அஷ்வினை சமாளிக்கனும்னா இதை பண்ணுங்க போதும்.. இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு – கெவின் பீட்டர்சன் அறிவுரை

Pietersen
- Advertisement -

பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது தற்போது இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணிக்கு எதிராக நடைபெறவுள்ள 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரானது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வட்டத்திற்குள் இருப்பதினால் இரு அணிகளுக்குமே இந்த தொடர் மிக முக்கியமான தொடராக பார்க்கப்படுகிறது.

அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் தொடரானது வரும் ஜனவரி 25-ஆம் தேதி முதல் துவங்க உள்ளது. கடைசியாக இந்திய அணி சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக தோல்வியை சந்தித்து இருந்த வேளையில் இம்முறை அவர்களை வீழ்த்தியாக வேண்டிய முனைப்புடன் இந்திய அணி காத்திருக்கிறது.

- Advertisement -

கடந்த 2012-ஆம் ஆண்டு நடைபெற்ற அந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி சொந்த மண்ணில் தோல்வியை தழுவியது. ஆனால் அதற்கு அடுத்து தொடர்ச்சியாக வெற்றிநடை போட்டு வரும் இந்திய அணி இம்முறை நிச்சயம் வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது என்றே கூறலாம். மறுபுறம் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருவதால் இம்முறையும் இந்திய அணியை இங்கு வீழ்த்தும் முனைப்போடு காத்திருக்கிறது.

இந்நிலையில் 2012-ஆம் ஆண்டு நடைபெற்ற அந்த டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடியிருந்த கெவின் பீட்டர்சன் அஸ்வினுக்கு எதிராக அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது குறித்து நினைவு கூர்ந்து இங்கிலாந்து பேட்ஸ்மன்களுக்கு சில ஆலோசனைகளையும் வழங்கி உள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : எங்களுடைய காலத்தில் நாங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் நிதானமாக விளையாடுவதை வழக்கமாக வைத்திருந்தோம்.

- Advertisement -

ஆனால் 2016-ஆம் ஆண்டிற்கு பிறகு தற்போது இங்கிலாந்து அணியின் ஆட்டம் மாறி இருக்கிறது. டெஸ்ட் போட்டியில் கூட அதிரடியாக விளையாடி வருகிறார்கள். நான் அஸ்வினை எதிர்கொண்டு விளையாடும்போது அவரது தூஸ்ரா பந்துகளை தேர்வு செய்து அடித்தேன். அவர் தூஸ்ரா வீசப் போகிறார் என்றால் பந்துவீச ஓடிவரும் முன்னரே அதற்கு ஏற்றவாறு தன் கையில் பந்து பிடித்துக் கொள்வார். அவர் இப்போதும் அப்படித்தான் செய்கிறார் என்று நினைக்கிறேன்.

இதையும் படிங்க : எங்க காலத்தில் ஆடிருந்தாலும் டஃப் கொடுத்துருப்பாரு.. சீக்கிரம் அந்த சாதனை செய்ங்க.. இந்திய வீரரை வாழ்த்திய அக்தர்

அதனால் அவரது தூஸ்ரா பந்துகளை தேர்வு செய்து அடியுங்கள். அதோடு அஸ்வின் பந்துவீசும் போது நாம் 100% உறுதியான மனநிலையுடன் விளையாடுங்கள். நான் அவரை எத்தனை முறை ஆப் சைடில் அடித்திருப்பேன் என்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். எப்போதுமே அவர் லெஃக் சைடில் பீல்டிங்கை பலமாக நிற்க வைப்பார். பந்து திரும்பும் என்பதால் அப்படி அவர் செய்வார். அதனை கணித்து அவரது திட்டத்திற்கு ஏற்றாற்போல் விளையாடுங்கள் என பீட்டர்சன் அறிவுரை கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement