IPL 2023 : அவர மாதிரி தரமான இந்திய வீரரை உங்களுக்கு சரியா யூஸ் பண்ண தெரிலன்னு சொல்லுங்க – ஹைதராபாத் பற்றி ஜஹீர் கான்

Zaheer
- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் கோப்பையை வெல்வதற்காக களமிறங்கிய 10 அணிகளில் 2016க்குப்பின் 2வது சாம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்புடன் விளையாடிய சன் ரைசர்ஸ் ஹைதராபாத் தங்களுடைய முதல் 12 போட்டிகளில் 4 தோல்விகளையும் 8 வெற்றிகளையும் பதிவு செய்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்து பிளே ஆஃப் சுற்று வாய்ப்பிலிருந்து வெளியேறியது. அந்த அணிக்கு பேட்டிங் துறையில் மயங் அகர்வால், ராகுல் திரிபாதி, கேப்டன் மார்க்ரம், ஹரி ப்ரூக் போன்ற பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்களை எடுக்க தவறியது தோல்விக்கு முக்கிய காரணமானது. அதே போல வேகப்பந்து வீச்சு துறையில் புவனேஸ்வர் குமார் மற்றும் நடராஜன் ஆகியோர் ஓரளவு சிறப்பாகவே செயல்பட்டனர்.

Umran Malik

- Advertisement -

இருப்பினும் 3வது பவுலராக தொடர்ந்து விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட உம்ரான் மாலிக் 7 போட்டிகளில் 5 விக்கெட்டுகளை 10.35 என்ற எக்கனாமியில் எடுத்து சுமாராக செயல்பட்டதால் பெஞ்சில் அமர வைக்கப்பட்டது பெரும்பாலான ரசிகர்களுடைய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் ஜம்மு காஷ்மீரை சேர்ந்த அவர் 2021 சீசனில் அறிமுகமாகி ஓரிரு போட்டிகளில் வாய்ப்பு பெற்று விராட் கோலி போன்ற நட்சத்திரங்களின் பாராட்டுகளை பெறும் அளவுக்கு மிரட்டலாக பந்து வீசினார். அதனால் மீண்டும் தக்க வைக்கப்பட்ட அவர் 2022 சீசனில் 145 – 150 கி.மீ வேகத்தில் பந்து வீசி எதிரணி பேட்ஸ்மேன் ஸ்டம்ப்புகளை தெறிக்க விட்டு 22 விக்கெட்களை எடுத்து அபாரமாக செயல்பட்டார்.

சரியா யூஸ் பண்ணல:
அதனால் இந்தியாவுக்காக அறிமுகமானாலும் வேகத்தை மட்டும் நம்பி பந்து வீசியதால் ரன்களை வாரி வழங்கி 2 போட்டிகளுடன் கழற்றி விடப்பட்ட அவர் அதற்காக அசராமல் உள்ளூர் கிரிக்கெட்டுக்கு சென்று முக்கிய யுக்திகளை கற்று சமீபத்திய இலங்கை, நியூசிலாந்து தொடர்களில் நல்ல லைன், லென்த் போன்றவற்றை பின்பற்றி குறைந்த ரன்களை நல்ல விக்கெட்களை எடுத்து ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் அதிவேக பந்தை வீசிய இந்தியராக சாதனையும் படைத்தார்.

அதனால் தேவையான பயிற்சியும் வாய்ப்பும் கொடுத்தால் நிச்சயமாக அசத்துவேன் என்பதை நிரூபித்த அவரிடம் கற்றுக் கொடுத்தாலும் கிடைக்காத வேகம் இயற்கையாக இருப்பதால் சரியாக பயன்படுத்துமாறு அஜய் ஜடேஜா போன்ற முன்னாள் வீரர்கள் கோரிக்கை வைத்தனர். அந்த நிலையில் இந்த சீசனில் எதிர்பார்க்கப்பட்டது போலவே ரன்களை வாரி வழங்கி அவருக்கு டேல் ஸ்டைன் போன்ற ஜாம்பவானை பயிற்சியாளராக வைத்திருக்கும் ஹைதராபாத் நிர்வாகம் சரியான பயிற்சியை கொடுத்து நல்வழிப்படுத்துவதை விட்டுவிட்டு அதிரடியாக நீக்கியுள்ளது.

- Advertisement -

அதனால் அவரை சரியாக பயன்படுத்த தவறிய ஹைதராபாத் தோல்விகளை சந்தித்ததில் ஆச்சரியமில்லை என்று முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் சமீபத்தில் ட்விட்டரில் விமர்சித்தார். இந்நிலையில் உம்ரான் மாலிக் போன்ற தரமான வீரருக்கு தேவையான பயிற்சிகளை கொடுத்து ஹைதராபாத் நிர்வாகம் சரியாக பயன்படுத்த தவறிட்டதாக முன்னாள் இந்திய ஜாம்பவான் வேகப்பந்து வீச்சாளர் ஜாகிர் கான் கூறியுள்ளார்.

Umran Malik Zaheer Khan

இது பற்றி ஜியோ சினிமா சேனலில் அவர் பேசியது பின்வருமாறு. “உம்ரான் மாலிக்கை அவருடைய அணி நிர்வாகம் சரியாக பயன்படுத்தவில்லை என்று நான் கருதுகிறேன். குறிப்பாக அவரை ஹைதராபாத் அணி நிர்வாகம் கையாண்டு பயன்படுத்திய விதம் சிறப்பாக இல்லை என்பதே அதற்கு சில சாட்சியாகும். அவரைப் போன்ற இளம் வேகப்பந்து வீச்சாளரை பற்றி பேசும் போது நீங்கள் முதலில் அவருக்கு தேவையான சூழ்நிலைகளை உருவாக்கி கொடுத்து முழுமையான ஆதரவு கொடுக்க வேண்டும்”

இதையும் படிங்க:SRH vs RCB : என்ன ஒரு க்ளாஸ் பேட்டிங் – ஆர்சிபி’க்கு மாபெரும் சவாலை கொடுத்த ஹைதெராபாத் வீரரை பாராட்டிய சச்சின், ஏபிடி

“அவருக்கு இந்த சீசனில் வழிகாட்டுதல் தேவையாக இருக்கிறது. இருப்பினும் துரதிஷ்டவசமாக அதை ஹைதராபாத் செய்யவில்லை. அதனாலேயே அவருக்கு இப்படி ஒரு சுமாரான சீசன் அமைந்துள்ளது” என்று கூறினார். அது மட்டுமல்லாமல் 2020 சீசனில் பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் கடைசி பந்தில் வெறும் 4 ரன்கள் தேவைப்பட்ட போது அபாரமாக பந்து வீசி வெற்றிகரமாக கட்டுப்படுத்திய கார்த்திக் தியாகியையும் ஹைதராபாத் நிர்வாகம் வாய்ப்பு கொடுக்காமல் தொடர்ந்து பெஞ்சில் அமர வைத்து வருவது ரசிகர்களுக்கு புரியாத புதிராக அமைந்துள்ளது.

Advertisement