IPL 2023 : பயப்படவே. பயப்படாதீங்க. அடுத்த சீசனில் தோனி கண்டிப்பா விளையாடுவாரு – கெவின் பீட்டர்சன் சொன்ன காரணம்

Pietersen
- Advertisement -

இந்தியாவில் கடந்த மார்ச் 31-ஆம் தேதி துவங்கிய நடப்பு 16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது பிளே ஆப் சுற்றினை நோக்கி நகர்ந்து வருகிறது. இன்னும் ஒரு சில தினங்களில் லீக் சுற்று போட்டிகள் முடிவடைந்து இறுதி கட்டத்தை எட்டவுள்ள இந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கு பிளே ஆப் சுற்றில் விளையாட பிரமாதமான வாய்ப்பு இருக்கிறது. இதுவரை இந்த தொடரில் 13 போட்டியில் விளையாடியுள்ள சென்னை அணியானது 15 புள்ளிகளை பெற்று தற்போதைய நிலையில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

CSK vs DC WIn

- Advertisement -

இந்நிலையில் தங்களது கடைசி லீக் போட்டியில் டெல்லி அணிக்கு எதிராக விளையாடவுள்ள சென்னை அணியானது அந்த போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் எளிதாக பிளே ஆப் சுற்றுக்கு செல்வார்கள். அதுமட்டுமின்றி புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்து நேரடியாக குவாலிபயர் 1-ல் விளையாடும் வாய்ப்பையும் பெரும் அளவிற்கு சென்னை அணி நல்ல நிலையில் தான் உள்ளது.

இந்நிலையில் இந்த தொடர் சென்னை அணியின் கேப்டன் தோனிக்கு கடைசி தொடர் என்று பலராலும் பேசப்பட்டு வருவதால் இந்த ஆண்டு சிஎஸ்கே அணி விளையாடி வரும் போட்டிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு இருந்து வருகிறது. மேலும் தோனியின் ஓய்வு குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் பேசிவரும் வேளையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான கெவின் பீட்டர்சனும் சில விடயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : இந்த சீசன் தோனிக்கு கடைசி ஐபிஎல்-ஆக இருக்காது. அப்படி இருக்கவும் வாய்ப்பில்லை என்று எனக்கு தோன்றுகிறது.

Dhoni 1

ஏனெனில் கடைசியாக கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டி முடிந்த பிறகு நானும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தான் இருந்தேன். போட்டி முடிந்த பிறகும் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் எவரும் நகர்ந்து செல்லாமல் அப்படியே நின்றனர். ரசிகர்கள் அனைவரும் தோனிக்காக காத்திருந்து சென்னை வீரர்கள் மைதானத்தை வளம் வந்த போது அவர்களுக்கு மிகப்பெரிய அளவில் ஆரவாரம் செய்து ஆதரவினை அளித்திருந்தனர்.

- Advertisement -

இப்படி ஒரு ரசிகர் கூட்டம் தோனிக்கு இருக்கும்பொழுது அவர் இந்த ஐபிஎல் தொடருடன் ஓய்வு பெறுவார் என்று எனக்கு தோன்றவில்லை. கட்டாயம் அடுத்த ஆண்டும் அவர் விளையாடுவார் ஏனெனில் தற்போது வந்திருக்கும் இம்பேக்ட் வீரர் விதிமுறைப்படி தோனி நிச்சயம் அடுத்த ஆண்டும் விளையாடலாம்.

இதையும் படிங்க : IPL 2023 : அவர மாதிரி தரமான இந்திய வீரரை உங்களுக்கு சரியா யூஸ் பண்ண தெரிலன்னு சொல்லுங்க – ஹைதராபாத் பற்றி ஜஹீர் கான்

ஏனெனில் தோனியால் 20 ஓவர்கள் முழுமையாக நின்று கீப்பிங் செய்ய முடியும். அதே வேளையில் பேட்டிங்கிலும் பின் வரிசையில் களமிறங்கி அதிரடி காட்ட முடியும் என்பதனால் நிச்சயம் அவர் அடுத்த ஆண்டும் விளையாடுவார் என்று தான் உறுதியாக நம்புவதாக கெவின் பீட்டர்சன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement