ஐபிஎல் 2026: சர்பராஸ், ஹென்றி, சஹர் என 2வது ரவுண்டில் அமர்க்களப்படுத்திய புதிய இளம் சிஎஸ்கே அணி

CSK team
- Advertisement -

ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 16ஆம் தேதி அபுதாபியில் நடைபெற்றது. இம்முறை நடைபெற்ற மினி ஏலத்தில் சிஎஸ்கே அணி தங்களுடைய முதல் வீரராக வெஸ்ட் இண்டீஸை சேர்ந்த ஆகில் ஹொசைனை 2 கோடிக்கு வாங்கியது. இடது கை ஸ்பின் பவுலிங் ஆல் ரவுண்டரான அவர் ரவீந்திர ஜடேஜாவின் மாற்றாக விளையாடுவதற்கு தேவையான அனுபவத்தைக் கொண்டுள்ளார். அதனால் அவருடைய தேர்வு சிஎஸ்கே ரசிகர்களிடம் ஓரளவு மகிழ்ச்சியைக் கொடுத்தது.

ஆனால் அடுத்ததாக பிரசாந்த் வீர் எனும் மற்றொரு ஸ்பின் பவுலிங் ஆல் ரவுண்டரை சிஎஸ்கே 14.20 கோடிகளுக்கு வாங்கியது. அதோடு நிற்காத சிஎஸ்கே அடுத்த 12வது நிமிடத்தில் கார்த்திக் சர்மா எனும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனை 14.20 கோடிக்கு வாங்கியது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது. ஏனெனில் சர்வதேச மற்றும் ஐபிஎல் தொடரில் விளையாடாத அவர்களை வாங்க சிஎஸ்கே 28.40 கோடிகளை வாரி வழங்கியது.

- Advertisement -

சிஎஸ்கே அமர்க்களம்:

அதனால் சிஎஸ்கே அணி மீது சென்னை ரசிகர்களே அதிருப்தியை வெளிப்படுத்தினார்கள். தொடர்ந்து நடைபெற்ற ஏலத்தில் ஆஸ்திரேலியாவின் மேத்தியூ ஷார்ட்டை 1.50 கோடி சிஎஸ்கே வாங்கியது. அதை விட முதல் ரவுண்டில் விலை போகாத சர்பராஸ் கானை 75 லட்சம் என்ற குறைந்த தொகைக்கு சிஎஸ்கே வாங்கியது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது.

ஏனெனில் நல்ல வீரரான அவர் இன்று கூட மும்பைக்காக சயீத் முஸ்டாக் அலி கோப்பையில் 15 பந்தில் 50 ரன்கள் அடித்து நல்ல ஃபார்மில் இருக்கிறார். அப்படியே நியூசிலாந்தின் மார்ட் ஹென்றி, ஜாக்காரி போல்க்ஸ் ஆகியோரை 2 கோடி, 75 லட்சத்துக்கு வாங்கிய சிஎஸ்கே தங்களுடைய வேகப்பந்து வீச்சு துறையை பலப்படுத்தியது.

- Advertisement -

புதிய சென்னை அணி:

கூடவே மும்பை அணியின் நம்பிக்கையை நட்சத்திரமாக திகழ்ந்த ஸ்பின்னர் ராகுல் சஹாரை 5.20 கோடிக்கு சிஎஸ்கே வாங்கியது. அந்த வகையில் 2வது ரவுண்டில் அமர்க்களமாக செயல்பட்ட சிஎஸ்கே நல்ல வீரர்களை குறைந்த விலைக்கு வாங்கியுள்ளது. மொத்தத்தில் 2026இல் கம்பேக் கொடுப்பதற்காக சிஎஸ்கே உருவாக்கியுள்ள புதிய இளமையான அணி இதோ:

இதையும் படிங்க: 15 பந்தில் 50.. வீணாகாத மாஸ் சாதனை.. காலையில் சாதித்த சர்பராஸ்க்கு மாலையில் சிஎஸ்கே பரிசு

பேட்ஸ்மேன்கள்: ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), தேவால்ட் ப்ரேவிஸ்*, ஆயுஷ் மாத்ரே, சர்பராஸ் கான்
கீப்பர்கள்: எம்எஸ் தோனி, சஞ்சு சாம்சன், உர்வில் பட்டேல், கார்த்திக் சர்மா
ஆல் ரவுண்டர்கள்: ஜேமி ஓவர்டன்*, ராமகிருஷ்ணா கோஸ் பிரசாந்த் வீர், சிவம் துபே, அமன் கான், அன்சுல் கம்போஜ், மேத்தியூ ஷார்ட்*, ஜாக் போல்க்ஸ்*
பவுலர்கள்: கலீல் அஹ்மத், நூர் அஹ்மத்*, முகேஷ் சௌத்ரி, நாதன் எலிஸ்*, ஸ்ரேயாஸ் கோபால், குர்ஜப்நீத் சிங், அகில் ஹொசைன்*, மாட் ஹென்றி, ராகுல் சஹர் (* குறியீடு வெளிநாட்டு வீரர்கள்)

Advertisement