2 நாளுக்கு முன்னாலேயே எல்லாம் தெரியும். சுரேஷ் ரெய்னாவின் ஓய்வு குறித்து பேசிய – காசி விஸ்வநாதன்

Kasi-Viswanathan
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா கடந்த 2020-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்தபோது தானும் ஓய்வை அறிவித்து ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தினார். அதனை தொடர்ந்து சுரேஷ் ரெய்னா ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் சென்னை அணியுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக அவர் 2021-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு பின்னர் சி.எஸ்.கே அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

raina 1

- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று முடிந்த 15-ஆவது ஐபிஎல் சீசனில் எந்த ஒரு அணியும் சுரேஷ் ரெய்னாவை ஏலத்தில் எடுக்க ஆர்வம் காட்டவில்லை. அதன் காரணமாக ஐபிஎல் தொடரின் போது வர்ணனையாளராக செயல்பட்ட ரெய்னா மீண்டும் எப்படியாவது ஐபிஎல் தொடரில் விளையாடுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அடுத்து வரும் சீசனிலும் சுரேஷ் ரெய்னாவிற்கு வாய்ப்பு கிடைக்காது என்று கூறப்படுகிறது.

எனவே அவர் நேற்று அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருந்த அந்த அறிக்கையில் : சிஎஸ்கே நிர்வாகம், பி.சி.சி.ஐ, ரசிகர்கள், ராஜிவ் சுக்லா போன்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்து தான் அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

Raina

இப்படி சுரேஷ் ரெய்னா ஓய்வினை அறிவித்து வெளியேறுவதற்கு காரணம் யாதெனில் வெளிநாட்டில் நடைபெறும் டி20 போட்டிகளில் அவர் பங்கேற்க ஆர்வமாக இருப்பது தான் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சுரேஷ் ரெய்னாவின் இந்த ஓய்வு அறிவிப்புக்கு பின்னர் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வரும் வேளையில் சிஎஸ்கே அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் அவரின் இந்த ஓய்வு முடிவு தனக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே தெரியும் என்று கூறியுள்ளார்.

- Advertisement -

இது குறித்து அவர் கூறுகையில் : சுரேஷ் ரெய்னா ஏற்கனவே தனது ஓய்வு குறித்த முடிவை எங்களிடம் அறிவித்து விட்டார். அவரின் அந்த முடிவை மதித்து நாங்கள் அவருக்கு வாழ்த்து கூறினோம். கடந்த 10 ஆண்டுகளாக சென்னை அணிக்காக நிறைய பங்களிப்பினை ரெய்னா செய்துள்ளார். அவர் எப்போதுமே சி.எஸ்.கே அணியின் ஒரு அங்கமாகவே இருப்பார் என்றும் அவர்மீது நிறைய மரியாதை இருப்பதாகவும் காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : 100 சதங்களை அடிக்க வேண்டுமெனில் அந்த தியாகத்தை செய்யுங்க – விராட் கோலிக்கு சோயிப் அக்தர் கோரிக்கை

கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் விளையாடி வந்த சுரேஷ் ரெய்னா 205 போட்டிகளில் விளையாடி 5528 ரன்கள் குவித்து ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறார். அதோடு அதில் அவர் 39 அரைசதங்களும், 1 சதமும் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement