எங்க காலத்தில் ஆடிருந்தாலும் டஃப் கொடுத்துருப்பாரு.. சீக்கிரம் அந்த சாதனை செய்ங்க.. இந்திய வீரரை வாழ்த்திய அக்தர்

shoaib akhtar
- Advertisement -

நவீன கிரிக்கெட்டில் இந்திய அணியின் பேட்டிங் துறையில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் எதிரணிகளுக்கு சவாலை கொடுத்து கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக நிறைய வெற்றிகள் பெற்றுக் கொடுத்து வருகின்றனர். அதில் ரோகித் சர்மாவை விட டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய 3 வகையான கிரிக்கெட்டிலும் அசத்தி வரும் விராட் கோலி சுமார் 50 என்ற சராசரியில் அபாரமாக செயல்பட்டு வருகிறார்.

குறிப்பாக சொந்த மண்ணாக இருந்தாலும் வெளிநாடாக இருந்தாலும் கடினமான சூழ்நிலைகளில் எதிரணி பவுலர்களை சிறப்பாக எதிர்கொள்ளும் அவர் இதுவரை 26000+ ரன்களும் 80 சதங்களும் அடித்து இந்தியாவின் நம்பிக்கை நாயகனாக வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வருகிறார். மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் 50 சதங்கள் அடித்த முதல் வீரர், ஒரு உலகக் கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரர் போன்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையையும் அவர் வரிசையாக உடைத்து வருகிறார்.

- Advertisement -

வாழ்த்திய அக்தர்:
இருப்பினும் பேட்டிங்க்கு சாதகமான மைதானங்களும் விதிமுறைகளும் உள்ள இந்த காலத்தில் விளையாடும் விராட் கோலியை கடினமான பவுலர்கள் மற்றும் விதிமுறைகளை எதிர்கொண்ட சச்சினுடன் ஒப்பிடக்கூடாது என்ற விமர்சனங்கள் இருக்கின்றன. இந்நிலையில் தங்களுடைய காலத்தில் விளையாடியிருந்தாலும் கூட விராட் கோலி கொஞ்சம் சிரமப்பட்டு தற்போது அடித்துள்ள ரன்களை அடித்திருப்பார் என்று சோயப் அக்தர் பாராட்டியுள்ளார்.

அத்துடன் விரைவில் விராட் கோலி 100 சதங்கள் சாதனையை படைக்க வேண்டும் என்று விரும்புவதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “அந்த காலத்தில் சச்சின் டெண்டுல்கர் ஒரு பந்தை எதிர்கொண்டு விளையாடினார். உலகின் மகத்தான பவுலர்களுக்கு எதிராக ரிவர்ஸ் ஸ்விங்கை அவர் எதிர்கொண்டு விளையாடினார். அதே சச்சின் இன்று விளையாடினால் இன்னும் அதிகமாக ரன்கள் அடித்திருப்பார்”

- Advertisement -

“பாண்டிங், லாரா போல அவர் வரலாற்றின் மகத்தானவர். வாசிம் அக்ரம், வார்னேவும் மகத்தானவர்கள். அதே சமயம் விராட் கோலியும் எங்களுடைய காலத்தில் விளையாடியிருந்தால் போட்டியை கொடுத்திருப்பார். ஒருவேளை அவர் எங்களை சந்திக்க கடினத்தை எதிர்கொண்டிருப்பார். ஆனாலும் அவர் இன்று அடித்துள்ள ரன்களை அப்போதும் அடித்திருப்பார். ஆனால் வாசிம் அக்ரமை எதிர்கொள்வது எளிதலல்ல”

இதையும் படிங்க: நம்ம நாட்டிலேயே அவர மாதிரி தைரியமான பிளேயர் யாருமில்ல.. 2024 உ.கோ சான்ஸ் கொடுங்க.. ஹர்பஜன் கோரிக்கை

“இருப்பினும் விராட் விராட் தான். அவர் இந்த தலைமுறையின் மகத்தான பேட்ஸ்மேன். அப்போதைய தலைமுறையை இப்போதுடன் ஒப்பிட முடியாது. அவருக்கு தலை வணங்குகிறேன். அவர் 100 சதங்கள் அடிப்பதை நான் விரும்புகிறேன்” என்று கூறினார். இந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறும் டெஸ்ட் தொடரில் சொந்த மண்ணில் விளையாட விராட் கோலி தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement