- Advertisement -
இந்திய கிரிக்கெட்

எழுதி வெச்சுக்கோங்க.. இன்னைக்கு கிண்டலடிக்கும் ரசிகர்கள் 2024 டி20 உ.கோ தொடரில் அவரை பாராட்டுவாங்க.. வாசிம் ஜாபர்

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ள 2024 டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி வெளியிடப்பட்டுள்ளது. ரோகித் சர்மா தலைமையிலான அந்த அணியில் விராட் கோலி, சூரியகுமார் யாதவ், ஜெய்ஸ்வால் ஆகியோருடன் விக்கெட் கீப்பர்களாக சஞ்சு சாம்சன், ரிசப் பண்ட் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

இருப்பினும் அந்த அணியில் ஹர்திக் பாண்டியா மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு சில ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக சமீப காலங்களாகவே சுமாராக செயல்பட்டு வரும் ஹர்திக் பாண்டியாவை துணை கேப்டனாக நியமித்துள்ளதற்கு நிறைய ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஏனெனில் அடிக்கடி காயமடையும் அவர் கடந்த வருடம் முழுமையாக இந்திய அணிக்கு அனைத்து போட்டிகளிலும் விளையாடவில்லை.

- Advertisement -

ரசிகர்கள் பாராட்டுவாங்க:
அந்த சூழ்நிலையில் நடைபெற்று வரும் ஐபிஎல் 2024 தொடரில் மும்பை அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் அவர் பேட்டிங், பவுலிங் ஆகிய எதிலுமே தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. மேலும் கேப்டனாகவும் முக்கிய முடிவுகளை எடுப்பதில் தடுமாறும் அவருடைய தலைமையில் 7 தோல்விகளை சந்தித்துள்ள மும்பை புள்ளிப்பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் திணறுகிறது. அதனால் மும்பை பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லுமா என்பதே கேள்விக்குறியாகியுள்ளது.

அப்படிப்பட்ட சூழ்நிலையில் தேர்வாகியுள்ள பாண்டியா உலகக் கோப்பையில் ஒன்றும் செய்யப் போவதில்லை என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர். மேலும் இவரை துணை கேப்டனாக நியமித்துள்ளது இந்தியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் ரசிகர்கள் பேசி வருகின்றனர். இந்நிலையில் இன்று கிண்டலடித்து திட்டித் தீர்க்கும் ரசிகர்கள் நாளை உலகக் கோப்பையில் இந்தியாவுக்காக முக்கிய இன்னிங்ஸ் விளையாடி வெற்றி பெற வைக்கும் போது புகழ்ந்து தள்ளுவார்கள் என்று பாண்டியாவுக்கு முன்னாள் வீரர் வாசிம் ஃஜாபர் ஆதரவு தெரிவித்துள்ளார்.

- Advertisement -

அதனால் உறுதியுடன் இருங்கள் என்று பாண்டியாவுக்கு ஆறுதல் தெரிவிக்கும் அவர் இது பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “பாண்டியாவின் செயல்பாடுகளை நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். ஆனால் தொடர்ந்து தனிப்பட்ட முறையில் கிண்டலடிப்பதும் தாக்குதலாக பேசுவதையும் பார்ப்பது ஏமாற்றமளிக்கிறது. வலுவாக இருங்கள் ஹர்திக் பாண்டியா”

இதையும் படிங்க: போன வருஷம் பும்ரா இல்லாமையே ஜெயிச்ச மும்பை.. இம்முறை தோற்க அவரே காரணம்.. இர்பான் பதான்

“அடுத்த மாதம் உலகக் கோப்பையில் நீங்கள் முக்கியமான இன்னிங்ஸ் விளையாடுவீர்கள். அப்போது இதே நபர்கள் உங்கள் புகழை பாடுவார்கள்” என்று கூறியுள்ளார். இந்த சூழ்நிலையில் இன்னும் ஒரு மாதத்தில் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பையில் ஹர்திக் பாண்டியா சிறப்பாக விளையாடி இந்தியாவுக்கு வெற்றியை பெற்றுக் கொடுப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

- Advertisement -