- Advertisement -
ஐ.பி.எல்

28.40 கோடி.. வேணும்னே விலையை ஏத்தி விட்டு சிஎஸ்கே அணிக்கு நஷ்டத்தை கொடுத்த காவ்யா மாறன்

ஐபிஎல் 2026 டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 16ஆம் தேதி அபுதாபியில் நடைபெற்றது. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேமரூன் கிரீனை வாங்குவதற்கு முயற்சித்தது. ஆனால் அதற்கு விட்டுக் கொடுக்காத கொல்கத்தா அவரை 25. 20 கோடி என்ற பெரிய தொகைக்கு வாங்கியது. அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸின் ஆகில் ஹொசைனை வாங்கிய சிஎஸ்கே அணி உத்திரபிரதேசத்தை சேர்ந்த பிரசாந்த் வீரர் எனும் ஸ்பின் பவுலிங் ஆல் ரவுண்டரை வாங்க முயற்சித்தது.

வெறும் 30 லட்சம் அடிப்படை விலைக்கு வந்த அவரை வாங்க முதலில் மும்பை மற்றும் லக்னோ அணிகள் மோதின. அதில் மும்பையிடம் போதுமான கையிருப்பு இல்லாததால் ஆரம்பத்திலேயே விலகியது. அப்போது லக்னோவுக்கு போட்டியாக சிஎஸ்கே அணி ஏலம் கேட்டது. அதனால் பிரசாந்தின் விலை கிடுகிடுவென அதிகரித்ததால் லக்னோ விலகியதைத் தொடர்ந்து ஹைதராபாத் அணி போட்டிக்கு வந்தது.

- Advertisement -

விலையை ஏற்றிய காவ்யா:

அதற்கு போட்டியாக சிஎஸ்கே அணியும் தொடர்ச்சியாக ஏலம் கேட்டதால் விலை 10 கோடிக்கும் மேல் சென்றது. அப்போதும் விடாத ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் வேண்டுமென்றே விலையை ஏற்று வகையில் தொடர்ந்து ஏலம் கேட்டார். இறுதி வரை அவருக்கு விட்டுக் கொடுக்காத சிஎஸ்கே 14.2 கோடிக்கு பிரசாந்தை வாங்கியது.

அடுத்ததாக 30 லட்சத்துக்கு ராஜஸ்தானை சேர்ந்த கார்த்திக் சர்மா எனும் விக்கெட் கீப்பரை வாங்குவதற்கு மும்பை – லக்னோ அணிகள் போட்டியிட்டன. அதனால் விலை உயர்ந்த அவரை லக்னோ மற்றும் கொல்கத்தா வாங்க மல்லு கட்டின. சிறிது நேரத்தில் கொல்கத்தா மற்றும் சிஎஸ்கே அணிகள் வாங்க போட்டியிட்டன. அப்போது கொல்கத்தா வெளியேறியதால் சென்னை அணி எளிதாக பிரசாந்தை வாங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

சிஎஸ்கே அணிக்கு நஷ்டம்:

ஆனால் அப்போது மீண்டும் உள்ளே புகுந்த காவியா மாறன் வேண்டுமென்றே விலையை உயர்த்தும் வகையில் பிரசாந்தை ஏலம் கேட்டார். அதற்கு விட்டுக் கொடுக்காத சிஎஸ்கே 14.20 கோடிக்கு அவரையும் வாங்கியது. அப்போது “அப்பாடா எப்படியோ நம்ம வேலை முடிந்தது” என்ற வகையில் காவியா மாறன் 2 கைகளை உயர்த்திய மகிழ்ச்சியான ரியாக்சன் கொடுத்தார்.

இதையும் படிங்க: ஐபிஎல் 2026: சர்பராஸ், ஹென்றி, சஹர் என 2வது ரவுண்டில் அமர்க்களப்படுத்திய புதிய இளம் சிஎஸ்கே அணி

அதிலிருந்து வேண்டுமென்றே விலையை உயர்த்தி சிஎஸ்கே அணிக்கு நஷ்டத்தை உண்டாக்கும் வகையில் அவர் ஏலம் கேட்டது தெளிவாகத் தெரிந்தது. ஒருவேளை காவ்யா மாறன் அப்படி செய்யாமல் இருந்திருந்தால் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத பிரசாந்த், கார்த்திக்கை சிஎஸ்கே அணி இன்னும் 2 – 4 கோடிகள் குறைவாக வாங்கியிருக்கும் என்றே சொல்லலாம்.

- Advertisement -