அவர் முரளிதரன், வார்னே இல்ல.. இதை ஃபாலோ பண்ணா ஈஸியா அடிக்கலாம்.. இங்கிலாந்துக்கு பீட்டர்சன் ஆலோசனை

kevin pieterson
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் இந்தியா விளையாடும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ஜனவரி 25ஆம் தேதி துவங்குகிறது. இந்த தொடரில் பென் ஸ்டோக்ஸ் தலைமையில் டி20 கிரிக்கெட் போல அதிரடியாக விளையாடி இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் தோற்கடிக்கும் முனைப்புடன் இங்கிலாந்து விளையாடும் என்று நம்பப்படுவதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஆனால் சொந்த மண்ணில் கடந்த 12 வருடங்களாக இங்கிலாந்து உட்பட உலகின் எந்த அணிக்கு எதிராகவும் ஒரு டெஸ்ட் தொடரில் இந்தியா தோற்றதில்லை. எனவே இம்முறையும் இங்கிலாந்தை தோற்கடித்து இந்தியா கோப்பையை வெல்லும் என்று ரசிகர்கள் நம்புகின்றனர். குறிப்பாக சுழலுக்கு சாதகமான மைதானங்களில் ரவிச்சந்திரன் அஸ்வின், அக்சர் பட்டேல், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இந்தியாவின் அரணாக நிற்பார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

- Advertisement -

வார்னே, முரளிதரன் இல்ல:
இந்நிலையில் இத்தொடரில் இந்தியாவை தோற்கடிக்க அஸ்வின், ஜடேஜா ஆகிய ஸ்பின்னர்களை சிறப்பாக எதிர்கொள்வது அவசியம் என்று முன்னாள் இங்கிலாந்து வீரர் கேவின் பீட்டர்சன் கூறியுள்ளார். அதற்காக அவர்களை எதிர்கொள்ள பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதை விட ரவீந்திர ஜடேஜா ஒன்றும் முத்தையா முரளிதரன், ஷேன் வார்னே கிடையாது என்று தெரிவிக்கும் பீட்டர்சன் அவரை எதிர்கொள்ள இங்கிலாந்துக்கு ஆலோசனையும் கொடுத்துள்ளார்.

இது பற்றி ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “என்னுடைய காலத்தில் ரவீந்திர ஜடேஜாவை நான் அதிகமாக எதிர்கொண்டுள்ளேன். அது டெக்னிக்கை பொறுத்ததாகும். ஜடேஜா ஒன்றும் முத்தையா முரளிதரன் அல்லது ஷேன் வார்னே கிடையாது. சாதாரண இடது கை ஸ்பின்னரான அவர் ஒரே வழியில் வீசுவார். எப்போதாவது தான் பந்தை ஸ்லைட் செய்வார்”

- Advertisement -

“எனவே உங்களுடைய டெக்னிக் திடமாக இருந்தால் அவர் வீசும் பந்துகள் வழுக்கிக் கொண்டு வரும் போது அடித்தாலே உங்களால் நன்றாக செயல்பட முடியும். உங்களுடைய கால்கள் நன்றாக இருந்து உங்களின் முன்னங்கால் வேரூன்றாமல் கொஞ்சம் இறங்கி சென்று அடித்தால் உங்களால் சிறப்பாக அவரை எதிர்கொள்ள முடியும். அவருக்கு எதிராக எல்பிடபிள்யூ அல்லது போல்டாக கூடாது என்ற எண்ணத்துடன் மட்டும் விளையாடினால் போதும்”

இதையும் படிங்க: அடுத்த லெவலுக்கு முன்னேற அந்த 2 இந்திய வீரர்களின் அட்வைஸ் கேட்டேன்.. ஆப்கானிஸ்தான் வீரர் வெளிப்படை

“ஒருவேளை நீங்கள் எட்ஜ் கொடுத்தால் பிரச்சனை இல்லை. ஆனால் போல்ட் அல்லது எல்பிடபுள்யூ முறையில் ஆட்டமிழந்தால் உங்களுடைய டெக்கினிக்கில் பிரச்சனை இருப்பதாக அர்த்தம். பந்தை எதிர்கொள்வதற்கு உங்களுக்கு போதுமான நேரம் இருக்கும். அதனால் முதலில் பந்தின் லென்த்தை கணித்து பின்னர் நகர்ந்து அடியுங்கள்” என்று கூறினார். இந்த இடத்தில் பிட்ச் சுழலுக்கு சாதகமாக இல்லை என்றால் கூட அஸ்வினை விட ஜடேஜா அதிக தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement