- Advertisement -
ஐ.பி.எல்

போன வருஷம் பும்ரா இல்லாமையே ஜெயிச்ச மும்பை.. இம்முறை தோற்க அவரே காரணம்.. இர்பான் பதான்

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி தங்களுடைய 7வது தோல்வியை பதிவு செய்தது. குறிப்பாக ஏப்ரல் 30ஆம் தேதி நடைபெற்ற 48வது லீக் போட்டியில் லக்னோவிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை தோல்வியை சந்தித்தது. அதனால் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தை பிடித்துள்ள மும்பை அடுத்த 4 போட்டிகளில் வென்றாலும் பிளே ஆஃப் செல்வதற்கு 30 – 50% வாய்ப்புகள் மட்டுமே காணப்படுகிறது.

லக்னோவில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை சுமாராக விளையாடி 145 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக இஷான் கிசான் 32, நேஹால் வதேரா 46 ரன்கள் எடுத்த நிலையில் லக்னோ சார்பில் அதிகபட்சமாக மோசின் கான் 2 விக்கெடுகள் எடுத்தார். அதைத் தொடர்ந்து சேசிங் லக்னோ அணிக்கு அதிகபட்சமாக மார்கஸ் ஸ்டோய்னிஸ் 62, கேப்டன் கேஎல் ராகுல் 28 ரன்கள் எடுத்து 19.2 ஓவரிலேயே வெற்றி பெற வைத்தனர்.

- Advertisement -

பும்ரா இல்லாமல்:
அதனால் மும்பை அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை. முன்னதாக இந்த வருடம் ரோகித் சர்மாவை கழற்றி விட்ட மும்பை வருங்காலத்தை கருத்தில் கொண்டு ஹர்திக் பாண்டியாவை தங்களுடைய கேப்டனாக அறிவித்தது. அதற்கு மும்பை ரசிகர்களே கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அந்த எதிர்ப்புக்கு மத்தியில் விளையாடி வரும் ஹர்திக் பாண்டியா பேட்டிங், பவுலிங் ஆகியவற்றில் இதுவரை ஒரு போட்டியில் கூட தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு சிறப்பாக செயல்படவில்லை. அதே போல கேப்டனாகவும் முக்கிய முடிவுகளை எடுப்பதில் தடுமாறும் அவர் மும்பை அணியின் தோல்விகளுக்கு முக்கிய காரணமாக இருப்பதாக ஏற்கனவே நிறைய விமர்சனங்கள் காணப்படுகின்றன.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் கடந்த வருடம் காயத்தால் பும்ரா விளையாடாமலேயே ரோகித் சர்மா தலைமையில் குறைந்தபட்சம் மும்பை பிளே ஆஃப் சுற்றுக்குச் சென்றதாக இர்பான் பதான் கூறியுள்ளார். ஆனால் இம்முறை பும்ரா இருந்தும் மும்பை 9வது இடத்தில் தவிப்பதற்கு பாண்டியா தான் காரணம் என்று விமர்சிக்கும் அவர் இது பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு.

இதையும் படிங்க: மும்பை இந்தியன்ஸ் அணியை அசால்ட்டாக சுருட்டி வீசி அடைந்த வெற்றி குறித்து பேசிய கே.எல் ராகுல் – விவரம் இதோ

“கடந்த வருடம் ஜஸ்ப்ரித் பும்ரா இல்லாமலேயே இந்த மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது. இம்முறை பும்ராவின் சேவைகள் மும்பைக்கு கிடைக்கிறது. ஆனால் அவர்கள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியுமா என்ற சூழ்நிலையில் இருக்கின்றனர். ஏனெனில் களத்தில் மும்பை அணி சரியாக நிர்வகிக்கப்படவில்லை. கேப்டன் ஹர்திக் பாண்டியாவிடம் பல தவறுகள் காணப்படுகின்றது. அது தான் உண்மை” என்று கூறியுள்ளார்.

- Advertisement -