நடப்பு ஐ.பி.எல் தொடரில் சமூகவலைத்தளம் மூலமாக அதிகம் பேசப்பட்ட அணி எது தெரியுமா? – விவரம் இதோ

IPL 2022 (2)
- Advertisement -

இந்தியாவில் கடந்த மார்ச் 26-ஆம் தேதி துவங்கிய பதினைந்தாவது ஐபிஎல் தொடரானது மே 29-ஆம் தேதியுடன் கோலாகலமாக நடைபெற்று முடிவடைந்தது. இந்த சீசனில் அறிமுக அணியாக களம் கண்ட ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணி முதல் சீசனிலேயே கோப்பையை வென்று அசத்தியது. இந்த தொடரில் மொத்தம் 74 போட்டிகள் நடைபெற்ற வேளையில் இந்த ஆண்டு நடப்பு ஐபிஎல் சீசனில் சமூக வலைதளம் மூலமாக அதிகமாகப் பேசப்பட்ட மற்றும் அதிக ஆதரவு கிடைத்த அணி எது என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

Pandya

- Advertisement -

அதன்படி இறுதிப் போட்டியில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் கூட சமூக வலைதளத்தில் அதிகமாகப் பேசப்பட்ட அணிகளில் முதல் மூன்று இடங்களில் கூட வரவில்லை. இதில் ஆச்சரியம் அளிக்கும் விடயம் என்னவென்றால் இம்முறை டு பிளிசிஸ் தலைமையில் எலிமினேட்டர் போட்டி வரை வந்த பெங்களூர் அணி ட்விட்டரில் அதிகம் பேசப்பட்ட அணிகளில் முதலிடத்தில் உள்ளது.

அதன் காரணமாக ரசிகர்கள் மனதை வென்ற அணியாகவும், ரசிகர்கள் மத்தியில் இருந்து அதிக ட்வீட் கிடைத்த அணியாகவும் பெங்களூரு அணி மாறியுள்ளது. பெங்களூர் அணியை தொடர்ந்து 2-வது இடத்தில் சென்னையும், மூன்றாவது இடத்தில் மும்பையும் இருக்கின்றன. இந்த மூன்று அணிகளுக்கும் இந்த ஆண்டு சமூக வலைதளம் மூலமாக அதிகம் ஆதரவு கிடைத்துள்ளது. கோப்பையை வென்ற குஜராத் அணி இந்த பட்டியலில் 6-வது இடத்திலும், கோப்பையை இழந்த ராஜஸ்தான் அணி 4-வது இடத்திலும் உள்ளது.

RCB Faf Du Plessis

அதேபோன்று அணிகளை தவிர்த்து அதிகம் பேசப்பட்ட வீரர்களை பொறுத்தவரையில் பெங்களூர் அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி குறித்து பேசப்பட்ட ட்வீட்டுகள் அதிகம் வந்ததால் இந்தப் பட்டியலில் விராட் கோலி முதல் இடத்திலும், இரண்டாவது இடத்தில் தோனியும், மூன்றாவது இடத்தில் ரோகித் சர்மாவும், நான்காவது இடத்தில் ஜடேஜாவும் உள்ளனர்.

- Advertisement -

இந்த நான்கு வீரர்கள் குறித்து சமூக வலைத்தளத்தில் அதிகம் பேசப்பட்டுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் இவர்கள் நால்வருமே பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும் ரசிகர்கள் மத்தியில் பெரிய ஆதரவு இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆண்டுதோறும் கோப்பையை கைப்பற்றும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் பெங்களூர் அணி இம்முறையும் கோப்பையை கைப்பற்றும் வாய்ப்பை இழந்தாலும் ரசிகர்கள் மத்தியில் பெரிய ஆதரவைப் பெற்றுள்ளது.

இதையும் படிங்க : ஐபிஎல் வரலாற்றில் ஒரு சீசனில் அதிக டாட் பந்துகளை எதிர்கொண்ட டாப் 7 பேட்ஸ்மேன்கள் – லிஸ்ட் இதோ

இந்த ஆதரவு அவர்களுக்கு சற்று நிம்மதி அளித்திருக்கும். நிச்சயம் அடுத்த ஆண்டு இதே சப்போர்ட் அவர்களுக்கு கிடைக்கும் பட்சத்தில் அவர்கள் இன்னும் தங்களது ஆட்டத்தை மேம்படுத்த உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement