இந்தியா 326 ரன்ஸ் அடிச்சாலும் பவுலிங்கில் தரமான சம்பவத்தை செய்த கேஷவ் மகாராஜ் – விவரம் இதோ

Maharaj
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதுவரை இந்திய அணி விளையாடி முடித்துள்ள ஏழு ஆட்டங்களிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 14 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருப்பதோடு அரையிறுதிக்கான வாய்ப்பையும் முதல் அணியாக உறுதி செய்து அசத்தியிருந்தது.

அதனை தொடர்ந்து இந்த உலகக் கோப்பை தொடரின் எட்டாவது லீக் ஆட்டத்தில் இன்று நவம்பர் 5-ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் தென்ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் விளையாடி வருகிறது.

- Advertisement -

அந்த வகையில் இன்று துவங்கிய இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 326 ரன்கள் குவித்துள்ளது. இந்திய அணி சார்பாக விராட் கோலி 121 பந்துகளை சந்தித்து 10 பவுண்டரிகளுடன் 101 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

மேலும் ஷ்ரேயாஸ் ஐயர் 77 ரன்களையும், ரோகித் சர்மா 40 ரன்களையும், ஜடேஜா ஆட்டம் இழக்காமல் 29 ரன்களையும் எடுத்திருந்தனர். இந்நிலையில் இந்திய அணி இப்படி 326 ரன்கள் அடித்து அசத்தியிருந்தாலும் தென்னாபிரிக்க அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான கேஷவ் மகாராஜ் தனது அற்புதமான பவுலிங்கின் மூலம் அனைவரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்றுள்ளார்.

- Advertisement -

ஏனெனில் அந்த அணியின் மற்ற பவுலர்கள் அனைவருமே ரன்களை வாரி வழங்கிய வேளையில் கேஷவ் மஹராஜ் மட்டும் 10 ஓவர்கள் வீசி வெறும் 30 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து சுக்மன் கில்லின் முக்கியமான விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். அதிலும் குறிப்பாக அவர் இந்த போட்டியில் செய்த அற்புதம் யாதெனில் :

இதையும் படிங்க : சச்சினின் வாழ்நாள் சாதனை சமன்.. உலக கோப்பையில் வேறு எந்த இந்திய வீரரும் செய்யாத தனித்துவ சாதனை படைத்த கிங் கோலி

இந்த போட்டியில் முழுவதுமாக 10 ஓவர்களை வீசிய அவர் ஒரு பவுண்டரி கூட விட்டுக் கொடுக்காமல் கச்சிதமாக 60 பந்துகளையும் வீசியுள்ளது குறிப்பிடத்தக்கது. பின்னர் 327 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது தென்னாபிரிக்க அணி விளையாடி வருகிறது.

Advertisement