- Advertisement -
ஐ.பி.எல்

மும்பை இந்தியன்ஸ் அணியை அசால்ட்டாக சுருட்டி வீசி அடைந்த வெற்றி குறித்து பேசிய கே.எல் ராகுல் – விவரம் இதோ

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 48-வது லீக் போட்டியானது நேற்று லக்னோ நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் கே.எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், ஹார்டிக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற லக்னோ அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் மட்டுமே குவித்தது. மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக அதிகபட்சமாக நேஹல் வதேரா 46 ரன்களையும், டிம் டேவிட் 35 ரன்களையும் குவித்தனர். லக்னோ அணி சார்பாக மோஷின் கான் 2 விக்கெட்டுக்ளை கைப்பற்றி அசத்தினார்.

- Advertisement -

பின்னர் 145 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய லக்னோ அணி 19.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் குவித்து நான்கு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் லக்னோ அணியின் சார்பாக அதிகபட்சமாக மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் 62 ரன்களையும், கே.எல் ராகுல் 28 ரன்களையும் குவித்தனர்.

பின்னர் இந்த போட்டி முடிந்து தாங்கள் அடைந்த வெற்றி குறித்து பேசிய லக்னோ அணியின் கேப்டன் கே.எல் ராகுல் கூறுகையில் : எங்கள் அணியின் பந்துவீச்சாளர்கள் மைதானத்தின் தன்மையை சிறப்பாக பயன்படுத்தி மும்பை அணியின் வீரர்களை பெரிய ரன்களை குவிக்க விடாமல் தடுத்து நிறுத்தினர். அதோடு பேட்டிங்கிலும் எங்களது அணியில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் இருந்ததால் போட்டி எங்களுக்கு சாதகமாக இருந்தது.

- Advertisement -

165 முதல் 170 ரன்கள் வரை அவர்கள் அடித்திருந்தால் ஒரு கடுமையான போட்டி இருந்திருக்கும். இருந்தாலும் எங்களது அணியின் பந்துவீச்சார்கள் மிகச் சிறப்பாக பந்துவீசி எதிரணியின் மீது அழுத்தத்தை கொடுத்து இந்த வெற்றியை எங்களுக்கு பெற்றுக் கொடுத்திருக்கின்றனர். இந்த இரண்டு புள்ளிகள் தொடருக்கு மிகவும் முக்கியமான சமயத்தில் கிடைத்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் நல்லதொரு நம்பிக்கையும் எங்களுக்கு கிடைத்துள்ளது.

இதையும் படிங்க : விராட் கோலி, ஜடேஜா வேண்டாம் என அடம் பிடித்த அகார்கர் – விடாப்பிடியாக டீமில் சேர்த்த முக்கிய நிர்வாகி (விவரம் இதோ)

மாயங்க் யாதவுக்கு திடீரென வலி ஏற்பட்டதாலே அவர் பாதியிலேயே வெளியேறினார். அவருடைய பந்துவீச்சு எங்களுக்கு அவசியம் என்பதனால் அவர் மீது நாங்கள் பெரிய கவனிப்பு வைத்துள்ளோம். இந்த காயத்திலிருந்து அவர் விரைவில் மீண்டு வருவார் என கே.எல் ராகுல் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -