தோனிக்கு பதிலாக ஜடேஜா நியமிக்கப்பட்டது குறித்து – கெவின் பீட்டர்சன் கூறியது என்ன?

Pietersen
- Advertisement -

கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னை அணியின் கேப்டனாக இருந்த மகேந்திர சிங் தோனி திடீரென தனது கேப்டன் பதவியில் இருந்து விலகினார். அவரது இந்த விலகல் கிரிக்கெட் வட்டாரத்தின் மத்தியிலும் சரி, ரசிகர்களின் மத்தியிலும் சரி மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியது. ஏனெனில் சர்வதேச கிரிக்கெட் மட்டுமின்றி ஐபிஎல் கிரிக்கெட்டிலும் மிகச்சிறந்த கேப்டனாக வலம் வந்த தோனி இவ்வாறு திடீரென தனது கேப்டன் பதவியில் இருந்து வெளியேறியது அனைவருக்கும் அதிர்ச்சியான விடயமாக மாறியது.

Dhoni

- Advertisement -

அதனை தொடர்ந்து சென்னை அணியின் புதிய கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்படுவதாக சென்னை அணியின் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. ஒருபுறம் தோனி கேப்டன் பதவியில் இருந்து வெளியேறியது அனைவருக்கும் வருத்தத்தை அளித்திருந்தாலும் மறுபுறம் ஜடேஜா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டதற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

அந்த வகையில் தற்போது இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் ஜடேஜா கேப்டன் ஆனது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : ஜடேஜா கேப்டன் ஆனதில் எனக்கு எந்த ஒரு ஆச்சரியமும் இல்லை. ஏனெனில் அவர் எப்போதுமே சிறப்பாக சிந்தித்து நல்ல முடிவுகளை எடுக்கக்கூடிய வீரர்.

MS Dhoni Jadeja

தோனிக்கு பிறகு நல்ல ஒரு கேப்டனை தேர்வு செய்ய வேண்டி அவர்கள் ஜடேஜாவின் இடம் நகர்ந்தது சரியான முடிவுதான் என்று நான் கூறுவேன். அதனால் ஜடேஜா சென்னை அணியின் கேப்டனாக மாறியதில் எனக்கு எவ்வித ஆச்சரியமும் இல்லை. தோனியை போன்றே ஜடேஜாவும் ஒரு கூலான பர்சன். எந்த ஒரு நேரத்திலும் அவர் கோபத்தை வெளிக்காட்டாமல் சிறப்பாக வழிநடத்திச் செல்லக் கூடியவர் என்றும் நான் கூறுவேன்.

- Advertisement -

டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரை ஜடேஜா நல்ல அனுபவம் கொண்டவர். அதுமட்டுமின்றி ஒரே அணியில் விளையாடி வரும் ஒரு வீரரிடம் கேப்டன் பொறுப்பை வழங்கியது சரியான முடிவு என்று பீட்டர்சன் கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : கடந்த ஆண்டு ஐபிஎல் தொடர் துவங்கும்போது சென்னை அணி சற்று வலிமை இழந்த அணி என்று அனைவரும் கூறினர். ஆனால் அவர்கள் அனைவரது கருத்தையும் பொய்யாக்கி சென்னை அணி சாம்பியன் பட்டம் வென்றது.

இதையும் படிங்க : ஐபிஎல் 2022 : பிளே ஆஃப் சுற்றுக்கு இந்த அணி தகுதி பெறுவது கடினம் – ஆரம்பத்திலேயே வாயை விடும் ஆகாஷ் சோப்ரா

இம்முறை இளம் வீரர்களும் சென்னை அணியில் வந்துள்ளதால் நிச்சயம் இம்முறையும் சென்னை அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும். இளம் வீரர்களை அணியில் கொண்டு வந்து இருந்தாலும் அதே அளவு மூத்த வீரர்களும் சரிசமமான அளவில் சென்னை அணியில் இருப்பதால் இம்முறையும் எதிரிகளுக்கு கடும் போட்டியை சிஎஸ்கே அணி அளிக்கும் என பீட்டர்சன் கூறினார்.

Advertisement