
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டியானது நேற்று ராஞ்சி நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் தெம்பா பவுமா உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் களமிறங்காததால் அவருக்கு பதிலாக நேற்றைய ஆட்டத்தில் சுழற்பந்து வீச்சாளரான கேஷவ் மகாராஜ் கேப்டனாக செயல்பட்டார். அதன்படி நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற கேசவ் மகாராஜ் தென்னாபிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார்.
அதன்படி முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணியானது நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட் இழந்து 278 ரன்களை குவித்தது. தென் ஆப்பிரிக்காவின் சார்பாக அதிகபட்சமாக ரீசா ஹென்ட்ரிக்ஸ் 74 ரன்களையும், எய்டன் மார்க்ரம் 79 ரன்களையும் குவித்து அசத்தினர்.
பின்னர் 279 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 45.5 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 282 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஸ்ரேயாஸ் ஐயர் 111 பந்துகளில் 113 ரன்கள் குவித்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். அவரோடு உறுதுணையாக ஆடிய இஷான் கிஷன் 93 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டம் இழந்தார். சஞ்சு சாம்சன் இறுதிவரை ஆட்டம் இழக்காமல் 30 ரன்கள் குவித்து நல்ல பாட்னர்ஷிப் கொடுத்தார்.
இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த தோல்வியின் மூலம் தற்போது இந்த தொடரானது ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. அதனை தொடர்ந்து எதிர்வரும் மூன்றாவது போட்டியில் வெற்றி பெறும் அணி இந்த ஒருநாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் கேஷவ் மகாராஜ் கூறுகையில் :
நாங்கள் இந்த போட்டியின் போது டியூ போட்டியின் முடிவுக்கு ஒரு காரணமாக இருக்காது என்று எதிர்பார்த்தோம். ஏனெனில் இந்த மைதானத்தில் டியூ வர வாய்ப்பு இல்லை என்று நினைத்து நாங்கள் முதலில் பேட்டிங் செய்யும் முடிவினை எடுத்தோம். ஆனால் போட்டியின் இரண்டாம் பாதியில் 30 ஓவர்களுக்கு மேல் டியூ வந்ததால் பந்து எளிதாக பேட்டிக்கு சென்றது.
இதையும் படிங்க : பண்றதெல்லாம் சீட்டிங், இதுல நேர்மையை பற்றி பேச்சு வேற – ஆஸி, இங்கிலாந்தை வெளுக்கும் 2 முன்னாள் வீரர்கள்
ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் மிகச் சிறப்பாக விளையாடினார்கள். நேரம் ஆக ஆக மைதானம் மெதுவாகவும், தாழ்வாகவும் இருக்கும் என்று நாங்கள் நினைத்தோம். ஆனால் பனிப்பொழிவு காரணமாக முற்றிலும் பேட்டிங்கிற்கு சாதகமாக மைதானம் மாறிவிட்டது என கேசவ் மகாராஜ் வருத்தம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.