IPL 2022 : பிராட் ஹாக் தேர்வு செய்த பெஸ்ட் ஐ.பி.எல் 2022 பிளேயிங் லெவன் – கேப்டன் யாருன்னு பாருங்க

- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று முடிந்த 15-வது ஐபிஎல் தொடருக்கான சாம்பியன் பட்டத்தை குஜராத் அணி கைப்பற்றி அசத்தியது. இந்த 15-வது தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாக அனைத்து அணிகளும் கலைக்கப்பட்டு ஒவ்வொரு அணியிலும் நான்கு வீரர்கள் மட்டுமே தக்க வைக்கப்படலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இத்தொடரில் புதிதாக குஜராத் மற்றும் லக்னோ ஆகிய நகரங்களை தலைமையாகக் கொண்டு இரண்டு அணிகளும் உருவாக்கப்பட்டன.

Hardik Pandya MS DHoni GT vs CSK

- Advertisement -

அப்படி புதிதாக சேர்க்கப்பட்ட அணிகளும் மெகா ஏலத்தில் கலந்து கொண்டு தங்கள் அணிக்கு தேவையான வீரர்களை போட்டி போட்டு வாங்கினர். இப்படி வீரர்கள் அனைவரும் கலைக்கப்பட்டதால் ஒவ்வொரு அணியிலும் பங்கேற்று இருந்த முக்கிய வீரர்கள் வெவ்வேறு அணிகளுக்கு இடம் மாறினர். இதன் காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் தொடரை கைப்பற்றப்போவது யார் என்ற பெரிய எதிர்பார்ப்பு அதிகளவில் நிலவியது.

இவ்வேளையில் ஐபிஎல் வரலாற்றில் ஜாம்பவான் அணிகளாக பார்க்கப்படும் மும்பை மற்றும் சென்னை அணிகள் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்தன. குறிப்பாக புள்ளி பட்டியலில் கடைசி இரு இடங்களை பிடித்து இவ்விரு அணிகளும் வெளியேற இத்தொடரில் அறிமுக அணிகளாக விளையாடிய லக்னோ மற்றும் குஜராத் ஆகிய அணிகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதிலும் குறிப்பாக குஜராத் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி வரலாறு படைத்துள்ளது.

இந்நிலையில் இந்த 15-வது ஐபிஎல் தொடரில் விளையாடிய அனைத்து அணிகளில் உள்ள வீரர்களின் செயல்பாடுகளையும் வைத்து இந்தாண்டின் சிறந்த பிளேயிங் லெவனை பல்வேறு முன்னாள் வீரர்களும் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான பிராட் ஹாக் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்களை பட்டியலிட்டு சிறந்த பிளேயிங் லெவன் குறித்த தனது தேர்வினை வெளியிட்டுள்ளார்.

- Advertisement -

அந்த அணியில் வெளிநாட்டு வீரர்களாக ஜாஸ் பட்லர், டேவிட் வார்னர், டேவிட் மில்லர் மற்றும் ரஷித் கான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அதே வேளையில் இந்திய வீரர்களில் கோலி, ரோஹித், தோனி, ஜடேஜா, கே.எல் ராகுல் ஆகிய முக்கிய வீரர்களுக்கு இடம் இல்லை அதே போன்று இன்னொரு சர்ப்ரைஸ் தேர்வாக இந்த அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை அவர் தேர்வு செய்துள்ளார். பிராட் ஹாக் தேர்வு செய்த பெஸ்ட் பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : நடப்பு ஐ.பி.எல் தொடரில் சமூகவலைத்தளம் மூலமாக அதிகம் பேசப்பட்ட அணி எது தெரியுமா? – விவரம் இதோ

1) ஜாஸ் பட்லர், 2) டேவிட் வார்னர், 3) ராகுல் திரிபாதி, 4) ஹார்திக் பாண்டியா (கேப்டன்), 5) டேவிட் மில்லர், 6) தினேஷ் கார்த்திக், 7) ரவிச்சந்திரன் அஸ்வின், 8) ரஷித் கான், 9) ஜஸ்பரீத் பும்ரா, 10) முகமது ஷமி, 11) ஹர்ஷல் படேல்.

Advertisement