
இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரினை ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் ஆரம்பித்த சிஎஸ்கே அணியானது தற்போது தோனியின் தலைமையின் கீழ் பயணித்து வருகிறது. ஏனெனில் இந்த தொடரின் முதல் சில போட்டிகள் கேப்டனாக செயல்பட்ட ருதுராஜ் கெய்க்வாட் இந்த தொடரின் இடையே அடைந்த காயம் காரணமாக பாதியிலேயே இந்த தொடரில் இருந்து வெளியேறினார்.
அதன் பின்னர் தற்போது தோனியின் தலைமையில் சென்னை அணி விளையாடி வருகிறது. ஆனாலும் தற்போது வரை சென்னை அணி விளையாடியுள்ள 8 போட்டிகளில் ஆறு தோல்விகளை பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தினை பிடித்துள்ளது. இதன் காரணமாக இந்த ஆண்டு பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பும் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளது.
இதன் காரணமாக இனிவரும் போட்டிகளில் சிஎஸ்கே அணி இளம் வீரர்களுடன் விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருபுறம் ருதுராஜ் காயமடைந்து இந்த தொடரில் இருந்து வெளியேறி இருந்தாலும் தொடர்ந்து சென்னை அணியின் வீரர்களுடன் பயணித்து வருகிறார். அதோடு அவ்வப்போது நடக்கும் பயிற்சிகளிலும் பங்கேற்று விளையாடி வருகிறார்.
அதன் காரணமாக அவர் இந்த தொடரின் இடையே மீண்டும் அணிக்கு திரும்ப வாய்ப்பிருக்கிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அந்த கேள்விக்கு பதிலளித்துள்ள சென்னை அணியின் சி.இ.ஓ காசி விஸ்வநாதன் கூறுகையில் : இந்த ஆண்டு தொடரின் இடையே ருதுராஜ் கெய்க்வாட் காயமடைந்தது துரதிஷ்டவசமானது.
ஆனால் இந்த ஆண்டு அவர் மீண்டும் பங்கேற்க வாய்ப்பு கிடையாது. அவர் எங்கள் அணியின் கேப்டனாகவும், முக்கிய வீரராகவும் இருக்கிறார். அதன் காரணமாகவே தொடர்ந்து அணியுடன் பயணித்து வருகிறார்.
இதையும் படிங்க : பாகிஸ்தான் கூட இனிமே கிரிக்கெட் என்கிற பேச்சுக்கே இடமில்லை.. இதை மறக்கவே கூடாது – முன்னாள் வீரர் ஆவேசம்
மேலும் எதிர்வரும் ஆண்டும் சிஎஸ்கே அணியை வழிநடத்த இருக்கும் அவர் தற்போதிலிருந்தே வீரர்களுடன் நல்ல பிணைப்பு வேண்டும் என்பதற்காகவே தொடர்ந்து அணியுடன் பயணித்து வருகிறார். அதனால் இந்த ஆண்டு அவர் மீண்டும் இடையில் இணைய வாய்ப்பு இல்லை என்றும் காசி விஸ்வநாதன் உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.