- Advertisement -
உலக கிரிக்கெட்

Karunarathne : கைதாகிய இலங்கை கேப்டன். தண்ணிய போட்டதுக்கு இவ்வளவு பெரிய தண்டனையா ? -விவரம் உள்ளே

இலங்கை அணியின் டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாக திகழ்பவர் திமுத் கருணரத்னே. இவரின் தலைமையில் சமீபத்தில் தென்னாபிரிக்க அணியுடனான டெஸ்ட் தொடரை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன் கருணரத்னே கொழும்புவில் காரில் செல்லும் போது வழியில் அவர் எதிரே வந்த ஆட்டோ ஓட்டுநர் மீது மோதினார். இந்த விபத்தின் காரணமாக அவர் கைதாகியும் பிறகு ஜாமீனில் வெளியே வந்தார்.

- Advertisement -

இந்த விபத்துக்கு குறித்து தற்போது கேஸ் நடந்து அதற்கு முடிவும் வெளியானது. அதன்படி கருணரத்னே விபத்தினை ஏற்படுத்திய போது மதுபோதையில் இருந்தது நிரூபணம் ஆனது. அவரும் அதனை ஓப்புக்கொண்டார்.

அதனால் அவரை கண்டித்த நீதிபதி நிபந்தனையுடன் ஜாமீனையும் மற்றும் 4.83 நான்கு லட்சத்து 83 ஆயிரம் அபராததையும் விதித்து தீர்ப்பளித்தது. இந்த சம்பவம் இலங்கை அணி கிரிக்கெட் ரசிகர்கள் இடையே அதிகம் பேசப்படும் விடயமாக வலம் வருகிறது.

2019 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை தொடருக்கு இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் லாசித் மலிங்கா அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by