- Advertisement -
ஐ.பி.எல்

இப்படி ஆடுனா அவுட் ஆகாம.. வேற என்ன ஆகும்? தோல்விக்கு பிறகும் கொஞ்சமும் மாறாமல் – திமிருடன் பாண்டியா பேட்டி

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஹார்டிக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியானது இதுவரை தாங்கள் விளையாடியுள்ள 10 போட்டிகளில் 7 தோல்விகளை சந்தித்து 6 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ளது. ஏற்கனவே ரோகித் சர்மாவின் பதவி நீக்கம், ஹார்டிக் பாண்டியாவின் புதிய கேப்டன் நியமனம் என பல்வேறு சர்ச்சைகள் அந்த அணிக்குள் நீடித்து வருகிறது.

இவ்வேளையில் தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியானது இந்த ஐ.பி.எல் 2024 ஆமாம் ஆண்டுக்கான பிளே ஆப் வாய்ப்பை கிட்டத்தட்ட இழந்துள்ளது. நேற்று நடைபெற்ற லக்னோ அணிக்கு எதிரான போட்டியின் போதும் முதலில் விளையாடிய மும்பை அணி 144 ரன்கள் மட்டுமே அடிக்க 145 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு லக்னோ அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.

- Advertisement -

அந்த இலக்கினை நோக்கி பொறுமையாக விளையாடிய லக்னோ அணி இறுதியில் கடைசி ஓவரின் போது வெற்றி இலக்கினை எட்டி 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி மீண்டும் ஒரு தோல்வியை அவர்களுக்கு பரிசளித்து இருந்தது. இந்த தொடரின் ஆரம்பத்திலிருந்தே மும்பை அணியின் செயல்பாடு மோசமாக இருந்து வருகிறது.

ஆனாலும் பாண்டியா ஒவ்வொரு போட்டிக்குப் பின்னரும் தனது கெத்து குறையாமல் திமிராக பேசி வருவது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை அளித்து வருகிறது. அந்த வகையில் நேற்றைய லக்னோ அணிக்கு எதிரான போட்டி முடிந்து பின்னரும் தோல்வி குறித்து பேசிய ஹார்டிக் பாண்டியா கூறுகையில் : இந்த போட்டியின் ஆரம்பத்திலேயே நாங்கள் விக்கெட்டுகளை இழந்ததால் அந்த சரிவிலிருந்து மீண்டு வர முடியவில்லை.

- Advertisement -

அதோடு பேட்ஸ்மேன்கள் பந்தை பார்த்து அடிக்க வேண்டும். கொஞ்சம் தவறினாலும் அது போன்ற பந்துகளில் நாம் ஆட்டமிழக்க தான் செய்வோம். அதற்கு என்ன செய்வது? இந்த தொடர் முழுவதுமே எங்களுக்கு அப்படித்தான் இருந்து வருகிறது. ஆனாலும் நாங்கள் ஒரு அணியாக இந்த தோல்வியிலிருந்து பல்வேறு விடயங்களை கற்றுக் கொண்டோம். நேஹல் வதேரா கடந்த ஆண்டும் சரி இந்த ஆண்டும் சரி மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார். இந்த ஆண்டு ஆரம்பத்தில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் தற்போது கிடைக்கும் வாய்ப்புகளில் சிறப்பாக செயல்படுகிறார் என்று பாண்டியா கூறினார்.

இதையும் படிங்க : எழுதி வெச்சுக்கோங்க.. இன்னைக்கு கிண்டலடிக்கும் ரசிகர்கள் 2024 டி20 உ.கோ தொடரில் அவரை பாராட்டுவாங்க.. வாசிம் ஜாபர்

இந்த பேட்டியில் பாண்டியா முதல் பந்திலேயே ஆட்டமிழந்தது பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் : கொஞ்சமும் வருத்தப்படாமல் பந்தை சரியாக அடிக்கவில்லை என்றால் அவுட்தான் ஆவோம் என்றும் அவர்மீது உள்ள தவறை பேசாமல் ஒட்டுமொத்த அணியும் இந்த சீசனில் அப்படிதான் ஆடி வருகிறது என்றும் கொஞ்சமும் வருத்தம் இல்லாமல் திமிராக பேசியுள்ளது ரசிகர்கள் மத்தியிலும் கண்டனத்தை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -