிடைக்கலாம் என்பதால் அதற்கு தகுந்தார் போல் நான் தயாரானேன். பேட்டிங் செய்யும் வாய்ப்பு கிடைக்கும் போது அதில் அணிக்காக அசத்த வேண்டும் என்பதை மனதில் வைத்து தயாரானேன். எப்போது வேண்டுமானாலும் வாய்ப்பு வரலாம் என்பதால் அதை பிடித்துக் கொள்ள தயாராக இருக்குமாறு கங்குலி சார் என்னிடம் சொன்னது மனதில் இருந்தது”

இதையும் படிங்க: முதல் முறையா பாக்குறேன்.. தோனிக்கான விசில் சத்தம் சிஎஸ்கே அணியால் மட்டும் கிடைக்கல.. ரவீந்திரா வியப்பு

“பந்தை பார்த்து அடி என்று அவர் என்னிடம் சொன்னார். கடந்த வருடம் நான் மஹி பாயிடம் பேசினேன். அப்போது “டெத் ஓவரில் நீங்கள் பேட்டிங் செய்தால் போட்டியை கடைசி வரை எடுத்துச் செல்ல வேண்டும். கடைசி 6 பந்துகளை நாம் பார்க்க வேண்டும்” என்று என்னிடம் தோனி சொன்னார். அந்த வகையில் நான் மகிழ்ச்சியுடன் விளையாடினேன். ஆனால் முடிவு எங்களுக்கு சாதகமாக அமையவில்லை. நாங்கள் கம்பேக் கொடுப்போம்” என்று டெல்லி அணி வெளியிட்டுள்ள வீடியோவில் கூறினார்.

Advertisement