கெவின் பீட்டர்சன் தேர்வு செய்த நடப்பு ஐ.பி.எல் தொடரின் பெஸ்ட் பிளேயிங் லெவன் – ரசிகர்கள் கிண்டல்

Pietersen
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை வைத்து சிறந்த பிளேயிங் லெவனை பல்வேறு முன்னாள் வீரர்களும் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் ஏற்கனவே பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது பிளேயிங் லெவன் அணிகளின் பட்டியல் வெளியான நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான கெவின் பீட்டர்சன் நடப்பு ஐபிஎல் தொடரில் அற்புதமாக செயல்பட்ட வீரர்களை வைத்து பெஸ்ட் பிளேயிங் லெவனை வெளியிட்டுள்ளார். ஆனால் இவர் வெளியிட்டுள்ள 11 பேர் கொண்ட அணி தற்போது ரசிகர்கள் மத்தியில் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது.

RRvsGT

- Advertisement -

ஏனெனில் மற்றவர்களை காட்டிலும் மிகவும் வித்யாசமான அணியைத் தேர்வு செய்துள்ள பீட்டர்சன் அந்த வீரர்களை வைத்து ஒரு சொதப்பலான அணியையும் வெளியிட்டுள்ளார். அந்த வகையில் பீட்டர்சன் தேர்வு செய்த அணியில் துவக்க வீரர்களாக பட்லர் மற்றும் டி காக் ஆகியோர் உள்ளனர். இதில் பட்லரை துவக்க வீரராக நாம் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் லக்னோ அணி சார்பாக விளையாடிய டி காக் இந்த தொடரில் ஒரு சதம் விளாசியதை தவிர்த்து பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதே உண்மை.

அதேபோன்று மூன்றாவது இடத்தில் கே.எல்.ராகுலை தேர்வு செய்துள்ளார். ஆனால் ராகுல் இந்த தொடர் முழுவதுமே துவக்க வீரராகவே விளையாடி இருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று 4வது மற்றும் 5வது இடத்தில் டேவிட் மில்லர் மற்றும் ஹார்டிக் பாண்டியாவை தேர்வு செய்த அவர் பாண்டியாவை கேப்டனாகவு அறிவித்துள்ளார். ஆனால் ஆறாவது இடத்தில் பஞ்சாப் அணிக்காக விளையாடி வரும் லியாம் லிவிங்ஸ்டனை தேர்வு செய்துள்ளார். லியாம் லிவிங்ஸ்டனை பினிஷர் ரோலில் தேர்வு செய்ததும் ரசிகர்கள் மத்தியில் கிண்டலுக்கு உள்ளாகும் விஷயமாக மாறியுள்ளது.

Liam Livinstone Six 2

ஏனெனில் லிவிங்ஸ்டன் டாப் ஆர்டரில் விரைவாக ரன் குவிக்க கூடியவர் என்பதால் அவரை பினிஷராக தேர்வு செய்தது தவறு என்றும் ரசிகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அதேபோன்று சுழற்பந்து வீச்சாளர்களாக ரவிச்சந்திரன் அஸ்வின், சாஹல் ஆகியோரோடு சேர்த்து ராகுல் திவாதியாவையும் அவர் இந்த பிளேயிங் லெவனில் இணைத்துள்ளார்.

- Advertisement -

டி20 போட்டிகளில் இதே போன்று மூன்று சுழற்பந்து வீச்சாளர்களை தேர்வு செய்வது தேவையற்ற ஒன்று என்றும் ரசிகர்கள் விமர்சிக்கின்றனர். மேலும் வேகப்பந்து வீச்சாளராக உம்ரான் மாலிக் மற்றும் ஹேசல்வுட் ஆகிய இருவரை மட்டுமே அவர் தேர்வு செய்துள்ளது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. பீட்டர்சன் தேர்வு செய்த 2022 ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் பெஸ்ட் பிளேயிங் லெவன் அணி இதோ :

இதையும் படிங்க : IPL 2022 : பிராட் ஹாக் தேர்வு செய்த பெஸ்ட் ஐ.பி.எல் 2022 பிளேயிங் லெவன் – கேப்டன் யாருன்னு பாருங்க

1) ஜாஸ் பட்லர், 2) குவின்டன் டி காக், 3) கே.எல்.ராகுல், 4) டேவிட் மில்லர், 5) ஹார்திக் பாண்டியா (கேப்டன்), 6) லியம் லிவிங்ஸ்டன், 7) ரவிச்சந்திரன் அஸ்வின், 8) ராகுல் தேவத்தியா, 9) உம்ரான் மாலிக், 10) யுஸ்வேந்திர சாஹல், 11) ஜோஷ் ஹேசில்வுட்.

Advertisement